கோச்சடையானுக்காக சென்னை வந்தார் தீபிகா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வழங்க, மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் படம், 'கோச்சடையான்'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோ. அவர் ஜோடியாக, தீபிகா படுகோன் நடிக்கிறார். ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யா இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை. இயக்கம் மேற்பார்வை கே.எஸ்.ரவிக்குமார். இந்தப் படத்தின் ஸ்பெஷல் மேக்கப் டெஸ்டுக்காக தீபிகா படுகோன் நேற்றுமுன்தினம் சென்னை வந்தார். அப்போது அவரது தோற்றம் ஸ்கேன் செய்யப்பட்டது.

"படத்துக்காக, ஸ்கின்டோன் உட்பட தீபிகாவின் தோற்றத்தை நவீன டெக்னிக்கை பயன்படுத்தி மாற்றம் செய்கின்றனர். தனது தோற்றம் மாற்றப்படுவதற்கு தீபிகா ஒப்புக்கொண்டுள்ளார். உடல் அசைவுகள் தெளிவாக வரவேண்டும் என்பதற்காக தீபிகாவை ஸ்கேன் செய்துள்ளனர். இந்திய சினிமாவில் முதன் முறையாக 'பெர்பாமன்ஸ் கேப்சரிங்' என்ற நவீன டெக்னாலஜி இந்தப் படத்துக்காக பயன்படுத்தப்படுகிறது" என்று பட யூனிட் தெரிவித்துள்ளது.

மேலும் இதில் சிவபெருமான் போல ஆக்ரோஷமாக, ரஜினி நடனமாடும் மூன்று நிமிட காட்சி இடம்பெற இருக்கிறது. சிவசங்கர் மாஸ்டர் நடனம் அமைக்க இருக்கிறார். மார்ச் முதல் வாரத்தில், பாடல் காட்சிகள் ஷூட்டிங்கிற்காக படக்குழு லண்டன் செல்கிறது.


 

Post a Comment