சிரஞ்சீவியின் ஓய்வு: ட்விட்டரில் அசிங்கமாக திட்டிய ராம் கோபால் வர்மா


ஹைதராபாத்: நடிகர் சிரஞ்சீவியின் ஓய்வு குறி்த்து இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் அசிங்கமாக திட்டியுள்ளார்.

நடிகர் சிரஞ்சீவி சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது அவரது ரசிகர்கள் மனதில் இடிபோல் விழுந்துள்ளது. இதில் சிரஞ்சீவியின் தீவிர ரசிகரான இயக்குனர் ராம் கோபால் வர்மாவும் இதில் அடக்கம். என்ன... மற்ற ரசிகர்கள் 'என்ன தலைவா இப்படி சொல்லிட்டியே?' என்று வருத்தப்படுகின்றனர். ஆனால் ராம் கோபால் வர்மாவோஅசிங்கமாக தி்ட்டியுள்ளார்.

இது குறித்து ராம் கோபால் வர்மா ட்விட்டரில் கூறியுள்ளதாவது:

நான் ஆந்திர மக்கள் சிரஞ்சீவியின் படத்தை பார்க்க டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பதைத்தான் பார்க்க விரும்புகிறேன். மாறாக அவர் மக்களிடம் (கெட்ட வார்த்தை) ஓட்டு கேட்டு நிற்பதை பார்க்க விரும்பவில்லை.

நான் சிரஞ்சீவியை அசிங்கமான வார்த்தையால் திட்டினேன். ஒப்புக் கொள்கிறேன். ஏனென்றால் நான் ஆந்திர மக்களை விட அவரை அதிகம் நேசிக்கிறேன். ஆந்திர மக்கள் சிரஞ்சீவியை முதல்வராக்காதது அவர்களது துரதிர்ஷ்டம். அத்தகைய மக்கள் ஓட்டுபோடவில்லை என்றால் அது அவரது அதிர்ஷ்டம், என்று கூறியுள்ளார்.

ராம் கோபால் வர்மா அசிங்கமான வார்த்தைகளை டுவிட்டரில் பயன்படுத்துவது இது முதல் முறையன்று. ஏற்கனவே புத்தா படத்தில் அமிதாபின் நடிப்பை பாராட்டவும் அவர் கெட்ட வார்த்தையைத் தான் பயன்படுத்தினார்.

சர்ச்சையின் மறுபெயர் தான் ராம் கோபால் வர்மாவோ!
 

கார்த்தி கல்யாணம்.... களைகட்டும் காசிகவுண்டன் புதூர்!


ஒரு ஊரே திருமணத்துக்கு தயாராகிறது... நண்டு சிண்டு பொண்டு பொடிசு என ஒருவர் பாக்கியில்லாமல் 'நான் கல்யாணத்துக்கு போறேனுங்...' என்று மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஊர் காசிகவுண்டன் புதூர். கோவை சூலூருக்குப் பக்கத்தில் உள்ள கிராமம். சிவகுமாரின் இளைய மகன் கார்த்தி - ரஞ்சனிக்கு நடக்கும் திருமணம்தான் இந்த கிராமத்தினரின் மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாக மாறியுள்ளது. இங்குள்ள 250 குடும்பங்களும் இதனை தங்கள் வீட்டு திருமணமாகவே நினைத்து, தயாராகி வருகிறார்கள்.

நடிகர் சிவகுமாரின் சொந்த ஊர்தான் இந்த காசிகவுண்டன் புதூர். இங்கு இன்னும் அவரது பழைய வீடு அந்த கிராமத்துக்கே உரிய மணம் மாறாமல் அப்படியே உள்ளது. சிவகுமாரின் சொந்த அக்கா உள்ளிட்ட உறவுக்காரர்கள் அத்தனைபேரும் கிராமத்தில் வசிக்கின்றனர்.

கார்த்தி-ரஞ்சனி திருமணம் வருகிற 3-ந் தேதி கோவையில் கோலாகலமாக நடைபெற உள்ளது. கோவை கொடிசியா அரங்கில் நடைபெறும் இந்த திருமணத்துக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

கார்த்தியின் அண்ணன் சூர்யா-ஜோதிகா திருமணத்தின் போது குறிப்பிட்டவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர். உறவினர்கள் அனைவரையும் மகன் திருமணத்திற்கு அழைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் சிவகுமாருக்கு.

அதனை போக்கும் வகையில் கார்த்தி-ரஞ்சனி திருமணத்திற்கு உறவினர்கள் அனைவரையும் அழைத்து விருந்து படைக்க முடிவு செய்து, அத்தனை பேருக்கும் நேரில் போய் அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார்.

ஒவ்வொரு உறவினரிடமும், "இது உங்கள் வீட்டு திருமணம். கண்டிப்பாக திருமணத்துக்கு வந்து மணமக்களை ஆசீர்வதிக்க வேண்டும்" என்று அன்பாக அழைப்பு விடுத்தனர்.

"நீங்கள் சொன்னாலும் சரி, சொல்லாவிட்டாலும் சரி, இது எங்கள் வீட்டு திருமணம்தான். கண்டிப்பாக வருவோம் என்று கூறியுள்ளனர். திருமணத்திற்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் அனைத்து ஏற்பாடுகளும் ஜரூராக நடக்கின்றன.

சிவகுமாரின் பாரம்பரிய குல வழக்கப்படி திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்திற்கு முந்தின நாள் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் கோவைக்கு வந்து தங்குகிறார்கள். திருமணத்தன்று காலை சிவகுமார் குடும்பத்தினர் காசி கவுண்டன்புதூரில் உள்ள தங்களது சொந்த வீட்டுக்கு செல்கின்றனர்.

அதைத் தொடர்ந்து திருமண சடங்குகள் நடக்கின்றன. பின்னர் கார்த்தி ரஞ்சனிக்கு தாலி கட்டுகிறார்.

திருமணத்தை சொந்த ஊரில் நடத்துவது குறித்து கார்த்தி கூறுகையில், "சென்னையில் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்றுதான் முதலில் நினைத்தோம். அப்புறம் ஒரு ஊரையே சென்னைக்கு அழைத்து வருவதில் உள்ள சிரமம், டிராபிக் ஜாம் மற்றும் சில இடையூறுகள் என எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தோம்.

நமக்காக ஏன் ஒரு ஊரையே சிரமப்பட வைக்கணும். அதைவிட அந்த ஊரிலேயே நடத்திவிட்டால் என்ன என்று எண்ணிதான் கோவையில் திருமண விழா நடத்த ஏற்பாடுகள் செய்தோம். கல்யாணத்துக்காக ஒரு மாதம் படப்பிடிப்புக்கு லீவு போட்டுள்ளேன். ஒரு மாதம் கழித்து சகுனி ஷுட்டிங் ஆரம்பிக்கும்.

சிறு வயதில் அடிக்கடி குடும்பத்துடன் கோவை சென்று வருவோம். அப்போதெல்லாம் விவசாயம் பிரமாதமாக நடக்கும். இப்போது எல்லாருமே வேலை விஷயமாக ஊரை காலி செய்துவிட்டு வெளியூருக்கு வந்துவிட்டனர். விவசாயமும் அங்கு இல்லாமல் போனது.

இருந்தாலும் கோவையின் குளிரும், பசுமையும் இங்கு அப்படியே உள்ளது. ஒரு ஊருக்கே ஏ.சி. போட்ட மாதிரி அப்படி ஒரு ஜில் க்ளைமேட்... அங்கு உள்ளது," என்றார்.

பிரமாண்ட ஏற்பாடுகள்...

கார்த்தி திருமணம் நடைபெற உள்ள கொடிசியா அரங்கம் வெகு விசேஷமாக அலங்கரிக்கப்பட்டு வருகிறது. வேறு உலகத்துக்கே வந்தது போன்ற நினைப்பை பார்ப்பவருக்கு உண்டாக்கும் விதத்தில் அலங்கார வேலைகள் கடந்த 1 வாரமாக நடந்து வருகின்றன.

மணமகன்- மணமகளுக்கு தனித்தனி அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த திருமணத்தில் சைவ சாப்பாடு மட்டுமே பரிமாறப்பட உள்ளது.

இந்த உணவு 2 வகைகளில் பரிமாறப்படுகிறது. வழக்கமான கல்யாண பந்தி மற்றும் பஃபே முறை என இரு விதங்களில் உணவுகள் பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பட்டினி சாத விருந்து...

திருமணத்துக்கு முந்தின நாள் அதாவது சனிக்கிழமை மதியம் 1 மணிக்கு பாரம்பரிய முறைப்படி பட்டினி சாத விருந்து நடைபெறுகிறது.

இதில் நடிகர் சிவகுமார் உறவினர்கள் கலந்து கொள்கிறார்கள். 3 நாட்கள் நடைபெறும் திருமண விழாவில் முதல் நாள் நடைபெறுவதுதான் இந்த பட்டினி சாத விருந்து. அதாவது மணமக்களுக்கு அளவு குறைவான சத்தான உணவு வழங்கப்படும். மணமக்களுடன் மற்றவர்களும் சாப்பிடலாம். இதில் கொஞ்சம் சாதத்துடன் (சோறு) பழம், பழச்சாறு இடம் பெறும். வயிற்றுக்கு முழுச் சாப்பாடு சாப்பிடக் கூடாது. இது முகூர்த்தம் முடியும் வரை தொடரும்.

ரசிகர்களுக்கும்....

இந்த சிக்கன சாப்பாட்டைத்தான் பட்டினி சாத விருந்து என்கிறார்கள். முன்னதாக காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் பந்தக் கால் நடப்படுகிறது. அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை வரவேற்பு நிகழ்ச்சியும், 9.10 மணிக்கு இணை சீர் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ரசிகர் மன்றத்தினருக்கு விருந்து அளிக்கிறார் கார்த்தி. இதற்காக அனைத்து மன்றத்தினருக்கும் தனித்தனியாக அழைப்பு அனுப்பியுள்ளார்.
 

மீண்டும் மணல் கயிறு - எஸ்வி சேகர்


தனது பிரபல 'மணல் கயிறு' படத்தின் இரண்டாம் பாகத்தை, மகன் அஸ்வினை வைத்து எடுக்கப் போவதாக நடிகர் எஸ் வி சேகர் கூறினார்.

விசு எழுதி இயக்கிய சூப்பர் ஹிட் படம் மணல் கயிறு. 1982-ல் வெளியான இந்தப் படம் விசுவின் வசனங்கள் மற்றும் எஸ்வி சேகர், கிஷ்மூ, மனோரமா போன்றவர்களின் நடிப்புக்காக பெரிதும் பேசப்பட்டது. தமிழ் சினிமாவில் விசுவுக்கென்று ஒரு இடத்தை இந்தப் படம் பெற்றுத்தந்தது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்கப் போவதாக எஸ்வி சேகர் நீண்ட நாட்களாகக் கூறி வந்தார்.

இப்போது இதுபற்றி அறிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபியைச் சேர்ந்த ஸ்ருதிக்கும் சேகரின் மகன் அஸ்வினுக்கும் விரைவில் திருமணம் நடக்கிறது. இதையொட்டி சமீபத்தில் ஈரோடு கூடுதுறைக்கு மகன் மற்றும் வருங்கால மருமகளுடன் வந்த அவர் நிருபர்களிடும் கூறுகையில், "அஸ்வின் நடித்துள்ள இரண்டாவது படம், 'நினைவில் நின்றாய்' விரைவில் வெளிவருகிறது. இந்தப் படம் வெற்றி பெறவும், அஸ்வின் - ஸ்ருதி திருமணம் சிறப்பாக நடைபெறவும் பவானி கூடுதுறைக்கு வந்து வழிபட்டேன்.

நினைவில் நின்றாய் திரைப்படம் வித்தியாசமான கதை. கருணைக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத் திரைப்படத்தில், ஒரு இடத்தில்கூட தணிக்கைக் குழுவினர் காட்சிகளைத் துண்டிக்கவில்லை.

'மணல் கயிறு' இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. 1982 ல் இப் படத்தில் நடித்த விசு உள்பட அனைவரும் நடிக்கின்றனர்," என்றார்.

மணல் கயிறு ஒரிஜினல் படத்தில் நடித்த விசுவின் தம்பியும் படத்தின் இணை இயக்குநருமான கிஷ்மூ இப்போது உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

கமலை 'ஏற்பாரா' தீபிகா?


விஸ்வரூபத்தில் சோனாக்ஷி இல்லை என்றாகிவிட்டதால், அவருக்குப் பதில் அதே அந்தஸ்துள்ள நடிகைக்கு வலைவீசி வருகிறார்கள்.

சோனாக்ஷிக்கு பதில் இப்போது 'இயக்குநர் கமல்ஹாஸன்' தேதி கேட்டிருப்பது தீபிகா படுகோனேவிடம் என்று கூறப்படுகிறது.

தீபிகா ஏற்கெனவே இந்தியாவின் காஸ்ட்லி படங்களுள் ஒன்றான ரஜினியின் ராணாவில் ஒப்பந்தமாகியுள்ளார். ரஜினியுடம் உடல் நலம் தேறி மீண்டும் படப்பிடிப்புக்குத் தயாராகி வரும் சூழலில், கமல் பட வாய்ப்பும் வந்திருப்பது தீபிகாவை திகைக்க வைத்துள்ளது.

'கமல் வாய்ப்பை ஏற்றால் கைவசம் உள்ள இந்திப் படங்களை இழக்க வேண்டி வரும். ஆனால் ஒரே நேரத்தில் ரஜினி, கமல் என இரு பெரும் சிகரங்களோடு நடிக்கும் வாய்ப்பையும் இழக்க மனமில்லை, என்ன செய்யலாம்?' என யோசித்து வருகிறாராம் தீபிகா.

ராணா படத்துக்கு முதலில் தேர்வானவர் சோனாக்ஷி. ஆனால் நண்பரின் மகள் என்பதால் ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் ரஜினி. அதன்பிறகுதான் தீபிகா வந்தார்.

விஸ்வரூபத்தில் முதலில் ஒப்பந்தம் போட்ட சோனாக்ஷி இப்போது விலகிவிட்டதால், இந்த வாய்ப்பும் தீபிகாவுக்கு வந்திருக்கிறது. ஏற்பாரா?
 

நட்சத்திர திருமணங்கள்.... கோலிவுட்டுக்கு அறிவிக்கப்படாத லீவு!


சென்னை: நடிகர் கார்த்தி மற்றும் இயக்குனர் செல்வராகவனின் திருமணம் ஒரே நாளில் ஜூலை 3-ம் தேதி நடக்கிறது.

கார்த்தி - ரஞ்சனி திருமணம் கோவையிலும், செல்வராகவன் - கீதாஞ்சலி திருமணம் சென்னையிலும் நடக்கிறது.

இரண்டு திருமணங்களுமே முக்கியம் என்பதால், எந்த திருமணத்துக்கு யார் யார் போவது என இப்போதே திட்டமிட்டு வருகின்றனர் திரையுலகப் பிரமுகர்கள்.

கார்த்தி - ரஞ்சனியின் திருமணத்துக்கு சீனியர் நடிகர் நடிகைகள் அனைவருமே கிளம்பிச் செல்கிறார்கள். கமல் உள்ளிட்ட நடிகர்கள் கோவை சென்று திருமணத்துக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள் என்று தெரிகிறது.

அதேநேரம், செல்வராகவன் திருமணம் சென்னையிலேயே நடப்பதால், இங்குள்ள நட்சத்திரங்கள் அனைவருமே அதில் கலந்து கொள்கிறார்கள்.

இதனால் ஜூலை 3-ம் தேதி கோடம்பாக்கத்துக்கே அறிவிக்கப்படாத விடுமுறை தினமாக மாறியுள்ளது. அன்றைய தினம் அனைத்துப் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் இதனை ஒரு அறிவிப்பாக வெளியிடவில்லை திரையுலக சங்கங்கள்.

திருமணம்தான் ஒரே நாள்... ஆனால் வரவேற்பு நிகழ்ச்சி வெவ்வேறு தினங்களில் வைக்கப்பட்டுள்ளது.

செல்வராகவனின் திருமண வரவேற்பு ஜூலை 4-ம் தேதி மேயர் ராமநாதன் செட்டியார் ஹாலில் நடக்கிறது. கார்த்தி-ரஞ்சனி திருமண வரவேற்பு ஜூலை 7-ம் தேதி ஹோட்டல் லீ ராயல் மெரிடியனில் நடக்கிறது.
 

பிரபு தேவா - ரம்லத் விவாகரத்து வழக்கு தள்ளி வைப்பு!


நேரில் ஆஜராகாததால் பிரபு தேவா - ரம்லத் விவாகரத்து வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.

நடிகர் பிரபு தேவா, அவரது மனைவி ரமலத் ஆகியோர் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். இவ் வழக்கு இன்று முதன்மை குடும்பநல நீதிமன்றத்தில் நீதிபதி ராஜா சொக்கலிங்கம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இருவரும் நேரில் ஆஜராக முடியாததற்காக காரணம் தெரிவித்து மனு தாக்கல் செய்திருந்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி 10-ந் தேதிக்கு விசாணையை தள்ளி வைத்தார்.

ஜூலை மாத இறுதிக்குள் இந்த வழக்கில் விவாகரத்து வழங்கப்பட்டு விடும் என்று தெரிகிறது. இதற்காக, ரம்லத்துக்கு தருவதாக ஒப்புக் கொண்ட செட்டில்மெண்டை முழுவதுமாக பிரபு தேவா கொடுத்துவிட்டதாகத் தெரிகிறது.
 

இன்று லண்டனில் மைக்கேல் ஜாக்சனுடன் டூயட் பாடும் ஜானட் ஜாக்சன்


நியூயார்க்: ஜானட் ஜாக்சன் தனது மறைந்த சகோதரர் மைக்கேல் ஜாக்சனுடன் சேர்ந்து இன்றிரவு டூயட் பாடவுள்ளார்.

மைக்கேல் ஜாக்சனின் தங்கை பாடகி ஜானட் ஜாக்சன். தனது மறைந்த அண்ணனுடன் சேர்ந்து ஸ்கிரீம் என்ற டூயட் பாடலை பாடவிருக்கிறார் ஜானட். இது கதையல்ல. இறந்தவர் எப்படி வந்து பாடுவார் என்று தானே நினைக்கிறீர்கள்?

வெர்ச்சுவல் ஸ்கிரீன் மூலம் மைக்கேல் ஜாக்சன் திரையில் தோன்றி மக்களை மகிழ்விக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சி இன்று இரவு லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் நடக்கிறது.

இது குறித்து ஜானட் கூறியதாவது,

எனது அண்ணனின் குரலைக் கேட்கும்போதெல்லாம் அவர் என் அருகில் இருப்பது போன்று உள்ளது. அவரின் ஸ்கிரீம் பாட்டைக் கேட்கையில் நான் எனக்குள் சிரித்துக் கொள்வேன், என்றார்.
 

வேங்கை... தனுஷுக்கு சிக்கல் தீர்ந்தது!


வேங்கை படத் தலைப்பை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை விலக்கிக் கொண்ட உயர்நீதிமன்றம், தனுஷ் நடிக்கும் படத்துக்கு அந்தத் தலைப்பை பயன்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது.

தனுஷ் - தமன்னா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வேங்கை. விஜயா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட போதே, வேங்கை என்ற தலைப்பில் இன்னொரு படம் உருவாவது குறித்த அறிவிப்பும் வெளியானது. ஏக சக்ரா மீடியா எனும் நிறுவனத்தின் கலைச்செல்வன் இந்தத் தலைப்பை ஹரிக்கு முன்பே பதிவு செய்து வைத்திருந்ததாகக் கூறி, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார்.

பின்னர் இந்த விவகாரத்தை பேசி முடித்துவிட்டதாக ஹரி தரப்பில் கூறி, படப்பிடிப்பைத் தொடர்ந்தனர்.

இப்போது வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது வேங்கை. இந்த நிலையில் மீண்டும் இந்த தலைப்புக்கு உரிமைகோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கலைச்செல்வன். விசாரித்த நீதிபதிகள், ஒரு வார காலம் இந்தத் தலைப்பைப் பயன்படுத்த ஹரி மற்றும் தயாரிப்பாளருக்கு தடை விதித்தனர்.

இந்த நிலையில், இந்த வழக்கில் தீர்ப்பு கூறிய உயர்நீதிமன்றம், வேங்கை தலைப்பைப் பயன்படுத்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கு எந்தத் தடையும் இல்லை என அறிவித்துவிட்டது.
 

விண்ணைத் தாண்டி வருவாயா -2 எடுக்கும் திட்டமில்லை! - கவுதம் மேனன்


விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் எதுவும் இல்லை. இதுகுறித்து சும்மா பேசிக் கொண்டிருந்தோம். அது செய்தியாகிவிட்டது, என்று இயக்குநர் கவுதம் மேனன் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு - த்ரிஷா நடிப்பில் வந்த விண்ணைத் தாண்டி வருவாயா படம் பெரும் வெற்றியடைந்தது.

இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை கவுதம் மேனன் எடுப்பார் என்றும் அதில் சிம்பு நடிப்பார் என்றும் கூறப்பட்டது. நாயகியாக எமி ஜாக்ஸன் நடிப்பார் என்று தெரிவித்திருந்தனர்.

இந்த செய்திக்கு இப்போது மறுப்பு தெரிவித்துள்ளார் கவுதம் மேனன். தனது பிஆர்ஓ மூலம் அவர் விடுத்துள்ள அறிக்கையில், "விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா என நாங்கள் ஆலோசித்து வந்தோம். அது ஒரு ஐடியாதான். முடிவல்ல. ஆனால் அதற்குள் செய்தி வந்துவிட்டது.

நிச்சயம் சிம்புவுடன் இணைந்து ஒரு படம் பண்ணும் திட்டம் உள்ளது. 2012 ஜூனில் இந்தப் படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளேன். அவருடன் பணியாற்றுவது சுவாரஸ்யமான அனுபவம். இந்தப்படம் குறித்து இருவரும் பேசிக் கொண்டுள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.
 

தாய்மையால் ஐஸ்வர்யாவின் அழகு மேலும் பல மடங்கு அதிகரிக்கும்-சுஷ்மிதா சென்


மிகவும் அழகான பெண் ஐஸ்வர்யா ராய். இப்போது தாய்மயடைந்திருப்பதால் அவரது அழகு மேலும் பல மடங்கு கூடவே செய்யும். அழகான தாயாக ஐஸ்வர்யா விளங்குவார் என்று கூறியுள்ளார் சுஷ்மிதா சென்.

ஐஸ்வர்யாவும், சுஷ்மிதாவும் சம காலத்து அழகிகள். இருவருமே சர்வதேச அளவில் உலக அழகிப் பட்டங்களை தட்டிச் சென்றவர்கள். 1994ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை முதலில் சுஷ்மிதா வெல்ல, அதே ஆண்டில் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை ஐஸ்வர்யா அள்ள, இந்தியாவுக்கு இரட்டை சந்தோஷமாகியது. அழகிய இந்தியாவுக்கு இருவருமே இரு கண்கள் போன்றவர்கள்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் தாய்மையடைந்திருப்பது குறித்தும், இதன் காரணமாக அவரை ஹீரோயின் படத்திலிருந்து நிறுத்தி வைக்கும் முடிவு குறித்தும் சுஷ்மிதா கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுஷ்மிதா கூறுகையில், ஐஸ்வர்யா மிகவும் அழகான பெண். நமது நாட்டுக்கு நிறைய பெருமைகளைத் தேடிக் கொடுத்தவர். நாங்கள் இருவருமே சர்வதேச அளவில் வெற்றி பெற்றவர்கள். ஐஸ்வர்யா ராய் ஒரு அழகான தாயாக விளங்குவார். தாய்மையால் அவரது அழகு மேலும் பல மடங்கு கூடும் என்பதில் சந்தேகமில்லை.

இயற்கையாகவோ அல்லது மன ரீதியாகவோ நீங்கள் தாய்மை உணர்வை உணரும்போது, நீங்கள் புதிய வாழ்க்கை அத்தியாயத்தில் புகும் அனுபவத்தைப் பெறுவீர்கள். எனக்கு அந்த உணர்வு நிச்சயம் உண்டு. இப்போது ஐஸ்வர்யாவும் அந்த தாய்மை உணர்வை அனுபவித்து வருகிறார்.

ஐஸ்வர்யாவுக்காக நான் சந்தோஷப்படுகிறேன், அபிஷேக், அவரது குடும்பத்தினர் அனைவரையும் வாழ்த்துகிறேன். கடவுள் ஐஸ்வர்யாவின் குழ்நதையை ஆசிர்வதிக்கட்டும் என்றார்.

சில தயாரிப்பாளர்கள் ஒரு படத்தில் ஒப்பந்தமாகும் நடிகைகள் அதை முடித்துக் கொடுக்கும் வரை கர்ப்பமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நிபந்தனையை ஒப்பந்தத்தில் சேர்க்கவுள்ளதாக கூறப்படுவது குறித்த கேள்வியைக் கேட்டதும் பொங்கி விட்டார் சுஷ்மிதா.

அப்படி யாராவது என்னிடம் வந்து கூறினால், அந்த தயாரிப்பாளரை முதலில் எழுந்து போங்கள் என்று கூறி விடுவேன். நான் ஒரு தொழில் முறையிலான நடிகை என்பதை நீங்கள் அங்கீகரிக்காவிட்டால் என்னிடம் வரக் கூடாது. நான் ஒரு தொழில்ரீதியான நடிகை என்பதில் நம்பிக்கை வைத்தால் எனது தொழில் பக்தியை சந்தேகப்படக் கூடாது, கேள்வி கேட்கக் கூடாது, நிபந்தனை போடக் கூடாது.

இந்த காலகட்டத்துக்குள் நீங்கள் கர்ப்பம் தரிக்கக் கூடாது என்று யாராவது கூறினால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றார் சுஷ்மிதா.

சுஷ்மிதா சென் இரண்டு பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
 

கமல் படம்: சோனாக்ஷியும் விலகினார்!!


கமல் ஹாஸன் நடித்து இயக்கும் விஸ்வரூபம் படத்திலிருந்து அதன் நாயகி சோனாக்ஷி சின்ஹா விலகிவிட்டார். அவருக்குப் பதில் வேறு நாயகியைத் தேட ஆரம்பித்துள்ளனர் படக்குழுவினர்.

இந்தப் படத்தின் ஆரம்பமே பெரும் சிக்கலாக உள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்குவதாகக் கூறப்பட்ட படம் இது. அப்போது படத்துக்கு இயக்குநர் செல்வராகவன்.

திடீரென்று கமலுடன் அவருக்கு உரசல் ஏற்பட்டுவிட, படத்திலிருந்தே அவர் விலகிக் கொண்டார்.

இப்போது கமல்ஹாஸனே இயக்குவதாக அறிவித்தார் தயாரிப்பாளர். ஜூன் முதல் வாரம் படப்பிடிப்பு என்றார்கள். ஆனால் இதுவரை படம் துவங்குவதற்கான அறிகுறியே தெரியவில்லை.

இந்த தாமதத்தைப் பார்த்து வெறுத்துப் போன படத்தின் நாயகி சோனாக்ஷி சின்ஹா, படத்திலிருந்தே விலகிக் கொண்டார். இந்தத் தாமதத்தால் சஞ்சய் லீலா பன்சாலி படத்துக்கு தான் கொடுத்த கால்ஷீட் பாதிக்கும் சூழல் உள்ளதால், இனி படத்தில் தொடர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க மிக ஆர்வம் காட்டினார் சோனாக்ஷி. கமல் வயதில் பாதிகூட இல்லையே, அவருடன் எப்படி ஜோடி சேர்வீர்கள் என்று கேட்டபோது, காமிரா முன்னால் நின்றபிறகு நான் அதையெல்லாம் பார்ப்பதில்லை என்றார்.

