5/6/2011 2:57:15 PM
3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த கதையாக உருவாகிறது ‘பாலை’. ‘கற்றது தமிழ்’ ராமின் உதவியாளர் செந்தமிழன் இயக்குகிறார். ஹீரோவாக புதுமுகம் சுனில் நடிக்கிறார். முற்றிலும் புதிய கலைஞர்கள் பணியாற்றும் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ஷம்மு. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை என்பதால் அதற்கேற்ப ஷம்முவின் கெட்டப், பாடி லாங்வேஜ் வித்தியாசமாக இருக்கும் என்கிறது பட வட்டாரம். பெரும்பாலான காட்சிகளுக்காக காடுகளில் இதன் ஷூட்டிங் நடக்கிறது. தஞ்சை அருகே உள்ள பகுதிகளிலும் சத்தியமங்கலம், கொடைக்கானல், மைசூர் காட்டுப் பகுதிகளில் ஷூட்டிங் நடத்த உள்ளனர். “காஞ்சிவரம் படத்தில் எனது நடிப்பு பேசப்பட்டது. ‘மயிலு’ ரிலீசானால் மீண்டும் எனது திறமை வெளிப்படும் என காத்திருந்தேன். அப்படம் தள்ளிப்போயுள்ளது. இப்போது ‘பாலை’ படத்தில் சவாலான வேடம் கிடைத்திருக்கிறது. இதில் எனது நடிப்பாற்றல் ரசிகர்களுக்கு தெரிய வரும்” என்றார் ஷம்மு.
Post a Comment