கோடி, கோடியா கொடுத்தாலும் பார்ட்டிகளில் ஆட மாட்டேன்: ஜான் ஆபிரகாம்

24 I Never Perform At Weddings Birthdays John Aid0128  
கோடி, கோடியாகப் பணம் கொத்தாலும் திருமணம் மற்றும் பிறந்தநாள் பார்ட்டிகளில் ஆட மாட்டேன் என்று இந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.

பணக்காரர்கள் தங்கள் வீட்டு பிறந்தநாள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு பிரபல நடிகர், நடிகையரை அழைத்து நடனமாட வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி ஒரு வைர வியாபாரி தனது திருமணத்திற்கு வந்து ஆடுமாறு ஜான் ஆபிரகாமை அழைத்துள்ளார். சும்மா இல்ல ரூ. 6 கோடி தருகிறேன் என்றிருக்கிறார். ஆனால் ஜான் வர மறுத்துவிட்டார்.

இந்த ஜான் பிழைக்கத் தெரியாதவரா இருக்காரே. யாராவது ரூ. 6 கோடிய வேண்டாம்னு சொல்லுவார்களா என்று பாலிவுட்டில் சிலர் கூறுகின்றனர்.

ஜான் ஆபிரகாம் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா,

நான் நடிக்க வந்ததில் இருந்தே இது போன்று பலர் என்னை அழைக்கி்ன்றனர். தற்போது என்ன வித்தியாசம் என்றால் ஆண்டுதோறும் தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. இவ்வளவு பணம் தருகிறேன் என்று சொல்லியும் மறுக்கலாமா என்று பலர் என்னைக் கேட்கின்றனர். ஆனால் நான் இன்னும் மறுத்து தான் வருகிறேன். திருமணம், பிறந்தநாள் விழாக்களில் ஆடமாட்டேன் என்பது என் கொள்கை. அதே போன்று மது மற்றும் சிகரெட் விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன்.

பலர் என்னிடம் இது போன்ற விழாக்களுக்கு வரும் அழைப்பை ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர். ஒரு நடிகனை திரையில் தான் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

யார் என்றே தெரியாதவர்கள் வீட்டு விழாக்களில் நான் எப்படி ஆட முடியும். பலர் என்னை முட்டாள் என்று சொல்வது எனக்குத் தெரியும் என்றார்.
 

புகைப்பதை நான் விட்டுவிட்டேன்.. நீயும் விட்டுடு அம்பரீஷ்! - சூப்பர் ஸ்டார் ரஜினி

Rajini Asks Ambareesh Give Up Smoking   
பெங்களூர்: புகைப் பிடிப்பதை நான் விட்டுவிட்டேன். நீயும் அந்தப் பழக்கத்தை விட்டுவிடு அம்பரீஷ், என சூப்பர் ஸ்டார் ரஜினி கூறினார்.

கன்னட நடிகர் அம்பரீசின் 60-வது பிறந்தநாள் விழா பெங்களூரில் நடந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர், நடிகைகள் விழாவில் பங்கேற்று அம்பரீசின் 40 ஆண்டு கால திரையுலக சாதனைகளை பாராட்டிப் பேசினர். ரஜினியும் நேரில் வாழ்த்தினார்.

அவர் பேசும்போது, அம்பரீஷ் திறமையான நடிகர். அவரிடம் கிருஷ்ணர், பீமன், சகுனி, துரியோதனன் அம்சங்களைப் பார்க்கிறேன். சமையலில் பீமனுக்கு நிகர் அவர். பிரியாணி சாப்பிடுவதற்காக அவரது வீட்டுக்கு போவேன். கர்ணனைப் போன்ற கொடையாளி.

துரியோதனனைப் போல அனைத்து நல்லது கெட்டதுகளையும் அறிந்தவர் அவர். துரியோதனனைப் போலவே, கெட்ட விஷயம் தெரிந்த பிறகும் விடாமல் இருக்கிறார்.

புகை பிடிப்பதனால் வரும் பாதிப்புகள் அம்பரீசுக்கு தெரியும். ஆனாலும் அதை அவர் விடவில்லை. புகைப் பழக்கத்தால்தான் என் உடல்நிலை இந்த அளவு பாதிக்கப்பட்டது. அதனால் நான் அடியோடு அதை விட்டுவிட்டேன். அம்பரீஷ், நீயும் இந்தப் பழக்கத்தை இன்றோடு விட்டுவிடு," என்றார்.

தொடர்ந்து சத்ருகன் சின்ஹா பேசுகையில், "புகைப்பிடிக்கும் பழக்கத்தை அம்பரீஷ் விட்டு விட வேண்டும். ரஜினி, அம்பரீஷ் மற்றும் நான் சினிமாவில் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பவர்கள். சில வருடங்களுக்கு முன் புகையிலை ஒழிப்பு தினமான மே 31-ல் சிகரெட் பிடிப்பதை நான் நிறுத்தி விட்டேன். ரஜினியும் நிறுத்திவிட்டார்.