ஆனால் தொடர்ச்சியான தாமதம் அவரது உற்சாகத்தை வற்றச் செய்துவிட்டது.

இந்தியில் இன்றைய தேதிக்கு பரபரப்பான நடிகை சோனாக்ஷிதான். எப்போது துவங்கும் என்றே தெரியாத படத்தில் மாட்டிக் கொண்டு நல்ல இந்தி வாய்ப்புகளை இழப்பதா என்ற நினைப்பில் அவர் கழன்று கொண்டார்.

இப்போது புதிய நாயகியைத் தேட ஆரம்பித்துள்ளார்களாம்!
 

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு: ப்ரியா ஆனந்த்தின் அக்கறை!


பொதுவாக நடிக்க வந்து கொஞ்ச காலம் சம்பாதித்த பிறகு, சமூக அக்கறை காட்டுவார்கள் நடிகைகள்.

இவர்களில் ப்ரியா ஆனந்த் கொஞ்சம் விதிவிலக்கு. நடிக்க வந்து ஓரிரு ஆண்டுகளுக்குள் அவர் தனது கவனத்தை குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பில் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

வாமனன், புகைப்படம், சமீபத்தில் ரிலீசான '180' ஆகிய தமிழ்ப் படங்களிலும், லீடர் உள்ளிட்ட சில தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார் ப்ரியா.

நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் சமூக சேவையே தனது பிரதான நோக்கம் என்கிறார் ப்ரியா.
"கல்வி கற்கும் வயதில் குழந்தைகளை வேலையில் ஈடுபடுத்துவது பின்னாளில் பள சமூகக் குற்றங்களுக்கு காரணமாகிவிடுகிறது. எனவே குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்புதான் நாட்டின் முக்கியமான முன்னேற்றம் என நினைக்கிறேன். இது குறித்து நிறைய படித்திருக்கிறேன். தென்னிந்தியாவில் செயல்பட்டு வந்த சமூக சேவை அமைப்பில் சேர்ந்து செயல்பட்டு வருகிறேன்.

சினிமா, அரசியல், விளையாட்டு ஆகிய துறைகளை சார்ந்தவர்கள் இப்பணிகளில் ஈடுபடும் போது, நிறைய பேருக்கு இது போன்று பணிகளில் ஆர்வம் வரும். குறிப்பாக நடிகைகள் சமூக பணிகளில் ஈடுபட வேண்டும்'' என்கிறார் ப்ரியா.

சமீபத்தில் இவர் நடித்த 180 படத்தின் வெளியீட்டையொட்டி, ரத்ததானம் செய்தனர் படத்தின் இயக்குநர் உள்ளிட்ட குழுவினர். இந்த முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்ய முன்வந்தார் ப்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.
 

மும்பை கோக்கைன் போதை விருந்தில் நடிகர் வினோத் கன்னா மகன்: போலீஸ் தகவல்


நவி மும்பை: மும்பை அருகே கோலாபூர் போதைமருந்து களியாட்டத்தில் சிக்கிய சுமார் 300 பேரில் இந்தி நடிகர் வினோத் கன்னாவின் மகன் சாக்ஷி கன்னாவும் ஒருவர் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 27-ம் தேதி மும்பை-புனே நெடுஞ்சாலையில் காலாபூரில் உள்ள மவுண்ட் வியூ ரிசார்ட்டில் போதை மருந்துகள் வினியோகத்துடன் இரவு நேர ஆட்டம், பாட்டம் நடந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று 60 இளம் பெண்கள் உள்பட 300 பேரை சுற்றி வளைத்தனர். அவர்களின் ரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டது.

இவர்களுக்கு போதை மருந்து சப்ளை செய்த நபர்கள், இந்த இரவு நேர விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்கள், ரிசார்ட்டின் மேனேஜர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களுடன் போதை மருந்து தடுப்புப் பிரிவின் இன்ஸ்பெக்ட்ரான அனில் ஜாதவ் என்பவரும் சிக்கினார்.

இது குறித்து ரைகாட் எஸ்.பி. ஆர்.டி. ஷின்டே கூறியதாவது,

போதை விருந்தில் கலந்து கொண்டவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகள் பரிசோதனை முடிவுகள் வர இன்னும் சில நாட்கள் ஆகும். முடிவுகள் வந்த பிறகு தான் அவர்கள் எந்த வகையான போதைப் பொருட்கள் பயன்படுத்தினார்கள் என்று தெரியும். இந்த விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரான விக்கி ஷா என்பவரை தேடி வருகிறோம்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 பேரும் வரும் ஜூலை மாதம் 2-ம் தேதி வரை போலீஸ் காவலில் இருப்பார்கள் என்றார்.

இதற்கிடையே காலாபூர் மவுண்ட் வியூ ரிசார்ட்டில் சிக்கிய 300 பேரில் பிரபல இந்தி நடிகர் வினோத் கன்னாவின் மகன் சாக்ஷி கன்னாவும் ஒருவர் என்று ஒரு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். இந்த விருந்தில் ஆட்டம் போட்டவர்கள் பெரும்பாலும் மும்பை, நவி மும்பையைச் சேர்ந்தவர்கள். சிலர் இதற்காக பூனேவில் இருந்து வந்துள்ளனர்.

300 பேர் சிக்கிய விவரம் அறிந்த பெற்றோர் கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு காலாபூர் வந்தனர். ஒரு பெற்றோர் கூறுகையில், எங்கள் பிள்ளைகள் அப்பாவிகள். அவர்கள் விருந்திற்காகத் தான் இங்கு வந்தனர். அவர்கள் யாரும் போதைப் பொருள் உட்கொள்ளவில்லை என்றார்.

விருந்தில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் கூறுகையில், நான் இந்த விருந்தில் கலந்துகொள்ள ரூ. 20 ஆயிரம் தேவைப்பட்டதால் எனது செல்போனை விற்றேன். நான் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை. இந்த விருந்து குறி்த்து விளம்பரதாரர்கள் சமூக வளைதளங்களில் விளம்பரம் செய்தனர் என்றார்.

வினோத் கன்னாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி அவரை விட்டுப் பிரிந்து போய் விட்டார். 2வது மனைவி கவிதா. அவருக்கு ஒரு மகன், ஒரு மகள். அந்த மகன்தான் இந்த சாக்ஷி.
 

பாலிவுட் படத்தில் விமலா ராமன்!


தமிழில் பொய் படத்தில் கே பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் விமலா ராமன்.

தொடர்ந்து ராமன் தேடிய சீதை போன்ற படங்கள் மூலம் நடிக்கத் தெரிந்த நல்ல நடிகை எனப் பெயர் பெற்றார். தெலுங்குப் படங்களில் நல்ல வாய்ப்புகள் வந்ததால் அங்கும் சில படங்களில் நடித்த விமலாவுக்கு இப்போது பாலிவுட் பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுதொடர்பாக அவரது செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விமலா ராமன் இந்தியில் 'அப்ரா டபாரி' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் கோவிந்தா. ஹெட் அலி அப்ரார் இயக்குகிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இதில் சுனில் ஷெட்டி, ஆர்யா பப்பர், குல்ஷன் குரோவர், முக்தே கோட்ஸே உள்பட பலரும் நடிக்கின்றனர். கோவிந்தாவின் வழக்கமான பொழுதுபோக்குப் படமாக பாணி படமாக 'அப்ரா டபாரி' இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசின், த்ரிஷா, ஜெனிலியா என முதல் செட் நடிகைகளின் பாலிவுட் பிரவேசத்துக்குப் பிறகு இப்போது, சினேகா, லஷ்மி ராய், விமலா ராமன் என அடுத்த செட் நடிகைகளின் மும்பை படையெடுப்பு ஆரம்பமாகியுள்ளது. எத்தனை பேர் வெற்றிக் கொடி கட்டுவார்கள்... பார்க்கலாம்!
 

தெய்வத் திருமகள்... சென்சார் குழு பாராட்டு!


விக்ரம் நடித்த தெய்வத் திருமகள் படத்துக்கு அனைவரும் குடும்பத்துடன் பார்க்கத்தக்க படம் என யு சான்றிதழ் வழங்கியுள்ளது மண்டல தணிக்கை அலுவலகம்.

விக்ரம், அனுஷ்கா, அமலா பால் நடித்துள்ள படம் தெய்வத் திருமகள். மதராசபட்டணம் புகழ் விஜய் இயக்கியுள்ள படம் இது.

விரைவில் வெளியாகவுள்ள இந்தப் படம் சமீபத்தில் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. படத்தை நேற்று பார்த்த சென்சார் குழுவினர், எந்த கட்டும் இல்லாமல், அனைவரும் பார்க்கத்தக்க படம் எனும் யு சான்றிதழ் வழங்கினர்.

மேலும், இந்தப் படம் தங்களை மிகவும் நெகிழ வைத்துவிட்டதாகவும், மிகச் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளதாகவும் பாராட்டு தெரிவித்தனர்.

ராஜகாளியம்மன் மீடியாஸ் சார்பில் மோகன் நடராஜன் தயாரித்துள்ள படம் இது. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். உலகம் முழுவதும் வரும் ஜூலை 15-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது.
 

பாலச்சந்தர் பட அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்-இயக்குநர் ஸெல்வன் அறிவிப்பு


தான் இயக்கிய கிருஷ்ணலீலை படத்தை உடனே வெளியிடக் கோரி இயக்குநர் பாலச்சந்தருக்கு சொந்தமான கவிதாலயா பட நிறுவனம் முன்பு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் ஸெல்வன்.

இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்தவர் ஸெல்வன். சூரி என்ற படம் மூலம் இவர் இயக்குநரானார். இதையடுத்து ஜீவன்-மேக்னா ஜோடியாக நடித்த கிருஷ்ண லீலை படத்தை இயக்கினார். இப்படம் முடிந்து இரு வருடங்களுக்கு மேலாகியும் ரிலீசாகவில்லை.

இந்தப் படம் வெளிவந்தால்தான் தனக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால், படத்தை வெளியிடாவிட்டால், சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக இயக்குனர் ஸெல்வன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "கிருஷ்ணலீலை படத்தை கே.பாலச்சந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்தது. பின்னர் அப்படத்தை ஐங்கரன் இண்டர்நேஷனல் பிலிம் நிறுவனத்துக்கு விற்று விட்டனர். படப்பிடிப்பு டப்பிங் பணிகள் முடிந்துள்ளது.

2 வருடங்கள் 3 மாதங்களுக்கு முன்பே 90 சதவீதம் வேலைகள் முடிந்து படம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இரு தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பலமுறை அலைந்து விட்டேன். படத்தை ரிலீஸ் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்படம் வராததால் புதுப்பட வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை.

'கிருஷ்ணலீலை' ரிலீஸ் ஆன பிறகு பட வாய்ப்பு தருகிறோம் என்று தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இதனால் பெற்றோர்களை வைத்துக் கொண்டு என்னால் குடும்பம் நடத்த இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது. வருமானமின்றி மிகவும் கஷ்டப்படுகிறேன்.

எனவே படத்தை ரிலீஸ் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல் வருகிற ஜூலை 5-ந்தேதி முதல் கவிதாலயா நிறுவனம் முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருப்பேன்," என்று கூறியுள்ளார்.

உண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் மனு கொடுத்தார்.
 

ஆடிக்காற்றில் பறந்த அரவாண் செட்!


வசந்தபாலன் இயக்கி வரும் அரவாண் படத்தின் ஷூட்டிங்கில் அடிக்கடி அசம்பாவிதங்கள் நடப்பது வழக்கமாகிவிட்டது.

இந்த முறை படப்பிடிப்புக்காக போடப்பட்ட குடிசை செட் அப்படியே காற்றில் பறந்துவிட்டதாம்.

மதுரை, தென்காசி என தென் மாவட்டங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங்கை நடத்தி வருகிறார் வசந்த பாலன். ஆதி, பசுபதி, தன்ஷிகா, கபீர் பேடி உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த சரித்திரப் படத்துக்காக தென்காசி அருகே தோரணமலையில் ஒரு பெரிய குடிசைப் பகுதி செட் போடப்பட்டது. கிட்டத்தட்ட 100 குடிசைகள் இதில் இடம்பெற்றிருந்தன.

தென்காசி பகுதியில் பருவக் காற்று மிகப் பலமாக உள்ளது. எனவே இந்த குடிசை செட் காற்றில் பறந்துவிட்டது.

மேலும் படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட ஜிம்மி ஜிப் கேமராவும் இதில் பழுதடைந்துள்ளது. இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை ஒகேனக்கல் பகுதிக்கு மாற்றியுள்ளார் வசந்தபாலன்.

ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும்போது அரவாண் செட் எம்மாத்திரம்...
 

விசா மோசடி கும்பலுடன் கொரியா போய் சிக்கிக் கொண்ட பிரபல கவர்ச்சி நடிகை!


விசா மோசடி காரணமாக பிரபல கவர்ச்சி நடிகை லக்ஷா மற்றும் படக்குழுவினர் 12 பேரை கொரியா அரசு சிறைப்படுத்தியுள்ளது.

பிரபல கவர்ச்சி நடிகை பபிதா மகள் லக்ஷா. இன்றைக்கு முன்னணி கவர்ச்சி நடிகையாக உள்ளார். பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார்.

'லாலி' என்ற புதிய படத்தில் நடிக்க லக்ஷாவை ஒப்பந்தம் செய்தனர். இதில் புதுமுகங்கள் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். சித்திரைச் செல்வன், பிரகாஷ் ஆகியோர் தயாரிக்கிறார்கள். படப்பிடிப்பையும் லக்ஷா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியையும் தென்கொரியாவில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டனர்.

இதற்காக லக்ஷா மற்றும் நடிகர்கள், நடன கலைஞர்கள் என 'லாலி' படக்குழுவினர் 13 பேர் தென் கொரியா புறப்பட்டுச் சென்றனர்.

