3/1/2011 12:18:12 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
மாதேச இயக்குனரு சான்டல்வுட் ஹீரோவை கவர்ந்துட்டாராம்… கவர்ந்துட்டாராம்… சிவமான அந்த ஹீரோவோட படத்தை வேற இயக்குனரு இயக்குறதா முடிவாச்சாம். ஆனா இடையில நுழைஞ்ச மாதேச இயக்கம், அந்த வாய்ப்பை கேட்ச் பண்ணிட்டாராம்… பண்ணிட்டாராம்… இதனால சான்டல்வுட் இயக்கம் நொந்து நூடுல்சாகி புலம்புறாராம்… புலம்புறாராம்…
புதுவரவுகளின் போட்டியை ராய் நடிகை சாமர்த்தியமா சமாளிக்கிறாராம்… சமாளிக்கிறாராம்… இளம் ஹீரோக்கள் மேலே வச்ச பார்வையை, இப்போ மூத்த ஹீரோக்கள் பக்கம் திருப்பி இருக்க¤றாராம்… இருக்கிறாராம்… அதுக்கு நல்ல பலனும் க¤டைச்சிருக்காம். மல்லுவுட்ல பெரும்பாலும் தலைமுடி நரைச்ச ஹீரோக்கள்தான் பல படங்கள்ல நடிக்கிறாங்க. அவங்களோட படத்துக்கு முதல் சாய்ஸ் ராய் நடிகைதானாம்… நடிகைதானாம்…
பிரெண்ட் படத்துல கெஸ்ட் ரோல் பண்றது தெரிஞ்சுகிட்டு, அனுய நடிகைக்கு அந்த மாதிரி ரோல்கள் வருதாம்… வருதாம்… அதுல நடிக்க பல காரணங்கள் இருக்கு. அந்த மாதிரியெல்லாம் மத்த படங்கள்ல நடிக்க முடியாதுன்னு நடிகை மறுக்கிறாராம்… மறுக்கிறாராம்…
Post a Comment