5/6/2011 4:58:09 PM
பிஜேபி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய சிம்பு ரசிகர்கள் இன்று கைது செய்யப்பட்டனர். சிம்பு நடித்த 'வானம்' என்ற படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இதில், இந்துக்களை புண்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாகக் கூறி கடந்த 2 நாட்களாக தாம்பரம் பகுதி பிஜேபியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். படத்தின் கட் அவுட்டிற்கு மர்ம ஆசாமிகள் சிலர் செருப்பு மாலை போட்டதாக தெரிகிறது. இதனால், சிம்பு ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். தென்சென்னை மாவட்ட சிம்பு ரசிகர் மன்ற தலைவர் செந்தில் தலைமையில் தி.நகரில் உள்ள மாநில பிஜேபி தலைமை அலுவலகம் முன்பு இன்று காலை சிம்பு ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து, சிம்பு ரசிகர்கள் 15 பேரை கைது செய்தனர்.
Post a Comment