9/13/2011 3:48:11 PM
நந்தா கூறியது: 'வந்தான் வென்றான் படத்தில் ஜீவா, நான், டாப்ஸி என 3 பேர் இருந்தாலும் காதல் கதை அல்ல. நானும் டாப்ஸியும் சந்திக்கும் காட்சிகளே படத்தில் கிடையாது. மூன்று பேருக்கும் தனித்தனி கதை உள்ளது. இதில் தாதா வேடம் ஏற்கிறேன். அடுத்து 'வேலூர் மாவட்டம்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறேன். இதற்காக சிறப்பு பயிற்சி பெற்றேன்.
சாரதா ராமநாதன் இயக்கும் 'திருப்பங்கள்Õ படத்தில் ஆண்ட்ரியாவுடன் நடிக்கிறேன். செல்வராகவன் படத்திலிருந்து சில பிரச்னையால் விலகிய ஆண்ட்ரியா, உங்கள் படத்துக்கும் பிரச்னை செய்கிறாரா? என்கிறார்கள். அப்படி எந்த பிரச்னையும் செய்யவில்லை. தொழில் ரீதியாக தனது பணியை அணுகுகிறார். அதைப் பார்க்கும்போது அவர் மீது கூறப்படும் புகார்களை நம்ப முடியவில்லை.
Post a Comment