அதுபோல் அம்பரீஷும் இப்பழக்கத்தை விட வேண்டும். புகையை விடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும். ரசிகர்கள் நீண்ட காலம் அவரை பார்க்கவேண்டும்," என்றார்.
Close
 
 

தனுஷ் படத்தில் ப்ரியா ஆனந்த்!

Priya Anand Dhanush Movie    | ப்ரியா ஆனந்த்  
தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ப்ரியா ஆனந்த்.

'3' படத்தைத் தயாரித்த நிறுவனம்தான் இந்த வுண்டர்பார். கஸ்தூரி ராஜா குடும்ப நிறுவனம்.

பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான எதிர்நீச்சல் படத்தை இந்த நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார் தனுஷ்.

சிவ கார்த்திகேயன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ப்ரியா ஆனந்த்.

வெற்றிமாறனிடம் பணியாற்றிய செந்தில் இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

கொலை வெறிடி பாட்டைத் தந்த அனிருத் இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார். இந்த செய்தி வெளியானதிலிருந்து படம் குறித்த விசாரிப்புகள் ஆரம்பமாகிவிட்டனவாம்.

அதேநேரம், முன்பு 3 படத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை இந்தப் படம் மூலம் ஈடுகட்டிவிடுவதாக தனுஷ் தரப்பு உறுதியளித்துள்ளதாம்!
Close
 
 

தமிழ், தெலுங்கில் தயாராகும் கஹானி - நேமிச்சந்த் ஜபக் தயாரிக்கிறார்!

Kahani Speak Tamil Telugu
இந்தியில் பெரும் வெற்றி பெற்ற கஹானி திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதுகுறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தி தொலைக்காட்சி தொடர்கள் தயாரிப்பில் புகழ் பெற்று விளங்கும் என்டிமால் இன்டியா பிரைவேட் லிட் நிறுவனம், நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவன‌த்தோடு இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

சுஜாய் கோஷ் எழுதி இயக்கிய கஹானியில் வித்யாபாலன் கதாநாயகியாக நடித்திருந்தார். கொல்கத்தாவில் துர்கா பூஜையின்போது காணாமல் போன தனது கனவரை தேடும் பெண்ணாக வித்யாபாலன் நடித்துள்ளார். அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்ட இந்த ப‌டம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

இந்த படத்தை தமிழில் இயக்குவதற்காக மூன்று முன்ணணி இயக்குனர்களோடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இரண்டு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. விரைவில் இயக்குனர் மற்றும் கதாநாயகி பெயர் வெளியாகிறது.

நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் தமிழில் நான் அவன் இல்லை,மிஷ்கினின் அஞ்சாதே, பாண்டி, தனுஷின் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்கள் தயாரித்துள்ளது.
Close
 
 

ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கு அமெரிக்காவில் பாராட்டு

Us Tamils Felicitate Rajini Daughter Aishwarya
சென்னை: 3 படத்தை இயக்கியதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அமெரிக்காவில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில், இந்திய திரைப்பட விழா நடந்தது. அந்த விழாவில், ஐஸ்வர்யா இயக்கிய '3' படம் திரையிடப்பட்டது. அதில் கலந்து கொள்வதற்காக, ஐஸ்வர்யா அமெரிக்கா சென்றிருந்தார்.

விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யாவுக்கு பாராட்டுகள் குவிந்தன.

பின்னர், நியூயார்க்கில் உள்ள தமிழ் சங்கம் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவிலும் ஐஸ்வர்யா தனுஷ் கலந்து கொண்டார்.

தமிழ் சங்கத்தின் தலைவர் பிரகாஷ் எம்.சுவாமி பேசும்போது, ஐஸ்வர்யா தனுசின் எளிமையையும், படைப்பாற்றலையும் பாராட்டினார். ஐஸ்வர்யா தனுஷ், மிக சிறந்த பரத நாட்டிய கலைஞர் என்றும், அதற்காக அவர் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளதையும் குறிப்பிட்டுப் பேசினார்.

விழாவின் இறுதியில், ஐஸ்வர்யா தனுசுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
Close
 
 

மக்கள் டிவியின் ‘கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை’

Makkal Tv S Konjam Arattai Konjam Settai
மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கொஞ்சம் அரட்டை கொஞ்சம் சேட்டை’ நிகழ்ச்சியை தற்செயலாக காண நேரிட்டது. இது ஆரம்பத்தில் கொஞ்சம் நகைச்சுவையான நிகழ்ச்சியாக இருந்தாலும் இப்பொழுது கொஞ்சம் வில்லங்கமான நிகழ்ச்சியாக மாறிவருகிறதோ என்று நேயர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

