'நான் கட்டியுள்ள புதிய வீட்டில் புத்தாண்டை சிறப்பாகக் கொண்டாட இருக்கிறேன்' என்று சமீரா ரெட்டி கூறினார். இது பற்றி சமீரா கூறியதாவது: சினிமாவில் நடிப்பதை தாண்டி, வேறு சில சந்தோஷங்களும் எனக்கு இருக்கிறது. கடந்த பன்னிரெண்டு வருடங்களாக நடன நிகழ்ச்சிகளில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறேன். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வருமானத்தை நான் நடத்திவரும் அனாதை இல்ல சிறுவர்களுக்காகச் செலவழித்து வருகிறேன். நடிக்க வருவதற்கு முன்பே இதை செய்து வருகிறேன். இந்த மாதம் எனக்கு ஸ்பெஷலானது. ஏனென்றால் இந்த மாதத்தில்தான் எனது பிறந்தநாள் வருகிறது. அதுமட்டுமல்லாமல் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களும் இந்த மாதம் இருக்கிறது. இந்த வருட புத்தாண்டை எனது புதிய வீட்டில் கொண்டாட இருக்கிறேன். இப்போதே எனக்கு அதிக சந்தோஷத்தை அது தருகிறது. இதற்கு சினிமா நண்பர்களையும் அழைத்திருக்கிறேன். எனது குடும்பத்தினரும் எனக்காக வீட்டை அலங்கரிப்பதில் பிசியாக இருக்கிறார்கள்.
Post a Comment