ராதாரவி மகன் ஹரி திருமண வரவேற்பு-ஜெயலலிதா வாழ்த்து

|

Tags:



சென்னை: அதிமுகவைச் சேர்ந்த நடிகர் ராதாராவியின் மகன் ஹரி ராதாரவியின் திருமண வரவேற்பில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு ஹரி ராதாராவியையும், மணப்பெண் திவ்யா என்கிற மகாலட்சுமியையும் வாழ்த்தி ஆசிர்வதித்தார்.

ஹரி ராதாராவிக்கும், பெங்களூரைச் சேர்ந்த மோகன்-சாந்தி தம்பதியின் மகளான திவ்யா என்கிற மகாலட்சுமிக்கும் இன்று சென்னை வானகரம் ஸ்ரீவாரி வெங்கேடஸ்வரா திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது.

முன்னதாக இவர்களின் திருமண வரவேற்பு நேற்று நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு புதுமணமக்களை வாழ்த்தி ஆசிர்வதித்தார்.

அமைச்சர்கள், அதிமுக பிரமுகர்கள், திரையுலகினர் என பலரும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

 

Post a Comment