4/22/2011 12:24:21 PM
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் கே வி ஆனந்த் இயக்கத்தில் அடுத்து சூர்யா நடிக்கும் படம் 'மாற்றான்'. படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க பெரும் போட்டியே நடக்கிறதாம் இளம் நாயகிகளுக்குள். சூர்யாவுக்கு ஜோடியாக முதலில் பேசப்பட்டவர் மேக்னா ராஜ். ஆனால் ஹீரோவின் பார்வை அவர் மீது படவில்லையாம். அதனால் தப்ஸி, சமந்தா மற்றும் காஜல் அகர்வாலின் புகைப்படங்களைக் காட்டினார்களாம். இதுமட்டும் இல்லாமல், தீபிகா படுகோனை சூர்யாவுக்கு ஜோடியாக முயிற்சிகள் எடுக்கபட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நான் சூப்பர் ஸ்டாரின் ஜோடி இப்போ. சம்பளம் 6 கோடி என தீபிகா படுகோன் கைகளை விரிக்க, தலை தெறிக்க ஓடிவந்திருக்கிறார்கள் படக்குழுவினர். இப்போது காஜல் அகர்வால், டாப்ஸியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment