படத் தயாரிப்பாளரை மிரட்டி ரூ. 5 லட்சம் பணம் பறித்தவர் விஜயலட்சுமி-சீமான்

|

Tags:



பலரையும் மிரட்டிப் பணம் பறிப்பதே நடிகை விஜயலட்சுமியின் தொழில். சமீபத்தில்கூட ஒரு தயாரிப்பாளரை மிரட்டி ரூ. 5 லட்சம் பணம் பறித்துள்ளார் அவர். அவரை யாரோ சிலர் பின்னாலிருந்து இயக்குகிறார்கள். அவருக்கு யாருடன் எல்லாம் தொடர்பு உள்ளது என்று திரையுலகில் அனைவருக்கும் தெரியும் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவரான இயக்குநர் சீமான்.

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி சுமத்தியுள்ள பரபரப்பான குற்றச்சாட்டுக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் விஜயலட்சுமியின் முந்தைய செயல்பாடுகள் குறித்து அறிந்தவர்களுக்கு இது அதிர்ச்சியை அளிக்கவில்லை.

ஏற்கனவே கன்னட நடிகர் ஒருவருடன் 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருவதாக கூறியவர் விஜயலட்சுமி. ஆனால் அந்த வாழ்க்கையை பின்னர் உதறி விட்டு வந்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பான நடிகை ராதிகாவின் தங்க வேட்டை நிகழ்ச்சியில் நடித்தபோது அதன் இயக்குநர் மீது சரமாரியான புகார்களைக் கூறியவர். அதில் உணமை இல்லை என்று பின்னர் தெரிய வந்தது. பின்னர் தற்கொலைக்கு முயன்று பரபரப்பை ஏற்படுத்தினார். இப்படி அடிக்கடி சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த அவர் தற்போது சீமான் மீது குற்றம் சாட்டி புகார் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில்ஒரு தயாரிப்பாளரை மிரட்டி ரூ. 5 லட்சம் பணம் பறித்தார் விஜயலட்சுமி என்று சீமான் தெரிவித்துள்ளார்.

பார்த்தே ஒன்றரை வருடமாகிறது

இதுகுறித்து அவர் கூறுகையில்,

விஜயலட்சுமியை நான் நேரில் பார்த்து பேசியே ஒன்றரை வருடம் ஆகிறது. வாழ்த்துகள் படத்தில் நடித்தபோது கூட நான் அவருடன் அதிகம் பேசிக் கொள்ளவில்லை.

பணம் கேட்டு மிரட்டி நான் பணியாததால் என் மீது புகார் கொடுத்துள்ளார். அவரை யாரோ பின்னணியில் இருந்து இயக்குகிறார்கள். மிரட்டி பணம் பறிப்பது விஜயலட்சுமிக்கு வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

தயாரிப்பு நிர்வாகி ஒருவர் கூட சமீபத்தில் ரூ.5 லட்சத்தை இழந்துள்ளார். அவரை மிரட்டி பணம் வாங்கியுள்ளார்.

விஜயலட்சுமி யார் யாருடன் பழகி உள்ளார் என்பது ஊரறிந்த விஷயம். அரசியலில் எனக்கு இருக்கும் புகழை கெடுக்க திட்டமிட்டு நடத்தப்படும் இந்த சதித்திட்டத்தால் என்னை வீழ்த்தி விட முடியாது என்றார் சீமான்.

 

Post a Comment