அவர்களுடன் துணை நடிகர்கள் என்ற பெயரில் மேலும் 30 பேர் டெல்லியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். தென் கொரியாவில் 4 நாட்கள் லக்ஷா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.

அப்போது டெல்லியிலிருந்து இவர்களுடன் போனவர்கள் திடீரென மாயமானார்கள். லக்ஷா உள்ளிட்ட சென்னையில் இருந்து சென்ற அனைவரும் இந்தியா திரும்ப நேற்று கொரியா விமான நிலையம் சென்றனர். அவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிட்டனர்.

டெல்லியில் இருந்து வந்த 29 பேரும் ஜாயிண்ட் விசாவில் வந்திருப்பதால் அவர்களும் வந்தால்தான் நாடு திரும்ப அனுமதிப்போம் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் லக்ஷா உள்ளிட்ட படக்குழுவினர் 13 பேரையும் அங்குள்ள ஓட்டலில் சிறை வைத்தனர். வெளியே போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டார்கள்.

29 பேரும் வராவிட்டால் விசா மோசடியின் கீழ் லக்ஷா உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று தென்கொரியா போலீஸ் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

டெல்லி ஆசாமிகள் 29 பேரும் யார்? லக்ஷா படக்குழுவினருடன் துணை நடிகர்கள் பெயரில் எதற்காக கொரியா வந்தார்கள் என்று விசாரணை நடக்கிறது.

அந்த நாட்டில் தங்கி வேலை பார்ப்பதற்காக படக் குழுவினர் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். ஐரோப்பிய, அமெரிக்க, தென்கிழக்காசிய நாடுகளில் இந்த குற்றம் அதிகமாக நிகழ்கிறது. எனவே இந்த 29 பேரையும் கண்டுபிடித்து கொடுக்காமல் நாடு திரும்ப விடமாட்டோம் என்று அதிகாரிகள் கண்டிப்புடன் கூறிவிட்டனர்.

மகள் லக்ஷா வெளிநாட்டில் சிக்கிக் கொண்ட தகவல் அறிந்ததும் தாய் பபிதா கதறி அழுதார். தயாரிப்பாளர்களைத் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர்கள் போனை ஆஃப் செய்து வைத்துள்ளதாக பபிதா தெரிவித்தார்.
 

பாலிவுட்டில் குத்தாட்டம் போட வரும் பாக். நடிகை வீணா மாலிக்


பாலிவுட்டின் புதிய ஐட்டம் டான்சராக களம் இறங்கியுள்ளார் பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்.

பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவின் 4-வது சீசன் மூலம் இந்தியாவில் பிரபலமானார். சர்ச்சையில் சிக்கியுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஆசிபின் காதலி. வீணா மாலிக்கை வைத்து ஏகப்பட்ட சர்ச்சைகள் உலா வந்தவண்ணம் உள்ளன. பிக் பாஸ் நிகழ்ச்சியின்போதே அவர் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் பாலிவுட்டில் குத்தாட்டம் போட வந்துள்ளார் வீணா.

பாலிவுட்டில் ஏற்கனவே மலாய்கா அரோரா, கத்ரீனா, பிபாஷா, மல்லிகா ஷெராவத் என குத்தாட்டம் போட ஏராளமானோர் இருக்கின்றனர். மேலும், நாயகிகளும் நாங்களும் குத்தாட்டம் போட வருகிறோம் என்று கூறுகின்றனர். நாயகிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்க நாயகர்களும் குத்துப் பாட்டுக்கு ஆடத் துவங்கியுள்ளனர். குத்துப் பாட்டு இல்லாமல் இந்திப் படங்கள் இல்லை என்ற நிலை உள்ளது.

தற்போது இந்த குத்தாட்டக்காரர்கள் பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர் வீணா மாலிக். பாபி ஷேக் இயக்கும் பிர் முலாகத் ஹோ நா ஹோ என்ற படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடவிருக்கிறார் வீணா.

குத்துப் பாட்டுக்கு ஆடவருமாறு வீணா மாலிக்கிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றார் பாபி ஷேக்.

இது தான் பாபியின் முதல் படம். அவர் இதற்கு முன் ரன் மற்றும் ரங் தே பசந்தியில் துணை இயக்குனராக பணி புரிந்துள்ளார்.

ராஜ்பால் யாதவ், காதர் கான் மற்றும் பிரவீன் குமார் நடிக்கும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீசாகிறது.
 

தமிழகம் முழுவதும் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் காமெடியன் விவேக்


திருச்சி: தமிழ்நாடு முழுவதும் 10 லட்சம் மரங்களை வளர்க்க முடிவு செய்திருப்பதாக நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் யூத் எக்ஸ் னோரா இன்டர் நேசனல் அமைப்பு மற்றும் நடிகர் விவேக் ரசிகர் மன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விவேக் கலந்து கொண்டு மரக்கன்றுகள் வழங்கி பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம், பேசிய வி வேக், “ இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் 100 கோடி மரக்கன்று நடவேண்டும். தமிழ் நாட்டில் 100 லட்சம் மரக்கன்றுகள் நட முடிவு செய்து உள்ளோம். டிசம்பர் 2011க்குள் 10 லட்சம் மரக்கன்றுகளை நட முடிவு செய்து இதற்காக மரக்கன்றுகள் வழங்கி வருகிறோம். வனத்துறை அமைச்சர், சமூக நல ஆர்வலர்கள், தொழில் அதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உதவிகளையும் நாடி வருகிறோம் என்று கூறினார்.

நான் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்த போது மரங்களின் நிலமை பற்றி ஒரு கவிதை புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அதில் மரம் தனது அவலநிலைப்பற்றி கூறுவதுபோல கவிதை இருந்தது. அதுதான் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற காரணம் என்றும் விவேக் தெரிவித்தார்.

நான் அடுத்து கந்தா படத்தில் நடித்து வருகிறேன். இதில் மரங்களை அழித்து ரியல் எஸ்ட்டேட்டில் நிலத்தை விற்ற விவசாயி கடைசியில் சித்தாளாக மாறியதுடன் இலவச அரிசிக்கு வரிசையில் காத்திற்கும் அவலம் பற்றி கூறியுள்ளேன். மரங்களை வளர்த்தால் தான் எதிர்காலம் வளமாகும்’’ என்று கூறினார்.
 

சென்னை திரும்பும் ரஜினிக்கு சிறப்பான வரவேற்பு... ரசிகர்களுக்கு அனுமதி தந்தார் லதா!


சென்னை: பொதுவாக எந்த தனிப்பட்ட நிகழ்ச்சி என்றாலும் சத்தமில்லாமல் அமைதியாக வந்துபோவார் ரஜினி. தன்னால் யாருக்கும் இடைஞ்சல் என்ற செய்தி வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பது அவர் சிறப்பு.

ஆனால் ரசிகர்கள் அவருக்காக ஆடம்பர விழா, வரவேற்பு அளிக்க வேண்டும் என நீண்ட நாட்களாகவே விருப்பம் தெரிவித்து வந்தனர். இந்த முறை ரசிகர்களின் விருப்பம் நிறைவேறப்போகிறது.

சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று, பூரண நலத்துடன் புதுப்பிறவி எடுத்துத் திரும்பும் ரஜினிக்கு சென்னையில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்துக்கு ஒரு நிபந்தனையோடு சம்மதம் தந்துள்ளார் ரஜினியின் மனைவி லதா ரஜினி.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியால் போக்குவரத்துக்கோ, மக்களுக்கோ சிறு இடையூறும் ஏற்படக்கூடாது என்ற நிபந்தனைதான் அது.

திங்கள்கிழமை தன்னைச் சந்தித்த சென்னை மன்ற நிர்வாகி என் ராமதாஸ், சைதை மன்ற நிர்வாகி சைதை ஜி ரவி மற்றும் சிதம்பரம் ரமேஷ் ஆகியோர், ரஜினிக்காக நடத்தப்பட்ட பிரார்த்தனை மற்றும் நேர்த்திக் கடன் குறித்து லதாவிடம் தெரிவித்து, ரஜினிக்கு பிரசாதம் அளித்தனர்.

அப்போது ரசிகர்களின் இந்த அன்பும் பிரார்த்தனையும்தான் ரஜினியைக் காத்தது என்று தெரிவித்தார் லதா.

பின்னர் ரஜினி சென்னை வரும்போது பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும், அவரைச் சந்திக்கவும் லதாவிடம் அனுமதி கேட்டனர். "நான் வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கிற நிலையில் இப்போது நீங்கள் இல்லை. எனவே, எந்த இடையூறும் இல்லாமல், பாதுகாப்பாக நடத்துங்கள். ரஜினி சார் வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே உங்களுக்கு தகவல் தருகிறேன்," என்றார்.

ரஜினி தொடர்பான ரசிகர்களின் நிகழ்ச்சிக்கு, லதா ரஜினி நேரடியாக அனுமதி தருவது இதுவே முதல்முறை என்பதால், மிகுந்த உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள், வரவேற்பு ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர்.
 

சினிமா போதும், இனி முதல்வர் பதவிதான்! - சிரஞ்சீவி


ஹைதராபாத்: மக்கள் என்னை நிஜத்தில் முதல்வராகப் பார்க்க விரும்புகிறார்கள். எனவே இனி சினிமாவில் நடிக்கமாட்டேன். ஓய்வு பெறுகிறேன்," என அறிவித்துள்ளார் மெகா ஸ்டார் சிரஞ்சீவி.

ரஜினி நடித்த ராணுவ வீரனில் அறிமுகமானவர் சிரஞ்சீவி. கடந்த 30 ஆண்டுகளாக தெலுங்கு சினிமாவின் முதல்நிலை நடிகராகத் திகழ்பவர் சிரஞ்சீவி. இதுவரை 149 படங்களில் நடித்துள்ளார். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் உச்சத்திலிருக்கும்போதே 2009-ல் அரசியலில் நுழைந்தார். பிரஜா ராஜ்யம் என்ற தனிக்கட்சியை அவர் தொடங்கினார். 2009-ல் நடந்த ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அவரது கட்சி, ஆந்திரத்தில் 18 எம் எல் ஏக்களைப் பெற்றது. 17 சதவீத ஓட்டுக்களைப் பெற்றது.

ஆனால் சமீபத்தில் திடீரென பிரஜா ராஜ்யம் கட்சியை காங்கிரஸில் இணைப்பதாக அறிவித்தார் சிரஞ்சீவி. இப்போது இணைப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் சினிமாவில் நடிப்பதாக அறிவித்தார்.

அவரது 150வது படத்தை தானே தயாரிக்கப் போவதாகவும், அதில் அப்பா சிரஞ்சீவி நடிப்பார் என்றும் அவரது மகனும் நடிகருமான ராம் சரண் தேஜா அறிவித்தார்.

புதிய படத்துக்கான இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது நடிப்புக்கு நிரந்தர முழுக்கு என அறிவித்துள்ளார் சிரஞ்சீவி.

இதுகுறித்து அவர் கூறுகையில், "அரசியலில் மிகவும் பிஸியாக உள்ளேன். மீண்டும் மேக்கப் போடுவதில் அர்த்தமும் இல்லை, அதற்கு நேரமும் இல்லை. என் இடத்தை என் மகன் ராம்சரண் நிரப்புவார்," என்றார்.

அடுத்த படத்தில் நீங்கள் அரசியல்வாதியாக, முதல்வராக நடிப்பதாக இருந்ததாக கூறப்பட்டதே என்று கேட்டதற்கு, "ஆந்திர மக்களுக்கு என்னை நிஜத்தில் இந்த மாநில முதல்வராகவே பார்க்க நீண்ட நாளாக ஆசை. இனி அதற்கான வேலைகளில் இறங்குவேன்," என்றார்.
 

30 வயதுக்குள் தாயாகி விட விரும்பினேன்-பியான்ஸ் ஏக்கம்!


லாஸ் ஏஞ்சலெஸ்: 30 வயதை எட்டுவதற்குள் தாயாகி விட வேண்டும் என்று விரும்பினாராம் பியான்ஸ். ஆனால் செப்டம்பர் மாதம் 30 வயதை அவர் தொடவுள்ள நிலையில் அது இன்னும் கனவாகவே இருப்பதாக ஏக்கம் வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சிகரமான நடிகை+பேஷன் டிசைனர் பியான்ஸ். இவரது ஹூ ரன் தி வேர்ல்ட் என்ற பாடல் சூப்பர் ஹிட்+ஹீட்டானது. இவரது கணவர் பெயர் ஜே இசட்.

இந்த நிலையில் தனது மனக்கிடக்கை ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார் பியான்ஸ். 30 வயதுக்குள் தாயாகி விட வேண்டும் என்று நான் நீண்ட காலமாகவே நினைத்திருந்தேன். ஆனால் அது இதுவரை கனவாகவே உள்ளது. செப்டம்பரில் நான் 30 வயதை எட்டுகிறேன். இருப்பினும் இந்த நிமிடம் வரை கர்பப்மாகும் திட்டம் எதுவும் என்னிடம் இல்லை.

எனக்குக் குழந்தை வேண்டும்தான். இருப்பினும் வருகிற ஆண்டில் எங்களுக்குக் குழந்தை இருக்குமா என்று தெரியவில்லை. அந்த திட்டமும் எங்களிடம் இல்லை.

அதேபோல நான் இப்போதைக்கு ஓய்வு பெறும் திட்டமும் இல்லை. எனது இசைச் சேவை தொடரும் என்றார் பியான்ஸ்.

பியான்ஸும், அவரது கணவரும் ஆறு ஆண்டுகள் தீவிரமாக காதலித்து 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் இதுவரை அவர்கள் குழந்தைப் பேறு குறித்து சிந்திக்கவில்லை.
 

ஐஸ்வர்யா மாதிரி அழகான பெண் குழந்தைதான் வேண்டும்: அபிஷேக்


மும்பை: எங்களுக்கு ஐஸ்வர்யா ராய் மாதிரி அழகான பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று தந்தையாகவிருக்கும் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார்.

தனது மருமகள் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக கடந்த வாரம் அமிதாப் பச்சன் அறிவித்தார். மேலும் தனக்குப் பேரன்தான் பிறப்பான் என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் அப்போ அபிஷேக்கோ தனக்கு ஐஸ்வர்யா மாதிரியே அழகான பெண் குழந்தை வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

நான் தந்தையாகப் போவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தான் கர்ப்பமாக இருப்பதை எனது தந்தை தான் உலகிற்கு தெரிவிக்க வேண்டும் என்று ஐஸ்வர்யா தான் கூறினார்.

என்னுடைய தாய் ஜெயா பச்சன் கர்ப்பம் தரித்தபோது எனது தந்தை அவரது தந்தையைத் தான் அந்த செய்தியை உலகிற்கு தெரிவிக்க சொன்னார். இதை நான் என் மனைவியிடம் எப்பொழுதோ கூறியிருந்தேன். அதை நினைவில் வைத்து தான் இவ்வாறு செய்துள்ளார்.

ஐஸ்வர்யா விருப்பப்படியே அந்த செய்தியை எனது தந்தை டுவிட்டரில் வெளியிட்டார். அதில் இருந்து வாழ்த்துகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. தொலைபேசி ஓயாது ஒலிக்கிறது. எங்கள் வீடு முழுவதும் மலர்கொத்துகளாகக் காட்சியளிக்கிறது.

குழந்தைக்கு என்ன பெயர் வைப்பது பற்றி இன்னும் யோசிக்கவேயில்லை. ஐஸ்வர்யாவை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எந்த புத்தகங்களையும் இன்னும் படிக்கவில்லை.

புதிய படங்கள் திரைக்கு வந்தவுடன் தான் இதில் முழுக் கவனம் செலுத்துவேன். நவம்பரில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல் குழந்தை ஜஸ்வர்யா போன்று அழகான பெண் குழந்தையாக இருக்க வேண்டும். அடுத்து ஒரு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். இரண்டு குழந்தைகள் வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றார்.

அமிதாப் பேரன் வேண்டும் என்று கூறியுள்ளார், அபியோ பெண் வேண்டும் என்கிறார். யார் ஆசை நிறைவேறுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
 

ஜெனிபர் ஆனிஸ்டனின் 'ஸ்ட்ரக்சர்' ரகசியம்


தனது உடலை எப்பொழுதும் ஸ்லிம்மாக வைத்துக் கொள்ள ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் சத்தே இல்லாத, கொழுப்பு, எண்ணெய்ச் சத்து அதிகம் நிரம்பிய உணவு (ஜங்க் புட்) வகைகளைத் தொடுவதே இல்லை என்று அவரது முன்னாள் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஜெனிபர் ஆனிஸ்டன். இவருக்கு வயது 42 ஆகி விட்டது. நடிகை பிராட் பிட்டின் முன்னாள் மனைவி. 42 வயதானாலும் ஆனிஸ்டனின் ஸ்டைலும், ஸ்டிரக்சரும் இன்னும் மாறவே இல்லை. அப்படியே 'படையம்மா' மாதிரி இன்னும் இளமையாக, ஸ்லிம்மாக இருக்கிறார். அதற்கு காரணம் அவர் சத்தே இல்லாத, கொழுப்பு, எண்ணெய்ச் சத்து அதிகம் நிரம்பிய உணவை எடுத்துக் கொள்வதே இல்லையாம்.

இது குறி்த்து அவர் கூறியதாவது,

உடலுக்குத் தேவையான சத்து இல்லாத, வெறும் கொழுப்பு, எண்ணெய்ச் சத்து அதிகம் நிரம்பிய உணவு வகைகளைத் தவிர்த்தாலே எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்கலாம். இது தவிர தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மற்றபடி நான் ஸ்லிம்மாக இருக்க வேறு எதையும் செய்வதில்லை.

நான் தினமும் யோகா செய்வேன். யோகா செய்வதால் நான் மிகுந்த உற்சாகமாகக் காணப்படுகிறேன். தினமும் 20 நிமிடங்கள் யோகா செய்தால் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும். நான் போதிய அளவு உடற்பியிற்சி செய்வதால் எடை கூடிவிடுமோ என்ற கவலையின்றி உணவு எடுத்துக் கொள்கிறேன்.

அப்படியே எடை கூடினாலும், ஒரு வாரத்திற்கு மீன் மற்றும் சாலட் அதிகம் எடுத்துக் கொள்வேன். வழக்கமாக வாரத்தில் 2 அல்லது 3 மூன்று தடவை உடற்பயிற்சி செய்வேன். எடை கூடிவிட்டால் 4 அல்லது 5 தடவை செய்வேன்.

உடற்பயிற்சி செய்த பிறகு எனக்கு நிறைய தெம்பு கிடைக்கும். எதையும் நினைத்து கவலைப்படாமல் இருக்க முயல்வேன் என்றார்.

கோலிவுட் 'அழகிகளே' ஆனிஸ்டன் சொல்வதையும் கேட்டுக்கங்க...!
 

கடைசி படம்... கண்ணீர்... கதறலுடன் விடைபெற்ற நயன்தாரா!!


நயன்தாரா, சினிமாவிலிருந்து விலகிவிட்டார். தெலுங்கில் அவர் நடித்த ஸ்ரீராம ராஜ்யம்தான் அவரது கடைசி படம். இந்தப் பட ஷூட்டிங்கின் கடைசி தினமான நேற்று, படப்பிடிக்குழுவினரிடம் கதறி அழுதபடி விடைபெற்றார் நயன்தாரா!

இனி நான் நடிக்க மாட்டேன். உங்களை ஷூட்டிங்கில் சந்திப்பது இதுவே கடைசி என்று கூறிவிட்டுச் சென்றார்.

வில்லு படத்தில் நடித்தபோது நடிகை நயன்தாராவுக்கும், நடிகர்-இயக்குநர் பிரபுதேவாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது. கணவர்-மனைவி போல் வாழ ஆரம்பித்தனர்.

நயன்தாரா, திருமணம் ஆகாதவர். பிரபுதேவாவுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில், பிரபுதேவாவின் மனைவி ரமலத் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதையும் மீறி நயன்தாரா-பிரபுதேவா காதல் தொடர்ந்தது.

நயன்தாராவின் காதலுக்கு விலையாக ரம்லத்தை விவாகரத்து செய்யத் தயாரானார் பிரபு தேவா. விவாகரத்து கோரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்கள் பிரபு தேவாவும் ரம்லத்தும். திடீர் திருப்பமாக, இருவரும் மனமொத்து பிரிவதாக எழுதிக் கொடுத்தனர். இதற்கு நஷ்டஈடாக ரம்லத்துக்கு பல கோடி சொத்துக்களை கொடுத்துள்ளார் பிரபு தேவா. இந்த செட்டில்மென்டும் சமீபத்தில் முடிந்துவிட்டது. அடுத்தமாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வருகிறது.

விவாகரத்து தீர்ப்பு வந்ததும் பிரபுதேவா, நயன்தாராவை திருமணம் செய்துகொள்கிறார். இப்போது இருவரும் மும்பையில் தங்கியிருக்கிறார்கள். அநேகமாக திருமணத்தையும் விரைவில் மும்பையிலேயே வைத்துக்கொள்வார்கள் என்று தெரிகிறது.

கடைசி படம்

திருமணத்துக்குப்பின் நயன்தாரா சினிமாவில் நடிக்கக்கூடாது என்று பிரபுதேவா கண்டிப்புடன் கூறியிருக்கிறார். அதற்கு நயன்தாராவும் சம்மதம் தெரிவித்து இருக்கிறார். அவர் கடைசியாக, 'ஸ்ரீராமராஜ்யம்' என்ற தெலுங்கு படத்தில் சீதையாக நடித்து வந்தார்.

இது, என்.டி.ராமராவ் நடித்த 'லவகுசா' என்ற படத்தின் ரீமேக். அவருடைய மகன் பாலகிருஷ்ணா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு, ஹைதராபாத்தில் நடந்தது. அதில் நயன்தாரா கலந்துகொண்டு நடித்து வந்தார். நேற்று கடைசி நாள் படப்பிடிப்பு.

கண்ணீர் கதறல்...

நயன்தாரா காலையில் படப்பிடிப்புக்கு வந்தபோதே சோகமாக காணப்பட்டார். மாலை 6 மணிக்கு படப்பிடிப்பு முடிந்ததும், அவர் மற்ற நடிகர்-நடிகைகளிடமும், படப்பிடிப்பு குழுவினரிடமும் பிரியா விடை பெற்றார். அப்போது அவர் கதறி அழுதார். இவ்வளவு நாள் இருந்த சினிமாவை விட்டு பிரிந்து போகிறோமே என்ற துயரம் தாங்காமல், சத்தம்போட்டு அழுதார்.

அவருக்கு, நடிகர் பாலகிருஷ்ணா ஆறுதல் கூறினார். "திருமணம் ஆனபிறகும் நீ தொடர்ந்து நடிக்கலாம். கவலைப்படாதே'' என்றார். அதற்கு நயன்தாரா, "திருமணத்துக்குப்பின் நடிக்கக்கூடாது என்று 'அவர்' கண்டிப்பாக கூறிவிட்டார்'' என்று பதில் அளித்தார்.

கடிகாரம்-மோதிரம் பரிசு

பின்னர் அவர், படப்பிடிப்பு குழுவில் இருந்த 150 பேர்களுக்கும் கைக்கடிகாரங்களை பரிசாக வழங்கினார். தன்னிடம் நீண்ட நாட்கள் 'மேக்கப்மேன்' ஆக பணிபுரிந்த ராஜுவுக்கு ஒரு பவுனில் தங்க மோதிரத்தை பரிசாக வழங்கினார்.

அதன்பிறகு படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் நயன்தாரா சார்பில் விருந்து அளிக்கப்பட்டது. நயன்தாரா கண்களை துடைத்துக்கொண்டு, விமானம் மூலம் மும்பைக்கு பறந்தார்.
 

இலங்கைக்கு எதிராக பேரணி: முதல்வரிடம் அனுமதி கோரிய நடிகர் நடிகைகள்


சென்னை: இலங்கை மீது பொருளாதாரத் தடைவிதிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் நடத்துகின்றனர் தமிழ் நடிகர் நடிகைகள். இதற்கு முதல்வர் ஜெயலலிதாவைச் ந்தித்து இன்று அனுமதி கோரிப் பெற்றனர்.

முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், மயில்சாமி,ராதாரவி, நடிகைகள் மனோரமா, குயிலி உள்ளிட்டோர் இன்று சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், "தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவித்தோம்.

இலங்கை மீது மத்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்தோம்.

இலங்கை அரசு மீது மத்திய அரசு உடனே பொருளாதார தடையை விதிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இதை வலியுறுத்தி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகள் ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலம் செல்ல திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை முதல்வரிடம் கேட்டுள்ளோம். அவரும் தருவதாகக் கூறியுள்ளார்.

பாராட்டு விழா... அப்புறம் பார்க்கலாம்

மேலும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான அனுமதியை தருமாறு முதல்வரிடம் வலியுறுத்தினோம்.

'இப்போது பல்வேறு பணிகள் இருப்பதால், பாராட்டு விழாவை பிறகு பார்த்துக் கொள்ளலாம்' என்று அவர் கூறினார்.

கடந்த ஆட்சியில் சென்னையை அடுத்து பையனூரில் சினிமா தொழிலாளர்கள் வீடு கட்ட 7 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த இடம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த இடத்தில் சினிமா தொழிலாளர்கள் வீடு கட்ட முன்பணம் தர மறுக்கிறார்கள். அதனால் சொந்தமாகவே எங்களுக்கு நிலம் தர வேண்டுமென முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம்," என்றார்.
 

'கொஞ்சம் தள்ளு... அங்கே கிள்ளு....' ரசிகர்களிடம் சிக்கிய ஸ்ரேயா!


ரசிகர்களிடம் சிக்கி நடிகைகள் படாத பாடுபட்டதாக பல நேரங்களில் செய்தி பார்த்திருப்பீர்கள்.

இவற்றில் சில உண்மையாகவே நடந்திருக்கும். சில பப்ளிசிட்டிக்காக உருவாக்கப்பட்டிருக்கும்.

இப்போது நீங்கள் படிப்பது எந்த ரகம் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

நடிகை ஸ்ரேயா கடந்த சில தினங்களாக தொடர்ந்து மீடியா செய்திகளில் முதலிடம் பிடித்து வருகிறார். முன்பு புகைப்படக்கார்களிடம் தகராறு, பின்னர் 25 வயதுக்குட்பட்டோர் குடிக்க ஆதரவு கொடுத்ததற்காக சமூக அமைப்புகளிடம் வாங்கிக் கட்டிக்கொண்டது... இப்படி எல்லாமே வில்லங்க விவகாரங்கள்.

இந்த வரிசையில், இப்போது ரசிகர்களிடம் ஸ்ரேயா சிக்கிக் கொண்டு அவதிப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜீவா - ஸ்ரேயா ஜோடியாக நடிக்கும் படம் ரவுத்திரம். கோகுல் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது.

அங்குள்ள பாரதி பூங்காவில் ஜீவா ஸ்ரேயா நடித்த காட்சிகளை படமாக்கினர். அதை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து நின்று பார்த்தனர். திடீரென்று கூட்டம் அதிகமாகியது. எல்லோரும் பூங்காவுக்குள் நுழைந்தனர்.

படப்பிடிப்பு குழுவினரால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ரசிகர்கள் முண்டியடித்து போய் ஸ்ரேயாவை சுற்றி வளைத்தனர். சிலர் கைகளை பிடித்து இழுத்தனர். சிலர் இடுப்பில், கழுத்தில் என வாய்ப்பு கிடைத்த இடங்களில் தொட்டனராம். சில குறும்புக்கார இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிடுவதுபோல ஸ்ரேயா மீது விழுந்து கிள்ளினார்களாம்.

