‘ஆரண்ய காண்டம்‘ படத்துக்கு மறு ஆய்வுக்குழு 53 கட் கொடுத்துள்ளதால், டிரிபியூனலுக்கு செல்ல படக்குழு முடிவு செய்துள்ளது. எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள படம் ‘ஆரண்ய காண்டம்’. இதில் ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா, யாஷ்மின் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் முடிந்து தணிக்கைக்கு சென்றது. படத்தை பார்த்த தமிழக தணிக்கை அதிகாரிகள், படத்தில் வன்முறை அதிகமாக இருக்கிறது என்று சான்றிதழ் தர மறுத்துவிட்டனர். இதையடுத்து மறு ஆய்வுக்குழுவுக்கு படத்தை கொண்டு சென்றனர். படத்தை பார்த்த அவர்கள், 53 கட் கொடுத்துவிட்டு, ஏ சான்றிதழ் அளித்தனர். ‘இத்தனை கட் கொடுத்துவிட்டு ஏ சான்றிதழ் கொடுத்ததால் படக்குழுவினர் அதை வாங்க மறுத்துவிட்டனர். இதுபற்றி இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவிடம் கேட்டபோது, 1397967985 சர்வதேச தெற்காசிய திரைப்பட விழாவில் ஜூரி விருது வாங்கிய படம் இது. வசனங்களை மாற்ற வேண்டும் என்றும், வன்முறை அதிகமாக இருக்கிறது என்றும் 53 கட் கொடுத்தார்கள். இத்தனை கட் கொடுத்தால் படத்தின் கதையே மாறிவிடும். அத்தனை கட் கொடுத்துவிட்டு ‘ஏ’ சான்றிதழ்தான் தருவோம் என்கிறார்கள். இத்தனை கட் கொடுத்தபின் ஏ சான்றிதழை எப்படி ஏற்க முடியும்? அதனால் டிரிபியூனலுக்கு படத்தை அனுப்ப முடிவு செய்துள்ளோம்‘ என்றார்.
Source: Dinakaran
Post a Comment