3/1/2011 11:00:00 AM
பெங்களூரில் நடக்கவிருந்த மலையாள நட்சத்திரங்களின் கலைவிழா உலக கோப்பை கிரிக்கெட் போட்டியால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கோழிக்கோடில் இந்நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மம்மூட்டி, மோகன்லால் உள்பட அனைத்து ஹீரோ, ஹீரோயின்கள் இதில் கலந்து கொள்கின்றனர். இப்போட்டியில் நடனம் ஆட வேண்டும் என நயன்தாராவிடம் கேட்டிருந்தனர். முதலில் ஒப்புக்கொண்டிருந்த அவர், திடீரென்று பின்வாங்கிவிட்டாராம். 'விரைவில் பிரபுதேவாவுடன் திருமணம் நடக்க உள்ளதால் மேடை நிகழ்ச்சிகளில் தோன்றுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்Õ என கூறியதாக திரையுலக பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
அதே நேரம் மீரா ஜாஸ்மினும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. மலையாள படங்களில் நடித்து வரும் அவர், இதுவரை மலையை£ள நடிகர் சங்கம் நடத்திய நிகழ்ச்சிகளில் பங்கேற்றதில்லை. இதனால் அவர் மீது கோபமாக இருந்த நிர்வாகிகள், அவரை மலையாள படங்களில் 1 வருடம் நடிக்க மறைமுக தடை விதித்திருந்தனர். பின்னர் இந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனாலும் சங்கத்தினர் மீது மீரா ஜாஸ்மின் கோபம் அப்படியேதான் இருக்கிறதாம். இந்நிலையில் நடிகர் சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் மீரா ஜாஸ்மின் பங்கேற்க மாட்டார் என்று அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment