ஒரே படத்தில் 50 வேடங்களில் நடிக்க விக்ரம் ஆசை

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒரே படத்தில் 50 வேடங்களில் நடித்து சாதனை செய்வேன் என்று விக்ரம் கூறினார். விக்ரம் நடித்து வெளிவந்துள்ள படம் 'ராஜபாட்டை'. இதில் அவர் 15 கெட்அப்களில் நடித்துள்ளார். படம் பற்றி விக்ரம் நிருபர்களிடம் கூறியதாவது: 'காசி', 'பிதாமகன்', 'தெய்வத் திருமகள்' போன்ற கனமான படங்களில் நடித்தாலும் 'சாமி', 'தூள்' மாதிரி கமர்சியல் படங்களிலும் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். அப்படி ஒரு படம்தான் இது. ஜனரஞ்சக படங்களிலும் முழு ஈடுபாட்டோடு நடிக்கிறேன். இதுவரை நடித்த படங்களில் அதிக உழைப்பை கொடுத்த படம், 'ராஜபாட்டை'தான். காரணம் நிறைய கெட்அப்புகள் போட்டிருக்கிறேன். ஒவ்வோரு கெட்அப்பிற்கும் பலமணி நேரம் மேக்கப்பிற்காக செலவிட்டிருக்கிறேன். நிறைய கெட்அப்களில் நடிப்பது யாருக்கும் போட்டியாக இல்லை. என்னால், ஒரு படத்தில் 50 கெட்அப்பில் கூட நடிக்க முடியும். அப்படி நடித்து விரைவில் சாதனை படைப்பேன். எனது எல்லா படங்களிலும் மெசேஜ் இருக்கும். அதை நேரடியாக கூறாமல் உணர வைப்பதுதான் சினிமா. இதில் நில அபகரிப்பு பற்றி சொல்லியிருக்கிறோம். இவ்வாறு விக்ரம் கூறினார்.


 

Post a Comment