9/13/2011 3:46:29 PM
ரஜினி உள்பட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து கோலிவுட்டில் வலம் வந்த ஸ்ரேயா 'ரவுத்திரம்’ படத்துக்கு பிறகு புதிய தமிழ் படம் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை. இது பற்றி கேட்டபோது அவர் கூறியது: நேற்றுமுன்தினம் எனது பிறந்தநாள். இதற்காக தாம்தூம் பார்ட்டி எதுவும் நடத்தவில்லை. எளிமையாக கொண்டாடினேன். மும்பையில் அப்பா, அம்மாவுடன் பொழுதை கழித்த பிறகு நான் நடத்தும் அழகு நிலையத்துக்கு சென்றேன்.
அங்கு பார்வையற்ற பெண்கள் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கு இனிப்பு வழங்கி ஜாலியாக பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் 'கலி கலி மே சோர் ஹேÕ இந்தி பட ஷூட்டிங்கில் கலந்துகொண்டேன். 'ரவுத்திரம்’ ரிலீசுக்கு பிறகு தமிழில் புதுபடம் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை. தீபா மேத்தாவின் 'மிட்நைட்ஸ் சில்ரன், மற்றும் 'ஹீரோ ஆகிய இந்தி படங்களில் பிஸியாக இருக்கிறேன்.
Post a Comment