‘களவாணி’ படத்தை அடுத்து, ஷெராலி பிலிம்ஸ் சார்பில், நசீர் தயாரிக்கும் படம் ‘எத்தன்’. விமல், சனுஷா ஜோடியாக நடிக்கிறார்கள். படத்தை இயக்கும் எல்.சுரேஷ் கூறியதாவது: கடன் வாங்காமல் இங்கு யாரும் வாழ முடியாது என்பதுதான் கதையின் மையக்கரு. படித்துவிட்டு பிசினஸ் பண்ண வேண்டும் என்று நினைக்கிறார் ஹீரோ விமல். அவரது அப்பா, தன்னை போலவே மகன் அரசு வேலைப் பார்க்க வேண்டும் என நினைக்கிறார். இதிலிருந்து விடுபட்டு பிசினஸ் பண்ணுவதற்காக பலரிடம் கடன் வாங்கி நஷ்டமடைகிறார் விமல். இவர் செய்யும் தவறால் ஹீரோயின் சனுஷாவும் பாதிக்கப்படுகிறார். பிறகு எப்படி இவர்கள் மீள்கிறார்கள் என்பது கதை. விமல் இதுவரை நடித்த யதார்த்தமான படங்களின் சாயலில் இதுவும் இருக்கும். சனுஷாவின் நடிப்பும் பேசப்படும் விதமாக இருக்கும். இந்தப் படத்துக்காக இசை அமைப்பாளர் தாஜ்நூர், வித்தியாசமான பாடல்களை அமைத்துள்ளார். கடன் வாங்குவது பற்றியும் கடன் வாங்கினால் ஏற்படும் அவஸ்தை பற்றியுமான பாடல் புதுமையாக இருக்கும். அதே போல மிமிக்ரி பாடல் ஒன்றும் இதில் இடம்பெற்றுள்ளது. அதுவும் வரவேற்கத்தக்கதாக இருக்கும். படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. டப்பிங் பணி நடந்து வருகிறது. விரைவில் பாடல் வெளியீடு இருக்கும். இவ்வாறு சுரேஷ் கூறினார்.
Post a Comment