3/1/2011 11:50:44 AM
பொதுவாக விஜய் நடித்த படங்கள் தெலுங்கில் டப் செய்யப்படுவது வழக்கம். விஜய்யிக்கு ஆந்திராவில் தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு, அதே போல் விஷாலுக்கும் ஆந்திராவில் ரசிகர் கூட்டம் உண்டு. விஷாலின் திமிரு, சண்டைக்கோழி படங்கள் தமிழைவிட தெலுங்கில்தான் மிகப் பிரமாதமாக ஓடின. ஏப்ரலில் வெளியாகும் அவன் இவனும் தெலுங்கில் வெளியாகிறது. அதற்குமுன் அதாவது மார்ச் 5ஆம் தேதி விஷாலின் தீராத விளையாட்டுப் பிள்ளையை கில்லாடி என்ற பெயரில் தெலுங்கில் வெளியிடுகின்றனர். இதேநாள் விஜய்யின் வேட்டைக்காரன் படத்தை புலி வேட்டா என்ற பெயரில் தெலுங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இதில் யாருடைய படம் வசூலை அள்ளும் என்பது பொருதிருந்ததான் பார்க்க வேண்டும்.
Post a Comment