நயன்தாராவுக்கு அம்மாவாக நடிக்க, முதலில் தயங்கினேன் என்று மனிஷா கொய்ராலா கூறினார். ‘எலெக்ட்ரா’ என்ற மலையாள படத்தில் நயன்தாராவுக்கு அம்மாவாக நடித்துள்ளார் மனிஷா கொய்ராலா. இதில் நடித்தது பற்றி அவர் கூறியதாவது: ஆரம்பத்தில் இந்த கேரக்டரில் நடிக்க தயக்கம் இருந்தது. ஏனென்றால் நயன்தாராவுக்கும் எனக்கும் அதிக வயது வித்தியாசம் இல்லை. சில வருடங்கள் முன்னும் பின்னும் இருக்கும். அதனால் இது வொர்க் அவுட் ஆகுமா என்பது சந்தேகமாக இருந்தது. ஆனால், இயக்குனர் ஷ்யாம் பிரசாத் நம்பிக்கை அளித்தார். அதன்பிறகே ஈடுபாட்டுடன் நடித்தேன். இதில் என் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. நயன்தாராவும் நானும் அதிகமான காட்சிகளில் ஒன்றாக நடிக்கவில்லை. இருந்தாலும் நயன்தாரா இனிமையானவர். இந்தப் படத்தில் நடித்தபோது நான் ஆச்சர்யப்பட்ட நடிகர், பிரகாஷ் ராஜ். எந்தவொரு விஷயத்தையும் மிகவும் இயல்பாக செய்துவிடுகிற சிறந்த நடிகர் என்பதை இந்த ஷூட்டிங்கில் உணர்ந்தேன். தமிழில் தனுஷுக்கு மாமியாராக நடித்துள்ள ‘மாப்பிள்ளை’ படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. இதில் காட்சிக்கு காட்சி காமெடி இருக்கும். ‘எலெக்ட்ரா’ எதார்த்தமான படம் என்றால் ‘மாப்பிள்ளை’ கமர்சியல் படம்.
Source: Dinakaran
Post a Comment