பாதுகாப்புக்கு சில போலீசாரே நின்றதால் தடுக்க முடியவில்லை. நிலைமை மோசமாவதை உணர்ந்த அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

சில நிமிடங்களில் ஏராளமான போலீசார் வேன்களில் வந்து இறங்கினார்கள். கூட்டத்தினரை அடித்து விரட்டி ஸ்ரேயாவை மீட்டார்களாம்!
 

புரியாத டைட்டில் வைப்பது பேஷனாகிவிட்டது! - நடிகர் கரண்


இன்றைக்கு புரியாத டைட்டில் வைப்பது பேஷனாகிவிட்டது என்றார் நடிகர் கரண்.

உதயா நடிக்கும் "ரா ரா" படத்தின் இசை வெளியீட்டு விழா எழும்பூர் ஆல்பர்ட் தியேட்டரில் நடந்தது. விழாவில் இயக்குநர் எஸ்பி முத்துராமன், நடிகர் கரண் ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் நடிகர் கரண் பேசுகையில், "ரா ரா" படத்தில் திருக்குறளை வைத்து ஒரு பாடல் எடுத்திருப்பது புதுமையான விஷயம். ஒரு குறளை வைத்தே பாடல் எடுப்பது கஷ்டம். ஆனால் இப்படத்தில் நிறைய குறள்களை வைத்து ஒரு பாடலை எடுத்துள்ளனர்.

இது வரலாற்றில் இடம் பெறத்தக்க படமாக இருக்கும். திரைப்படங்களுக்கு டைட்டிலை புரியாத மாதிரி வைப்பது பேஷனாகி விட்டது. அப்போதுதான் படத்தை திரும்பிப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் "ரா ரா" விஷயமுள்ள டைட்டிலாக உள்ளது. தெலுங்கிலும் இதை பயன்படுத்தலாம். உதயா எனது நெருங்கிய நண்பர். 90 ரூபாய், 100 ரூபாய் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகர்கள் படம் நன்றாக இருக்குமா? என்று யோசிக்கின்றனர். அவர்களை திருப்தி செய்யும் படமாக இது இருக்கும்," என்றார்.

விழாவில் நடிகை சரண்யா பொன்வண்ணன் பங்கேற்றார். சிறந்த நடிகைக்காக தேசிய விருது பெற்ற அவரை படக்குழுவினர் மேடையில் கவுரவித்தனர்.

பாடல் சிடியை இயக்குநர் எஸ்பி முத்துராமன் வெளியிட, ஏசி சண்முகம், இயக்குநர்கள் அகத்தியன், பிரபு சாலமன் மற்றும் விஜய் பெற்றுக் கொண்டனர்.
 

திருச்செந்தூரில் ரஜினிக்காக தங்கத் தேரிழுத்த ரசிகர்கள்


திருச்செந்தூர்: உடல் நலம் பாதி்க்கப்பட்டு குணமடைந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பழையபடி படங்களில் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் திருச்செந்தூர் கோயிலில் தங்கத் தேர் இழுத்தனர்.

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து ஓய்வு எடுத்து வருகிறார் ரஜினி. நோய்த் தொற்று பரவாமல் இருக்க அவரைச் சந்திக்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

அவர் இப்போது முழுவதுமாக குணமடைந்துவிட்டாலும், பழைய உடல் வலுவைப் பெற 15 தினங்களாவது ஆகும் என்கிறார்கள். அதன் பிறகு பார்வையாளர்களைச் சந்திக்கவிருக்கிறார்.

அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதில் இருந்தே அவர் பூரண குணமடைய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

அவர் விரைவில் மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக திருநெல்வேலி மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் ஏ எம் ஸ்டாலின் தலைமையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் ரசிகர்கள் தங்கத் தேர் இழுத்து பிரார்த்தனை செய்தனர். இதில் மாவட்ட செயலாளர் டக்ளஸ், மாவட்ட பொருளாளர் லட்சுமண ராஜா உள்பட திரளான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
 

நடிகர் கார்த்தி திருமணம்... முதல்வருக்கு நேரில் அழைப்பு


சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை நடிகர்கள் சிவகுமார், சூர்யா, ஜோதிகா ஆகியோர் இன்று நேரில் சந்தித்துப் பேசினர்.

ஜூலை 3-ம் தேதி கோவையில் நடக்கும் நடிகர் கார்த்தியின் திருமணத்துக்கு நேரில் வந்து வாழ்த்துமாறு அழைப்பு விடுத்தனர்.

இச்சந்திப்பு தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

சிவகுமாரின் இளைய மகனும் சூர்யாவின் சகோதரருமான நடிகர் கார்த்திக்கின் திருமணம் ஜூலை 3-ம் தேதி கோவையில் நடைபெறுகிறது. வரவேற்பு நிகழ்ச்சி வரும் ஜூலை 7-ம் தேதி சென்னையில் நடக்கிறது.

இத் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்த வேண்டுமென சிவகுமார் குடும்பத்தினர் முதல்வருக்கு அழைப்பு விடுத்து திருமண அழைப்பிதழை வழங்கினர்.

இத்தகவல், தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு சூர்யா - ஜோதிகா திருமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்தவரே ஜெயலலிதாதான். இப்போது கார்த்தி திருமணம் அல்லது வரவேற்புக்கு கட்டாயம் நேரில் வந்து வாழ்த்துவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறுது.
 

கத்ரீனாவுக்கு பிரச்சனையான பிகினி!


மும்பை: தூம் 3 படத்தில் நடிக்க வேண்டும் என்றால் கத்ரீனா கைப் பிகினியில் வர வேண்டும் அல்லது விலக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

யாஷ் ராஜ் புரொடக்ஷன்ஸ் தூம் 3 படத்தை எடுக்கிறது. இதில் கத்ரீனா தான் நாயகியாக தேர்வாகியுள்ளார். ஆனால் ஆரம்பமே வில்லங்கமாக இருக்கிறது கத்ரீனாவுக்கு. தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தில் 2 பிகினி காட்சிகள் இருக்கிறது என்று கூறியுள்ளனர்.

கவர்ச்சியாய் குத்தாட்டம் போட்டாலும் கத்ரீனா பிகினி மட்டும் அணிவதில்லை என்று உறுதியாக இருக்கிறார். ஆனால் தயாரிப்பாளர்களும் பிகினியில் உறுதியாக இருக்கிறார்கள். அதனால் கத்ரீனா என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்.

அவருக்கு இரண்டே சாய்ஸ் தான். ஒன்று பிகினியில் வருவது அல்லது படத்தை விட்டு வெளியேறுவது. பாலிவுட்டின் முன்னணி நாயகிகளான கரீனா, பிரியங்கா சோப்ரா எல்லாம் பிகினியில் நடித்துள்ளனர்.

ஏன் கத்ரீனாவும் கூட தனது முதல் படமான பூம்-ல் பிகினியில் வந்தார். அதன் பிறகு தான் பிகினிக்கு நோ சொல்லியுள்ளார்.

யாஷ் ராஜ் நிறுவனப் படத்தில் நடிக்க அனைத்து நடிகைகளும் ஆர்வம் காட்டும் நிலையில் வந்த பெரிய வாய்ப்பை விட மனசில்லாமல் இருக்கிறார் கத்ரீனா.

கத்ரீனா பின்வாங்கினால் வேறொரு நடிகைகயை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்து ஒரு புதுமுகத்திற்கு பயிற்சியும் அளித்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.
 

ஹீரோயின் படத்திலிருந்து நீக்கினால் வழக்கு! - ஐஸ்வர்யா ராய் முடிவு


நான் கர்ப்பமானதால் என்னை ஹீரோயின் படத்திலிருந்து நீக்கப் போவதாக அறிவித்துள்ளது தவறானது. திருமணமான ஒரு நடிகை கர்ப்பமாவது அத்தனை பெரிய தவறா... என்னா நீக்கினால் வழக்கு தொடருவேன், என்று ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்

ஐஸ்வர்யாராய் கர்ப்பமாகியுள்ளதாக அவரது மாமனார் அமிதாப் பச்சன் சமீபத்தில் அறிவித்தார். இதையடுத்து ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிகிறது. வாழ்த்தியவர்கள் அனைவருக்கும் இருவரும் நன்றி தெரிவித்தனர்.

ஆனால் இன்னொரு புறம் கர்ப்பத்தை காரணம் காட்டி ஐஸ்வர்யாவின் திரையுலக மார்க்கெட் சரிகிறது. இந்திப் பட இயக்குனர் மதுர் பண்டார்கர் ஹீரோயின் என்ற பெயரில் தான் எடுத்துவரும் படத்துக்கு ஐஸ்வர்யாராயை கதா நாயகியாக ஒப்பந்தம் செய்தார்.

அடுத்த மாதம் இந்த படத்தின் படிப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் ஐஸ்வர்யாராய் கர்ப்பமான தகவல் அவரை அதிர்ச்சியடைய செய்தது. இதனால் ஐஸ்வர்யா ராயை நீக்கி விட்டு கத்ரீனா கபூர் அல்லது பிரியங்கா சோப்ராவை கதாநாயகியாக்கப் போவதாக செய்திகள் வெளியாகின.

இதில் கோபமடைந்த ஐஸ்வர்யா ராய், தன்னை நீக்கப்போவதாக இயக்குநர் கூறியுள்ளதைக் கண்டித்து நெருக்கமானவர்களிடம் காரசாரமாக பேசி திட்டி வருகிறார்.

அத்துடன் ஹீரோயின் படத்தில் இருந்து நீக்கப்பட்டால் எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளார். இதற்காக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ராயின் இந்தக் கோபத்தைப் பார்த்த பிறகுதான், படத்திலிருந்து ஐஸ்வர்யா ராய் நீக்கப்படவில்லை என தயாரிப்பாளர்களான யுடிவி நிறுவனத்தினர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
 

கார்த்தியுடன் ஜோடி சேரும் அனுஷ்கா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கார்த்தியுடன் ஜோடி சேரும் அனுஷ்கா

6/28/2011 1:01:03 PM

சகுனி படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்து டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அதில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பருத்திவீரன் முதல் சிறுத்தை வரை நடித்த எல்லா படமே சுப்பர் ஹிட்டாகி முன்னணி ஹீரோக்கள் பட்டியலில் சேர்ந்து விட்ட கார்த்திக்கு அடுத்த வாரம் ஜூலை 3ம் தேதி கோவையில் திருமணம் நடைபெற இருக்கிறது. ஈரோட்டை சேர்ந்த ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்கிறார். திருமணம் நாள் நெருங்கிவிட்டதால் திருமண வேலைகளில் பிஸியாக இருக்கும் கார்த்தி, புதுமுக இயக்குநர் சங்கர்தயால் இயக்கும் சகுனி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சகுனி படத்திற்கு அடுத்து கார்த்தி, தலைநகரம், மருதமலை, படிக்காதவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய டைரக்டர் சுராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. கார்த்திக்காக அருமையான கதை ஒன்றை தயார் செய்து  வைத்திருக்கிறாராம் சுராஜ். மேலும் இந்தபடத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

 

படப்பிடிப்பு முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் வெளிவராத படம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

படப்பிடிப்பு முடிந்து பல ஆண்டுகள் ஆகியும் வெளிவராத படம்

6/28/2011 12:58:44 PM

களவாடிய பொழுதுகள்” படத்தை முடித்து பல ஆண்டுகள் ஆகியும்  வெளிவராமல் இருப்பதை நினைத்து தினமும் வருந்திக்கொண்டு இருக்கிறார் டைரக்டர் தங்கர் பச்சான். அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம் என்று இதுவரை மண் சார்ந்த, மக்கள் சார்ந்த படமாக எடுத்த டைரக்டர் தங்கர் பச்சான், மீண்டும் ஒரு உணர்வுபூர்வமாக ஒரு கதையை எழுதி, இயக்கி இருக்கும் படம் தான் “களவாடிய பொழுதுகள்”. பிரபுதேவா, பூமிகா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தபடம் முடிந்து பல ஆண்டுகள் ஆகியும், வெளியிட முடியாமல்இருக்கிறது. படத்தை இயக்கிய தங்கர் பச்சனோ என்ன செய்வது என்று புரியாமல் தவித்து வருகிறார். மேலும் தன்னுடைய அடுத்த படவேலைகளிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறார்.

இதுகுறித்து தங்கர் கூறியதாவது : ஒரு படத்தை முடித்துவிட்டு பல வருடங்களாக அந்த படத்தை வெளியிட முடியாமல் படைப்பாளி காத்திருப்பது மிக கொடுமையான விஷயம். என்னுடைய முந்தய படங்களை எல்லாம் 90நாட்களில் கூட முடித்து ரிலீஸ் செய்திருக்கிறேன். ஆனால் “களவாடிய பொழுதுகளை” முடித்து ஆண்டுகள் பல ஆகியும், இவ்வளவு காலம் காத்திருப்பது வருந்தத்தக்கது. “களவாடிய பொழுதுகள்” மனித உறவுகளை, உணர்வுகளை பேசும் என்றும் அந்த நாளுக்காக நான் காத்திருப்பதாகவும் வருத்தத்துடன் கூறினார்.

 

முருகதாஸ்-சல்மான்கான் கூட்டணி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
முருகதாஸ்-சல்மான்கான் கூட்டணி

6/28/2011 12:53:59 PM

ஹிந்தி "கஜினி" யின் மாபெரும் வெற்றிக்குப் பின் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ்க்கு பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. "கஜினி" க்குப் பின் ஷாரூக்கானை அவர் இயக்குவது கிட்டத்தட்ட முடிவாகி விட்ட நிலையில், "ரா ஒன்" படத்தில் நடிக்க தொடங்கி விட்டார் ஷாரூக்கான். அந்த இடைவெளியில் தமிழில் "ஏழாம் அறிவு" படத்தை தொடங்கி விட்டார் முருகதாஸ்.
இதற்கிடையே அமீர்கான், ஷாரூக்கான் ஆகியோரை விட சல்மான்கானின் மார்கெட் பாலிவுட்டில் உச்சம் தொட்டது. இதனால் தயாரிப்பாளர்கள் முருகதாஸ் - சல்மான்கான் இணையும் படத்தை தயாரிக்க ஆவலாக உள்ளார்கள். அவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க பலர் முயற்ச்சிக்கிறார்கள். இதையடுத்து 'சிங்கம்' ரீமேக்கில் நடித்து வரும் அஜய் தேவகனும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால் இன்னும் யாரை இயக்குவது என்பது குறித்து முடிவெடுக்கவில்லை என்கிறது முருகதாஸ் தரப்பு.




