பாலிவுட் படத்தில் நடிக்கிறார் விக்ரம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மணிரத்னம் உதவியாளர் இயக்கும் இந்தி படத்தில் நடிக்கிறார் விக்ரம். இதுபற்றி விக்ரம் கூறியதாவது: தில், தூள் பாணியில் ஆக்ஷனுடன் கூடிய கமர்ஷியல் படத்தில் நடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் கமர்ஷியல் கதையில் நடிக்க எண்ணினேன். சுசீந்திரன் இயக்கத்தில் நடித்துள்ள 'ராஜபாட்டை' இந்த பாணியிலான படம்தான். இப்படத்தில் 17 கெட்டப்கள் இடம்பெற்றிருக்கின்றன. இதில் சில கெட்டப் சில நொடிகள் மட்டுமே இடம்பெறும். ஆனாலும் அதற்காக நேரம் எடுத்து ஹாலிவுட் வில்லன்களின் லிஸ்ட் தயாரித்து அவர்களைப்போல் மேக் அப் அணிந்தேன்.

மணிரத்னத்தின் 'ராவணன்' படத்துக்கு பிறகு பிஜாய் நம்பியார் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க உள்ளேன். இவர் 'குரு', 'ராவணன்' ஆகிய படங்களில் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். ஜனவரிக்கு பிறகு இதன் ஷூட்டிங் தொடங்கும். இவ்வாறு விக்ரம் கூறினார்.


 

Post a Comment