7/26/2011 2:42:53 PM
கோலிவுட்டிலிருந்து டோலிவுட்டுக்கு சென்று ஒரு ரவுண்ட் வந்தார் சார்மி. சமீபத்தில் 'புட்டா ஹோகா தேரா பாப்' படம் மூலம் பாலிவுட்டுக்கு சென்றார். அடுத்து 'ஜில்லா காஸியாபாத்Õ என்ற படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இதற்கிடையில் அப்படத்தில் அவர் நடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சஞ்சய்தத், விவேக் ஓபராய், அர்ஷத் வர்சி என 3 ஹீரோக்கள் நடிக்கிறார்கள். இதில் சார்மிக்கு எதிராக பிரச்னை கிளப்புகிறாராம் விவேக் ஓபராய். 'சார்மியுடன் நான் சேர்ந்து நடிக்க மாட்டேன். அவருக்கு பதிலாக வேறு ஹீரோயினை ஒப்பந்தம் செய்யுங்கள்' என்று இயக்குனரிடம் கூறியதாக தெரிகிறது. இது பற்றி சார்மியிடம் கேட்டபோது, ''ஜில்லா காஸியாபாத் படத்தில் நடிப்பேனா, மாட்டேனா? என்பதை இப்போது உறுதியாக சொல்ல முடியாது. விவேக் ஓபராய் என்னை நீக்க சொல்லி கேட்கிறாரா என்பதும் தெரியாது. எனக்கு இந்த படம் கிடைக்க வேண்டும் என எழுதியிருந்தால் யாராலும் அதை தடுக்க முடியாது" என்றார்.
Post a Comment