மத்திய அரசின் சேவை வரியை திரும்பப் பெறக்கோரி, வரும் 23ம் தேதி இந்தியா முழுவதும் சினிமா ஸ்டிரைக் நடக்கிறது. அன்று தமிழகத்தின் அனைத்து தியேட்டர்களிலும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படுகிறது. இதுபற்றி தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் விடுத்துள்ள அறிக்கையில், "மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் சேவை வரியை ரத்து செய்யக் கோரி இந்தியா முழுவதும் திரைத்துறையினர் அனைவரும் அதாவது தயாரிப்பு, திரையரங்கம் அனைத்தும் மூடுவது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி சென்னை நகரிலுள்ள அனைத்து தியேட்டர்களிலும் காட்சிகளும் ரத்து செய்யப்படுகின்றது" என்று கூறியுள்ளார்.
Post a Comment