ஒரே மாதிரியான கேரக்டர்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று அமலா பால் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: 'மைனா'வுக்கு பிறகு அதே மாதிரியான பாவாடை தாவணி கேரக்டர்கள்தான் வரும் என்று பயந்தேன். 'தெய்வத்திருமகள்' படத்தில் அழுத்தமான கேரக்டர் கிடைத்தது. ஆனாலும் கிளாமராக நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். அப்போதுதான் 'வேட்டை' கிடைத்தது. 'மைனா' அமலாவா என்று வியக்கிற அளவுக்கு கிளாமராக நடித்திருக்கிறேன். 'முப்பொழுதும் உன் கற்பனைகள்' படம் வேறு மாதிரி இருக்கும். நடிப்பை வெளிப்படுத்தும் நல்ல வேடம் அதில் கிடைத்திருக்கிறது. ஒரு படத்தில் நடித்தது போன்று அடுத்து படத்தில் நடிக்கக் கூடாது என்று விரும்புகிறேன். சவாலான கேரக்டரில் நடிக்க வேண்டும், ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் கேரக்டரிலும் நடிக்க வேண்டும்.
இவ்வாறு அமலா பால் கூறினார்.
இவ்வாறு அமலா பால் கூறினார்.
Post a Comment