திரைப்பட தயாரிப்பாளர்கள், தொழிலாளர்கள் ஊதிய விவகாரத்தில் படம் எடுக்காத தயாரிப்பாளர்கள்தான் பிரச்னை செய்கிறார்கள் என்று அமீர் கூறினார். ஸ்ரீலட்சுமி நரசிம்மா கிரியேஷன்ஸ் சார்பில் சி.எச்.மயூரி சேகர் தயாரிக்கும் படம், 'மாலைப் பொழுதின் மயக்கத்திலே'. ஆரி, சுபா நடிக்கிறார்கள். நாராயண் நரேந்திரராவ் இயக்குகிறார். இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் இயக்குனர் அமீர் பேசியதாவது: இந்தப் படத்தின் தயாரிப்பாளர் இங்கே சந்தோஷமாக பேசினார்.
சிறிய தயாரிப்பாளர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்பதற்கு இவரே உதாரணம். படம் தயாரிப்பவர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள். வேலை செய்பவர்களும் சந்தோஷமாக இருக்கிறார்கள். படம் தயாரிப்பவர்கள் படம் தயாரிக்க தயாராக இருக்கிறார்கள். தொழிலாளர்கள் வேலை செய்ய தயாராக இருக்கிறார்கள். படம் தயாரிக்காதவர்கள்தான் பிரச்னை செய்கிறார்கள். ஒரு அறையில் உட்கார்ந்து ஒரு மணி நேரத்தில் தீர்க்கூடிய பிரச்னையை, படம் எடுக்காத யாரோதான் பெரிதாக்குகிறார்கள்.
இவ்வாறு அமீர் பேசினார். விழாவில், இயக்குனர்கள் சேரன், தாமிரா, பாலாஜி மோகன், நடிகர்கள் விமல், சாந்தனு, பிருத்விராஜ். அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மயூரி சேகர் வரவேற்றார். முடிவில், இயக்குனர் நாராயண் நாகேந்திரராவ் நன்றி கூறினார்.

Post a Comment