 

சண்டை காட்சிகளில் நடிக்கக் கூடாது ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுரை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
சண்டை காட்சிகளில் நடிக்கக் கூடாது ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுரை!

6/28/2011 12:51:04 PM

உடல் நலக்குறைவு ஏற்பட்டு சரியாகியுள்ள நிலையில் சண்டைக் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்குமாறு ரஜினிக்கு மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனராம். தற்போது அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, சிங்கப்பூரிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார். விரைவில் அவர் வருவார் என்று அவரது மருமகன் தனுஷ் கூறியுள்ளார்.  இந்த நிலையில் மீண்டும் "ராணா" பட வேலைகளை முடுக்கி விட்டுள்ளனர். ரஜினிகாந்த் திரும்பியதும் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் கூறுகிறார்கள். அதேசமயம், "ராணா" படத்தில் சண்டைக் காட்சிகளில் ரஜினி நடிக்கக் கூடாது என்று சிங்கப்பூர் மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனராம். பழையபடி சண்டைக் காட்சிகளில் நடித்தால் உடல் நலம் பாதிக்கப்படலாம் என்பதால் டூப் போட்டு சண்டைக் காட்சிகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனராம்.




 

‘கோÕ இந்தி ரீமேக்கில் மீண்டும் வில்லன் வேடம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

'கோÕ இந்தி ரீமேக்கில் மீண்டும் வில்லன் வேடம்!

6/28/2011 12:23:38 PM

“கோ” படத்தின் மூலம் பிரபலமான அஜ்மலுக்கு, இந்தியில் உருவாகும் “கோ” படத்திலும் நடிக்க அழைப்பு வந்துள்ளது 'கோÕ இந்தி ரீமேக்கில் தமிழில் நடித்த வில்லன் வேடத்தை மீண்டும் ஏற்க உள்ளார் அஜ்மல். சமீபத்தில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில், வெளியாகி சுப்பர் ஹிட்டான “கோ” படத்தின் மூலம் பிரபலமானார். “கோ” படத்தில் சிறகுகள் கட்சியின் தலைவராக, வசந்த் என்ற கேரக்டரில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்நிலையில் “கோ” படம் இந்தியிலும் உருவாக இருக்கிறது. இப்படத்தை நடிகர் அக்ஷய் குமார் இயக்குகிறார். “கோ” படத்தில் வசந்த் கேரக்டரில் நடித்த அஜ்மலையே, இந்தி “கோ” படத்திலும் நடிக்க வைக்க அக்ஷய் பிரியப்படுவதாகவும், இதற்காக அஜ்மலுக்கு அழைப்பு விடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

விமானத்தில் ஜோடியாக பறந்த பிரபுதேவா-பியா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

விமானத்தில் ஜோடியாக பறந்த பிரபுதேவா-பியா

6/28/2011 12:13:13 PM

பிரபு தேவாவும், பியாவும் ஒரே விமானத்தில் அருகருகே அமர்ந்து மும்பை சென்றனர். இது குறித்து பியா கூறியது: சிறு வயதிலிருந்தே பிரபுதேவா நடனம் என்றால் பிடிக்கும். சில வருடங்களுக்கு முன் 'ஏகன்Õ ஷூட்டிங்கில் சந்தித்தேன். அப்போது நான் சினிமாவுக்கு வந்த புதிது. அவரிடம் பேச பயந்தேன். என்னை அறிமுகம் செய்து கொள்ளக்கூட தயங்கினேன். இம்முறை விமானத்தில் அவர் அருகில் அமர்ந்து செல்ல வாய்ப்பு கிடைத்தது. 'ஹலோÕ சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டேன். 'கோÕ படத்தில் எனது நடிப்பு சிறப்பாக இருந்ததாக பாராட்டினார். 'அவர் மிகவும் ரிசர்வ் டைப். யாரிடமும் அதிகம் பேச மாட்டார்Õ என்று கூறி இருந்தார்கள். ஆனால் அவர் என்னை பாராட்டியபோது ரொம்பவும் சந்தோஷம் அடைந்தேன். மேலும் எந்த நேரத்திலும் அமைதியாக, பதற்றம் அடையாமல் இருப்பது, நல்ல படங்களை தேர்வு செய்து ஒப்புக்கொள்வது என்பது பற்றி சிறு சிறு டிப்ஸ் கொடுத்தார். அது பயனுள்ளதாக இருந்தது.

 

ஹீரோயின் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ஐஸ்வர்யா ராய்?


மும்பை: ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதால் ஹீரோயின் படத்தில் அவரை நீக்கிவிட்டதாக வந்துள்ள செய்திகளை மறுத்துள்ளது யுடிவி நிறுவனம்.

ஐஸ்வர்யா ராய், அர்ஜுன் ராம்பலை வைத்து ஹீரோயின் என்ற படத்தை இயக்கி வருகிறார் மதுர் பண்டார்கர். இந்தப் படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்து ஸ்டில்களும் வெளியாகின.

இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக செய்தி அதிகாரப்பூர்வமாக வெளியானது. அவரை ஒப்பந்தம் செய்த போது, இதுகுறித்து எதுவும் பண்டார்கருக்கு தெரியாது என்பதால், இப்போது படத்தைத் தொடர்வதா நிறுத்துவதா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் வேறு யாரையாவது நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதனை படத்தின் தயாரிப்பாளரான யுடிவி மறுத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த நேரத்தில் ஹீரோயின் படத்தை விட ஐஸ்வர்யா ராயின் உடல்நிலைதான் எங்களுக்குப் பெரிது. எனவே அவர் நீக்கப்பட்டார் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அவருடன் இப்போது பணியாற்ற முடியவில்லை என்பது வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் வேறு வழியில்லை. இருந்தாலும் இப்போதைக்கு படப்பிடிப்பை நிறுத்துவது என நாங்கள் அனைவரும் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்,” என்று குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையே, ஐஸ்வர்யாவுக்கு பதில் நாங்கள் நடிக்கிறோம் என பாலிவுட்டின் முன்னணி நடிகைகள் போட்டி போட்டு கால்ஷீட் தர முன்வந்துள்ளனராம். அவர்களில் முக்கியமானவர் ப்ரியங்கா சோப்ரா. ஆனால் யாரையும் இப்போதைக்கு கமிட் செய்வதாக இல்லை என்று அறிவித்துள்ளது யுடிவி.

 

முகமூடியில் வில்லனானார் நரேன்!!


ஜீவாவை ஹீரோவாக வைத்து மிஷ்கின் இயக்கும் முகமூடி படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுக்கிறார் நரேன்.

மிஷ்கின் இயக்கிய முதல் படமான சித்திரம் பேசுதடி மூலம் அறிமுகமானவர் நரேன். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்தார். மிஷ்கின் இயக்கத்தில் இவர் நடித்த அஞ்சாதே மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் அதன் பிறகு கிட்டத்தட்ட காணாமலே போய்விட்டார்.

இப்போது தான் அறிமுகப்படுத்திய நாயகனான நரேனுக்கு, மீண்டும் புதிய பரிமாணத்தைத் தருகிறார் மிஷ்கின்.

அடுத்து ஜீவா நாயகனாக நடிக்கும் முகமூடி படத்தை இயக்குகிறார் மிஷ்கின். இந்தப் படத்தில் வரும் பவர்புல் வில்லன் பாத்திரத்துக்கு அவர் நரேனைத் தேர்வு செய்துள்ளார்.

கிட்டத்தட்ட ஹீரோவுக்கு சமமான வேடம் என்பதாலும், இதுவரை வாங்காத பெரிய சம்பளம் என்பதாலும் உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளார் நரேன்.

இதுகுறித்து நரேன் கூறுகையில், “இதை வில்லன் வேடமாக நான் பார்க்கவில்லை. எதிர்மறையான இன்னொரு ஹீரோவாகத்தான் பார்க்கிறேன். எனது நடிப்பு வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை இந்தப் படம் தரும்,” என்றார்.

 

தனுஷ் - ஸ்ருதி ஜோடி: இயக்குநர் ஐஸ்வர்யா!


கணவர் தனுஷ் – கமல் மகள் ஸ்ருதி ஜோடியாக நடிக்கும் படத்தை ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் சில காலம் செல்வராகவனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் டைட்டில் கார்டில் அவர் பெயரும் இடம்பெற்றிருந்தது.

பின்னர் தானே கதை வசனம் எழுதி படம் இயக்கப் போவதாக ஐஸ்வர்யா தெரிவித்தார். இதனை தனுஷும் பல பேட்டிகளில் தெரியப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், ஒரு காதல் கதையை படமாக்கும் ஐஸ்வர்யாவின் முயற்சி கைகூடி வந்துள்ளது.

இந்தப் படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஐஸ்வர்யா. ஹீரோவாக அவரது கணவர் தனுஷே நடிக்கிறாராம். கமல் மகள் ஸ்ருதி ஹாஸன் ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தை தயாரிக்கப்போவது, தனுஷின் சொந்தப் பட நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் ஓய்வெடுத்து வரும் ரஜினி சென்னை திரும்பியதும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

 

போலிக் கையெழுத்து...! - எஸ்ஏ சந்திரசேகரன் கமிஷனரிடம் புகார்


சென்னை: என் கையெழுத்தை போலியாகப் போட்டு யாரோ சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என புகார் கூறியுள்ளார் இயக்குநர் எஸ்ஏ சந்திரசேகரன்.

சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து நேற்று புகார் மனு கொடுத்தார் இயக்குநரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்ஏ சந்திரசேகரன்.

பின்னர் நிருபர்களிடம் எஸ்ஏ சந்திரசேகரன் பேசுகையில், “தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக ராம.நாராயணன் இருந்த போது, நான் துணைத் தலைவராக இருந்தேன்.

இப்போது ராம.நாராயணன் பதவி விலகியதால், நான் தற்காலிக தலைவராக உள்ளேன். நான் தற்காலிக தலைவராக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நடிகர் பாபுகணேஷ் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நான் கையெழுத்து போட்டுள்ளது போல, கையெழுத்து போட்டு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் போடப்பட்டுள்ள கையெழுத்து என்னுடைய கையெழுத்து இல்லை.

அந்த சுற்றறிக்கையில், ‘கேபிள் டி.வி. நடத்துபவரின் கவனத்துக்கு’ என்ற தலைப்பில் சில தகவல்கள் உள்ளன. 2011 முதல் 2012-ம் ஆண்டு வரை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மூலம் ஒளிபரப்பு உரிமம், சேலம் ‘வீல் மீடியா’ என்ற நிறுவனத்துக்கும், தஞ்சை ‘சேனல் விஷன்’ என்ற நிறுவனத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது பொறுப்புகள் மாறிவிட்டாலும், அந்த ஒளிபரப்பு உரிமம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, மாத சந்தாவை கட்டலாம். இப்படிக்கு, எஸ்.ஏ.சந்திரசேகரன் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள கையெழுத்து என்னுடைய கையெழுத்து இல்லை.

இதுபோன்ற போலி கையெழுத்து போட்டு சுற்றறிக்கை அனுப்பியவர்கள் யார்? என்று கண்டறிந்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்,” என்றார்.

 

ரஜினியைப் பார்க்க சிங்கப்பூர் செல்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்!


சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியைப் பார்க்க விரைவில் சிங்கப்பூருக்குப் பயணமாகிறார் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார்.

சிகிச்சைக்குப் பிறகு ரஜினியைப் பார்க்க அனுமதி பெற்றுள்ள முதல் நபர் ரவிக்குமார்தான். ரஜினி உடல்நிலை, நராணா பட வேலைகள், படத்துக்கு இன்னும் ஒப்பந்தம் செய்ய வேண்டிய நடிகர்கள் குறித்து இந்த சந்திப்பின்போது ரஜினியுடன் கலந்துரையாடுகிறார் ரவிக்குமார்.

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து ஓய்வு எடுத்து வருகிறார் ரஜினி. அவரைப் பார்க்க பலரும் அனுமதி கேட்டு வருகின்றனர். சிங்கப்பூரிலும் ஏராளமான ரசிகர்கள் அவரைப் பார்க்க குவிகின்றனர். ஆனால் அவருக்கு மேற்கொண்டு நோய்த் தொற்று பரவாமல் தடுக்கவும் பூரண ஓய்வுக்காகவும் இதுவரை பார்வையாளர் யாரையும் அனுமதிக்கவில்லை.

சிரஞ்சீவி மற்றும் அம்பரீஷ் ஆகிய இருவர்தான் இதுவரை ரஜினியை நேரில் பார்த்துவிட்டு வந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் இதையும் கூட ரஜினி குடும்பத்தினர் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் தன்னுடன் தங்கியிருந்த மனைவி, மகள்களை சென்னைக்கு அனுப்பிவிட்டார் ரஜினி. அவர் இப்போது முழுவதுமாக குணமடைந்துவிட்டாலும், பழைய உடல் வலுவைப் பெற 15 தினங்களாவது ஆகும் என்கிறார்கள்.

அதன் பிறகு பார்வையாளர்களைச் சந்திக்கவிருக்கிறார். அவரைச் சந்திக்கும் முதல் நபராக சென்னையிலிருந்து செல்கிறார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

சிங்கப்பூர் செல்லும் கே.எஸ்.ரவிகுமார், ரஜினிகாந்துடன் ராணா’ பட வேலைகள் குறித்து பேசுகிறார். ரஜினிகாந்தின் உடல்நிலையை பொருத்து, ‘ராணா’ பட வேலைகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது.

 

பாலச்சந்தர், ஷங்கருடன் பேசிய ரஜினி!


கோடம்பாக்கத்தில் இன்ஸ்டன்ட் நியூஸ் என்றால் அது ரஜினியிடமிருந்து முக்கிய திரையுலக விஐபிக்களுக்கு வரும் போன்கால்கள் பற்றியதுதான்.

