மேகா நாயர் இனி மேக்னா நாயர்!

|

Tags:



மேகா நாயர் தனது பெயரை நியூமராலஜிப்படி மேக்னா நாயர் என மாற்றிக் கொண்டு விட்டார்.

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த வலுவான நாயகி மேகா நாயர். கவர்ச்சியை கரைபுரள விட்டாலும் கூட மேகாவைத் தேடி பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. இதனால் சற்றே அப்செட் ஆனாலும் தனது கவர்ச்சி நடிப்பை மட்டும் மேகா தளர்த்தி்க கொள்ளவில்லை. இருந்தாலும் வாய்ப்புகள் தேடி ஓடி வரவில்லை. வயதாகிப் போன சத்யராஜுக்கு ஜோடியாக தங்கம் படத்தில் கவர்ச்சியை கன்னாபின்னாவென காட்டி நடித்தும் பார்த்தார். ம்ஹூம், வாய்ப்பே வரவில்லை.

தற்போதுதான் காதலிச்சுப் பார் என்ற படத்தில் தனி நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் தனக்கு நல்ல கேரக்டர் என்றும் இப்படம் தனக்கு பிரேக் தரும் என்று நம்பி வருகிறார் மேகா.

இடையில் தாய் மொழியான மலையாளத்தில் நடிக்கும் வாய்ப்பு வரவே அதையும் பிடித்துக் கொண்டு நடித்து வருகிறார். இந்த நிலையில் சில பலரின் ஆலோசனைப்படி தனது பெயரை மேக்னா நாயர் என்று மாற்றியிருக்கிறார் மேகா.

தமிழில் தற்போது காதலிச்சுப் பார், நெல்லை சந்திப்பு என இரு படங்களில் நடித்து வருகிறாராம் மேகா. இதில் நெல்லை சந்திப்பு படத்தில் செம கேரக்டராம். கவர்ச்சியுடன், நடிக்கவும் வாய்ப்பாம். படு ஜாலியான பெண்ணாக இதில் வலம் வந்துள்ளாராம் மேகா.

யாரைப் பார்த்தாலும் மேகா சொல்வது, இனி என்னை மேக்னா என்றே சொல்லிக் கூப்பிடுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறார் மேகா.

 

Post a Comment