ஷோலே படத்தில் வெள்ளைப் புடவையுடன் விதவை கோலத்தில் நடித்திருப்பார் ஜெயாபாதுரி. கிட்டத்தட்ட அதே கெட்டப்பில் டபுள் தமால் படத்தில் நடித்துள்ளாராம் கங்கணா.
இது ஒரு காமெடிப் படம். இந்திர குமார் இயக்கியுள்ளார். படத்தில் வரும் ஒவ்வொரு சீனும் குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்குமாம். அதேசமயம். யாரையும் புண்படுத்தும் நோக்கில் எந்த சீனையும் அவர் வைக்கவில்லையாம்.
ஜெயாபாதுரியின் ஷோலே கேரக்டரை மனதில் வைத்துத்தான் கங்கணாவின் ரோலை வடிவமைத்தாராம் இந்திர குமார். இந்த வேடத்தில் கவர்ச்சி இல்லாமல் வருகிறார் கங்கணா. அதேசமயம், படம் முழுக்க அவரை அப்படி நடமாட விட்டால் ரசிகர்கள் வாடிப் போய் விடுவார்கள் என்பதற்காக சில காட்சிகளில் மட்டும் கவர்ச்சி காட்ட வைத்துள்ளனராம்.
கங்கணாவை இப்படிக் காட்டினால் ரசிகர்கள் மனம் என்ன பாடுபடும் என்று இந்திரகுமாரிடம் கேட்டால், நிச்சயம் இந்த கங்கணாவையும் மக்கள் ரசிப்பார்கள். அது படம் வந்த பிறகு அனைவருக்கும் புரியும். ரசிகர்களை ஏமாற்றாத வகையில்தான் கங்கணாவின் ரோல் வைக்கப்பட்டுள்ளது என்றார்.
படத்தில் மல்லிகா ஷெராவத்தும் இருக்கிறார். பிறகென்ன கங்கணா கைவிட்டால் மல்லிகா மலைக்க வைப்பார் என்று நம்பலாம்
Post a Comment