கிட்டத்தட்ட மறுபிறவி எடுத்திருக்கிறார் ரஜினி. இப்போதைக்கு சிங்கப்பூரில் சில தினங்கள் பூரண ஓய்வில் இருக்கும் ரஜினி, அடுத்த மாதம் சென்னை திரும்பப் போகிறார்.

இந்த நிலையில் திரையுலகில் தனது நெருங்கிய நண்பர்களுடன் போனில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார் சூப்பர் ஸ்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன் தனது குருநாதர் பாலச்சந்தருக்கு போன் செய்த ரஜினி, தனது உடல்நிலை குறித்த தகவல்களைக் கூறினார். ரஜினியைப் பார்க்க சிங்கப்பூருக்கு வர விரும்புவதாக பாலச்சந்தர் தெரிவிக்க, வேண்டாம் சார். நீங்க உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். நான் விரைவில் வந்துவிடுவேன், என்று கூறியுள்ளார்.

ஷங்கருடன்...

நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது அபிமான இயக்குநர்களில் ஒருவரான ஷங்கருக்குப் போன் செய்து சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தாராம் ரஜினி. சிவாஜி, எந்திரன் பட அனுபவங்கள் பற்றி இருவரும் பேசினராம். மேலும் எந்திரனுக்கு கிடைத்து வரும் விருதுகள் குறித்தும் இருவரும் பேசிக் கொண்டிருந்தாக, இயக்குநர் ஷங்கரே தெரிவித்துள்ளார்.
 

பொய் சொல்கிறார் காஜல்! - விளக்கத்தை ஏற்க மறுக்கும் தெலுங்கு படவுலகம்


"நான் வட இந்தியப் பெண், என்னை தென்னிந்திய நடிகை என்று கூறாதீர்கள்", என்று மேடையில் முழங்கி, பின்னர் நான் அப்படிச் சொல்லவே இல்லை என்று மறுத்த காஜல் அகர்வாலுக்கு தெலுங்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காஜல் அகர்வால் தெலுங்குப் பட வாய்ப்புகளுக்காக பொய் சொல்கிறார், என்று சக நடிகைகள் மற்றும் முன்னணி இயக்குநர்கள் அவர் மீது புகார் கூறியுள்ளனர்.

சிங்கம் படத்தின் இந்திப் பதிப்பில் நடிக்கிறார் காஜல். இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தன்னை எல்லோரும் தென்னிந்திய நடிகை என குறிப்பிடுவது பிடிக்கவில்லை என்றார்.

ஒரே ஒரு இந்திப் படத்தில் நடித்த உடன் வாழ்க்கை தந்த தமிழ் - தெலுங்குப் பட உலகை அவமானப்படுத்துகிறார் காஜல் என அவருக்கு எதிராகக் கிளம்பினர் தென்னிந்தியப் பட உலகினர்.

இந்த நிலையில், நான் அப்படிச் சொல்லவே இல்லை. நான் சொன்னதை தப்பா எழுதிட்டாங்க, என்று சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார் காஜல். தென்னிந்தியப் படங்களில் நடிப்பதில் நான் பெருமை அடைகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இதனை ஏற்க தெலுங்கு தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தயாராக இல்லை.

"காஜல் இப்போது தொடர்ந்து பொய் பேசுகிறார். அவர் பேசியது தவறு, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால், வட இந்திய நடிகை என்பதை பெருமையாக நினைக்கும் அவருக்கு தமிழ் - தெலுங்கு சினிமாவில் என்ன வேலை?," என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
 

கார்த்தி - ரஞ்சனி திருமணம்... ஏற்பாடுகள் மும்முரம்!!


நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமண ஏற்பாடுகள் வெகு வேகமாக நடந்து வருகின்றன. கோவை கொடீஷியா அரங்கில் நடக்கும் இந்தத் திருமணத்துக்கு பல ஆயிரம் பேர் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுவதால், அதற்கேற்ற வகையில் சமையல், போக்குவரத்து வசதிகளைச் செய்வதில் சிவகுமார் குடும்பமே மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இளம் நடிகர்களில் முன்னணியி்ல் உள்ளவர் கார்த்தி. சிவகுமாரின் இளையமகன். இவருக்கும் ஈரோட்டைச் சேர்ந்த சின்னசாமி - ஜோதி மீனாட்சி தம்பதியின் மகள் ரஞ்சனிக்கும் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் ஈரோட்டில் உள்ள மணமகள் வீட்டில் நடந்தது.

தற்போது திருமண ஏற்பாடுகளில் கார்த்தி குடும்பத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கார்த்தியின் பூர்வீகம் கோவை. இப்போதும் அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமான உறவுக்காரர்கள் இங்கே வசிக்கிறார்கள். அது மட்டுமின்றி, மாவட்டம் முழுவதிலும் இவர்களுக்கு உறவினர்கள் உள்ளனர்.

கோவை மண்டலத்தில் உள்ள தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் அனைவருமே இந்தத் திருமணத்துக்கு வரவிருக்கிறார்கள். இவர்களைத் தவிர, தென்னிந்திய திரையுலகமே அன்றைய தினம் கோவையில் குவியவிருக்கிறது.

அதே நாளில் இயக்குநர் செல்வராகவனுக்கும் திருமணம் என்பதால், நடிகர் நடிகைகள் படப்பிடிப்பை ரத்து செய்துள்ளனர். எனவே ஒட்டுமொத்த திரையுலகமும் கோவைக்கு வருகிறது.

மணமகளுக்கு பக்கத்து மாவட்டமான ஈரோடுதான் சொந்த ஊர். இவர்களுக்கும் உறவுக்காரர்கள், நண்பர்கள் ஏராளம் என்பதால் பல ஆயிரக்கணக்கானோர் இந்தத் திருமணத்துக்கு திரண்டு வருவார்கள் என எதி்ர்ப்பார்க்கப்படுகிறது.

அனைவரையும் சிறப்பாக உபசரிக்க வேண்டும் என்பதற்காக சிவகுமார் குடும்பமே ஒவ்வொரு வசதியையும் பார்த்துப் பார்த்து செய்து வருகிறது.

விருந்தினர்கள் உணவு அருந்த, வாகனங்கள் நிறுத்த, ஓய்வாக அமர என எல்லாவற்றுக்கும் மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து இன்று நடந்த பிரஸ்மீட்டில் நடிகர் கார்த்தி கூறுகையில், "எங்களுக்கு சொந்தக்காரர்கள் நிறைய பேர். ஊரே சொந்தக்காரர்கள்தான். எல்லாரையும் கூப்பிட்டு வைத்து திருமணம் செய்வது எனக்கு மிகுந்த நிறைவாக உள்ளது. இவர்கள் அனைவருக்கும் எந்த சிறு குறையும் நேராத அளவுக்கு உபசரிப்பு நடக்க ஏற்பாடு செய்துள்ளோம். அதற்காகத்தான் கொடீசியா அரங்கை தேர்வு செய்தோம். திருமண நாள் நெருங்க நெருங்க இனம் புரியாத பரபரப்பை உணர்கிறேன்," என்றார்.

முதல்வர் பங்கேற்பு

திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஓட்டலில் 7-ந்தேதி மாலை 7 மணிக்கு நடக்கிறது. இதில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் திரளாக பங்கேற்று வாழ்த்த உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சூர்யா - ஜோதிகா திருமணத்தை நடத்தி வைத்தவரும் முதல்வர் ஜெயலலிதாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
 

IIFA awards : ரோபோட்டுக்கு 3 விருதுகள்!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news

IIFA awards : ரோபோட்டுக்கு 3 விருதுகள்!

6/27/2011 4:06:30 PM

இந்தியா சர்வதேச திரைப்பட விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன. ஷாருக் கான் சிறந்த நடிகராகவும், அனுஷ்கா சர்மா சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தி சினிமாவுக்காக, இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளில் மட்டுமே நடத்தப்படும் விழாதான் இஃபா எனப்படும் இந்தியா சர்வதேச திரைப்பட விழா. இதில் இந்தித் திரைப்படங்களுக்கும், இந்தி நடிகர், நடிகையருக்கும் மட்டுமே விருதுகள் வழங்கப்படும்.

கடந்த ஆண்டு கொழும்பில் இந்த விழா நடத்தப்பட்டது. ஆனால் உலகத் தமிழரக்ளின் ஒட்டுமொத்த கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா உள்ளிட்ட சூப்பர் ஸ்டார் நடிகர், நடிகைகள் விழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விழாவையே சப்பென்றாக்கி, பெரும் பிளாப் ஷோவாக்கி ராஜபக்சே அன் கோ முகத்தில் கரியைப் பூசினர்.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான விழா டோரண்டோவில் நடந்தது. இதில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. தபாங் படம் நிறைய விருதுகளைப் பெற்றது. சோனு சூத் சிறந்த வில்லனாக தேர்வானார். சோனாக்ஷி சின்ஹா சிறந்த புதுமுக நடிகையாக தேர்வு பெற்றார்.

சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், மை நேம் இஸ் கான் படத்துக்காக சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிச் சென்றார். அப்படத்தை இயக்கிய கரண் ஜோஹர் சிறந்த இயக்குநராக தேர்வானார்.

சிறந்த நடிகை விருது அனுஷ்கா சர்மாவுக்குக் கிடைத்தது. பந்த் பாஜா பாராத் படத்துக்காக இந்த விருது அவருக்குக் கிடைத்தது.

சிறந்த பின்னணிப் பாடகியாக மம்தா சர்மா விருது பெற்றார்.

ரோபோட்டுக்கு 3 விருதுகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, ஷங்கர் இயக்கி, ஐஸ்வர்யா ராய் நாயகியாக நடித்த ரோபோட் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்தன.

சிறந்த மேக்கப் கலைஞர் பானு, சிறந்த கலை இயக்குநர் சாபு சிரில், சிறந்த ஸ்பெஷல் எபக்ட் ஆகிய மூன்று பேருக்கும் ரோபோட் படத்துக்காக விருது கிடைத்தன.

 

நண்பனுக்கு ரஜினி வாழ்த்து!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நண்பனுக்கு ரஜினி வாழ்த்து!

6/27/2011 3:52:55 PM

ஷங்கர் இயக்கததில் விஜய், ஜீவா மற்றும் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடிக்கும் படம் 'நண்பன்'. படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வரும் நிலையில், சிங்கப்பூரிலிருந்து ரஜினி தனக்கு தொலைபேசி மூலம் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக ஷங்கர் தன்னுடைய வலையதளத்தில் தெரிவித்துள்ளார். தன்னுடைய வலையதளத்தில் நண்பன் சூட்டிங் ஸ்பாட்டில் தான் பிசியாக இருந்த போது தனக்கு சிங்கப்பூரிலிருந்து call ஒன்று வந்ததாகவும் அதில் ரஜினி சார் குரலை கேட்டதும் சந்தோஷ அடைந்தாகவும் ஷங்கர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரை தான் நலம் விசாரித்ததாக கூறிய ஷங்கர் (ரஜினி சார்)அவருடைய பேச்சில் புது தெம்பும் புத்துணர்ச்சியும் தெரிந்ததாக கூறினார். நண்பன் வெற்றி பெற வாழத்த தெரிவித்த ரஜினி இன்னும் 45 நாட்களில் சென்னை திரும்புவேன் என்று தன்னிடம் தொலைபேசியில் கூறினார் என்று ஷங்கர் குறிப்பிட்டுள்ளார்.




 

விஜய் டி.வி சினிமா விருது 2010!

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
விஜய் டி.வி சினிமா விருது 2010!

6/27/2011 3:32:34 PM

விஜய் டி.வி. சார்பில் ஆண்டுதோறும் பிரமாண்டமான முறையில், கலை நிகழ்ச்சிகளுடன் விருதுகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்தாண்டும் 2010ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதில் சிறந்த நடிகருக்கான விருது, "ராவணன்" படத்திற்காக விக்ரமுக்கும், சிறந்த நடிகைக்கான விருது, "அங்காடித் தெரு" படத்திற்காக அஞ்சலிக்கும் கிடைத்தது. சிறந்த வில்லன் நடிகனாக 'எந்திரன்' படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வழங்கப்பட்டது.

விருதுகள் விவரம் பின்வருமாறு:

சிறந்த நடிகர் : விக்ரம் (ராவணன்)

சிறந்த நடிகை : அஞ்சலி (அங்காடித் தெரு)

சிறந்த வில்லன் நடிகர் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (எந்திரன்)

சிறந்த நகைச்சுவை நடிகர் ; சந்தானம் (பாஸ் என்கிற பாஸ்கரன்)

சிறந்த இயக்குனர் : வசந்த பாலன் (அங்காடித் தெரு)

சிறந்த கதை மற்றும் திரைக்கதை : பிரபு சாலன் (மைனா)

சிறந்த இசையமைப்பாளர் : ஏ.ஆர்,ரகுமான் (விண்ணைத் தாண்டி வருவாயா)

சிறந்த குணச்சித்திர நடிகர் : தம்பி ராம்மையா (மைனா)

சிறந்த குணச்சித்திர நடிகை : சரண்யா (தென்மேற்கு பருவாக்காற்று)

சிறந்த ஒளிப்பதிவு : ரத்னவேலு (எந்திரன்)

சிறந்த புதுமுக நடிகர் : வித்தார்த் (மைனா)

சிறந்த புதுமுக நடிகை : அமலா பால் (மைனா)

சிறந்த பொழுதுபோக்கு படம் : சிங்கம்

சிவாஜி கணேசன் விருது : இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்

மக்களால் தேர்வு செய்யப்பட்ட விருதுகள்!

Favourite ஹீரோ : ரஜினிகாந்த் (எந்திரன்)

Favourite ஹீரோயின் : த்ரிஷா (விண்ணைத் தாண்டி வருவாயா)

Favourite டைரக்டர் : ஷங்கர் (எந்திரன்)

Favourite படம் : எந்திரன்