1/11/2011 12:31:37 PM
'உயிரின் எடை 21 அயிரிÕ படம் பற்றி இயக்குனரும் ஹீரோவுமான இந்திரஜித் கூறியது: 1907ம் ஆண்டு அமெரிக்க விஞ்ஞானி மெக்டெகல் என்பவர், மரண தருவாயிலிருந்த 7 பேர்களின் நிலை பற்றி ஆராய்ச்சி செய்தார். அவர்கள் ஒவ்வொருவர் இறந்தபோதும் அவர்களின் ஒரிஜினல் எடையில் 21 கிராம் குறைந்திருந்தது. அந்த எடைதான் உயிரின் எடை என்று அவர் குறிப்பிட்டார். அதைக் குறிக்கும் வகையில் 'உயிரின் எடை 21 அயிரிÕ. ரவுடியிஸம் செய்பவர்கள், உயிர் பயம் இல்லாமல் மோதுகிறார்கள். அவர்களுக்கு உயிரின் அருமையை விளக்கும் கதை.
இதன் ஷூட்டிங் நாகர்கோவில் பேச்சிப்பாறை அணை பின்புறம் உள்ள காட்டுப் பகுதியான மோதிரமலை வன விலங்கு சரணாலயத்தில் நடத்தப்பட்டது. இங்கு 200 மலைவாழ் மக்கள் வாழ்கின்றனர். படப்பிடிப்பு குழுவினருடன் அங்கு சென்றதும், அவர்கள் துருவித் துருவி விசாரிக்க ஆரம்பித்துவிட்டனர். பிறகு ஷூட்டிங் நடத்த வந்திருக்கிறோம் என்று தெரிந்து சமாதானம் அடைந்தனர். மேலும் தங்களில் சிலரை நடிக்க வைக்க வேண்டும் என்றும் கண்டிஷன் போட்டனர். அதை ஏற்று சிலரை படத்தில் நடிக்க வைத்தோம். மாலை 6 மணிக்கு மேல் அந்த கிராமத்தில் யாரும் தங்கக் கூடாது என்பதால் நாங்கள் வாடகை வண்டியை எடுத்துக்கொண்டு நாகர்கோவில் வந்து தங்கினோம். மறுபடியும் காலையில் ஷூட்டிங்கிற்கு புறப்படுவோம். இதில் ஹீரோயினாக புதுமுகம் வினிதா நடிக்கிறார். இப்படத்தின் ரிலீசுக்கு முன் மோதிரமலை வாழ்மக்களுக்கு அப்பகுதியில் பிரத்யேகமாக தியேட்டர் வாடகைக்கு எடுத்து படத்தை திரையிட உள்ளோம்.
Post a Comment