ஐ.டி கம்பெனியில் பணியாற்றுபவர்களின் காதல் கதையாக 'லீலை' படம் உருவாகியுள்ளது என்றார் அதன் இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ். ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம், 'லீலை'. ஷிவ், மான்ஸி, சந்தானம், சுகாசினி உட்பட பலர் நடித்துள்ளனர். வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தை இயக்கியுள்ள ஆண்ட்ரூ லூயிஸ் கூறியதாவது: இது புதுமையான காதல் படம். ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் நான்கு பேரை சுற்றிய கதைதான் இது. பொதுவாக காதலுக்கு ஜாதி, மதம், மாமன் மகன், உறவினர் என்றுதான் வில்லன் இருக்கும். இதில் அப்படியில்லை. அவர்களே பிரச்னை ஏற்படுத்துவார்கள். அவர்களே சாமாதானப்படுத்திக்கொள்வதுபோல் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திரைக்கதை ஒரு த்ரில்லர் படத்துக்கானதை போல பரபரப்பாக இருக்கும். அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது போல் இருக்கும். சந்தானம் தனி டிராக்காக இல்லாமல் கதையோடு இணைந்து படம் முழுவதும் வருகிறார். அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் காமெடியாக இருக்கும். வேல்ராஜின் ஒளிப்பதிவு புது அனுபவத்தைக் கொடுக்கும். படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது. இவ்வாறு ஆண்ட்ரூ லூயிஸ் கூறினார்.
Post a Comment