மும்பையில் யாசகம் கேட்ட பெண்ணுக்கு ரூ. 5,000 கொடுத்த பாரிஸ் ஹில்டன்

|


மும்பை: வியாபார விஷயமாக இந்தியா வந்துள்ள சோஷியலைட் பாரிஸ் ஹில்டன் கைக்குழந்தையுடன் வந்து யாசகம் கேட்ட பெண்ணுக்கு ரூ. 4,943 கொடுத்தார்.

நடிகை, சோஷியலைட், கோடீஸ்வரி, தொழிலதிபர், மாடல் அழகி என பல அவதாரங்களைக் கொண்டவர் பாரிஸ் ஹில்டன். தனது கைப்பைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்த 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். கைப்பைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை அறிமுகப்படுத்திய அவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் ஆசையும் வந்துள்ளது.

இந்தியாவும், இந்தியப் பெண்களும் அழகு என்று புகழ்ந்து தள்ளியுள்ளார்.

நேற்று மும்பையின் அந்தேரி பகுதியில் சிக்னலில் பாரிஸ் ஹில்டன் கார் நின்று கொண்டிருந்தது. அப்போது கைக்குழந்தையுடன் வந்த பெண் கார் கண்ணாடியைத் தட்டி பிச்சை கேட்டுள்ளார். உடனே பாரிஸ் 100 டாலர் (ரூ. 4,943) நோட்டை எடுத்து அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார்.

தனக்கு எவ்வளவு ரூபாய் கிடைத்துள்ளது என்பதை அறியாத அந்த பெண் அங்கு நின்று கொண்டிருந்த புகைப்படக்காரரிடம் போய் நோட்டை நீட்டி சில்லறை கேட்டுள்ளார்.

இந்தியாவில் உள்ள வறுமைக் கொடுமையைப் பற்றி பாரிஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்தியா மிகவும் அழகான நாடு. ஆனால் சில பகுதிகள் வறுமைக் கொடுமை உள்ளது. தெருவில் படுத்துத் தூங்கும் குழந்தைகளைப் பார்த்து என் இதயம் உடைந்துவிட்டது என்று அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 

Post a Comment