1/11/2011 12:18:29 PM
ராதாவின் மகள் கார்த்திகா. கே.வி.ஆனந்த் இயக்கும் 'கோ’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவர் கூறியது: எனது அம்மா பிரபல நடிகையாக இருந்தவர். நான் சினிமா வாசனையே படாமல் மும்பையில் வளர்ந்தேன். மேனேஜ்மென்ட் டிகிரி முடிப்பதில்தான் கவனமாக இருந்தேன். திடீரென்று நடிக்க வந்துவிட்டதால் படிப்பெல்லாம் அப்படியே நின்றுவிட்டது. நடிப்பில் முழு கவனம் செலுத்துகிறேன். 'கோÕ படத்தில் கே.வி.ஆனந்துடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. துப்பறியும் பத்திரிகை நிருபர் ரேணுகா என்ற பாத்திரத்தில் நடிக்கிறேன். போட்டோகிராபராக ஜீவா நடிக்கிறார். இதன் பாடல் காட்சி ஒன்று நார்வேயில் படமானது.
'ஸ்லம்டாக் மில்லியனர்’ பட இயக்குனர் டேனி பாயல் தனது படத்தில் நடிக்க அழைத்திருக்கிறார் என தகவல் வருகிறது. அது வெறும் புரளிதான். மலையாளத்தில் நான் நடித்த 'மகரமஞ்சு’ படத்தை பார்த்த டேனி பாயல், எனது நடிப்பை பாராட்டியதாக இயக்குனர் சந்தோஷ் சிவன் என்னிடம் தெரிவித்தார். எனது புதிய படங்கள் பற்றிய முடிவை அம்மாவிடமே விட்டிருக்கிறேன். அவர் 200 படங்கள் நடித்திருக்கிறார். இப்போதுள்ள போட்டியில் நான் 20 படம் கூட நடிப்பேனா என்பது தெரியாது. எனவே அவருடன் என்னை ஒப்பிடாதீர்கள்.
Post a Comment