‘கோ’ படத்தின் அரசியல் டச்!
3/1/2011 11:58:26 AM
3/1/2011 11:58:26 AM
கோ படத்தில் அரசியலை கொஞ்சம் ஆழமாகவே தொட்டிருக்கிறாராம் கே.வி.ஆனந்த், கட்சி அரசியல்வாதிகள் யாருக்கும் கோபம் வரவழைக்காத விதத்தில். பத்திரிகையில் புகைப்படக் கலைஞனாக இருக்கும் ஜீவா தனது அரசியல் தொடர்புகளை வைத்து தனது நண்பன் அஜ்மலுக்கு அரசியலில் நுழைய ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறார். சிறிது நாளில் அஜ்மல் ஜீவாவின் எதிர்பார்ப்புக்கு மாறாக மோசமான அரசியல்வாதியாக உருவெடுக்கிறார். அவரை எப்படி ஜீவா செல்லா காசாக்கிறார் என்பதுதான் கோ படத்தின் கதை என்கிறது நம்பத்தகுந்த வட்டாரம். கோ கோடை விடுமுறைக்கு திரைக்கு வருகிறது.
Source: Dinakaran
Post a Comment