சஞ்சய் தத்துக்கு பிடிவாரன்ட்!

|

Tags:


மும்பை: கடந்த மக்களவைத் தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக நடிகர் சஞ்சய் தத்துக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது மும்பை நீதிமன்றம்.

கடந்த 2009 தேர்தலின்போது, சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலராக இருந்த சஞ்சய் தத், அர்ஷத் ஜமால் என்ற தங்கள் கட்சி வேட்பாளருக்கு பிரசாசாரம் செய்தபோது தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதற்காக பல முறை நீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவே இல்லை.

எனவே இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கிருஷ்ணகுமார் சஞ்சய் தத்துக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தார். சமாஜ்வாடி வேட்பாளரான அர்ஷத் ஜமாலுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
 

Post a Comment