புதன்கிழமை மாலையில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அப்படித்தான் ஒரு கல்லூரி மாணவி சிக்கினார். நிகழ்ச்சி தொகுப்பாளர் அந்த பெண்ணிடம் கேட்ட கேள்வி கொஞ்சம் சிக்கலானதுதான். தொகுப்பாளரோ கல்லூரியில் உங்கள் ஆசிரியருக்கு நீங்கள் வைத்திருக்கும் பட்டப்பெயர் சொல்லுங்களேன் என்று கேட்டதுதான் தாமதம் அதற்கு அந்த மாணவி சற்றும் தயங்காமல் “ பப்பர் வாயன்” என்று கூறிவிட்டு அதற்கு விளக்கம் வேறு அளித்தார். அதாவது ஆசிரியர் வாயைத் திறந்து பேசினாலே சப்பாத்திக்கு மாவு பிசைவது போல இருக்குமாம் அதற்குத்தான் பப்பர் வாயன் என்று நாம கரணம் சூட்டியதாக தெரிவித்தார். இன்னொரு ஆசிரியருக்கு “நூடுல்ஸ் மண்டையன்” என்று பெயர் சூட்டியுள்ளனராம். அவரது முடி சுருட்டையாக இருப்பதால் இந்த பெயராம் ( இது எப்படி இருக்கு). இதை டிவியில் கூறிவிட்டு நாளைக்கு எந்த தைரியத்தில் அந்தப் மாணவி கல்லூரிக்கு போவாரோ தெரியவில்லை.

அதேபோல் இன்னொரு பெண்மணியிடம் “ உங்கள் கணவருக்கு நீங்கள் சமைக்கும் உணவில் மிகவும் பிடித்தது என்று கேட்டார். அதற்கு அவரோ சிக்கன் என்று கூறினார்.பிடிக்காத உணவு என்று கேட்ட உடன் ‘ உப்புமா’ என்று கூறினார். வாரத்துக்கு எத்தனை நாள் சிக்கன் செய்வீங்க? உப்புமா செய்வீங்க என்று கேட்டு அவரையும் சிக்கலில் மாட்டிவிட்டார்.

நிகழ்ச்சியின் சுவாரஸ்திற்காகத்தான் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றன என்றாலும் பங்கேற்பாளர்களை பாதிக்காத கேள்விகளை கேட்கவேண்டும் என்பதே பெரும்பாலான நேயர்களின் எதிர்பார்ப்பாகும்.
Close
 
 

'எல்லாத்தையுமா' சொல்லப் போறார் சோனா?

Sona Write Her Autobiography   
'சும்மா போரடிக்குதுல்ல.. எதையாவது கொளுத்திப் போடலாம்' ரகம் போலிருக்கிறது நடிகை சோனா.

மாதத்துக்கு ஒரு சர்ச்சை என கணக்கு வைத்துக் கொண்டு அவர் சர்ச்சைகளை கிளப்பி வருகிறார்.

எஸ்பிபி சரண் விவகாரத்துக்குப் பிறகு, தன் வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான உண்மைகளை சினிமாவாக எடுத்து அனைவரையும் அலற வைக்கப் போவதாக அறிவித்தார்.

அதன் பிறகு இல்லையில்ல.. என் கதையின் ஒரு பகுதியை மட்டும்தான் எடுக்கப் போகிறேன் என்றார்.

இப்போது பட விவகாரத்தை அப்படியே கிடப்பில் போட்டவர், அடுத்து புத்தகம் எழுதப் போவதாக அறிவித்துள்ளார்.

சினிமாவில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை புத்தகத்தில் குறிப்பிடப் போகிறாராம். அதோடு தான் நடத்தும் யுனிக் நிறுவனம், அதற்கு வந்த சோதனைகள் பற்றியும் அதில் எழுதுகிறாராம்.

'கோடம்பாக்கத்துக்கு வந்த சோதனையடா' என கண் சிமிட்டுகிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்!
Close
 
 

சற்குணம் இயக்கும் சொட்ட வாளக்குட்டி - தனுஷ் நாயகன்!

Sargunam S Next Sotta Vaalakkutty
விருதுகளைக் குவித்த வாகை சூடவா படத்துக்குப் பிறகு, இயக்குநர் சற்குணம் உருவாக்கும் புதிய படத்துக்கு சொட்ட வாளக்குட்டி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் ஹீரோவாக தனுஷ் நடிக்கிறார்.

3 பட சர்ச்சைகளில் சிக்கித் தவிக்கும் தன் இமேஜை மீட்க இந்தப் புதிய பட அறிவிப்பு உதவும் என நம்புகிறார் தனுஷ்.

தற்போது பரத்பாலா இயக்கத்தில் நடித்து வரும் தனுஷ், அப்படத்தை முடித்த கையோடு சற்குணம் படத்தில் நடிக்கிறார்.

நகைச்சுவை இழையோடும் விறுவிறு படமாக சொட்ட வாளக்குட்டியை உருவாக்கிறார் சற்குணம். தமிழரின் வட்டார வழக்கு, பாரம்பரியத்தை அடையாளப்படுத்தும் விதமாக காட்சிகளை அமைக்க உள்ளதாக சற்குணம் கூறியுள்ளார்.

இந்தப் படத்துக்குப் பிறகு 'வாகை சூடவா' படத்தைத் தயாரித்த முருகானந்தத்துக்கு ஒரு படம் இயக்கப் போகிறார். அதில் ஹீரோ விமல்!
Close
 
 

கலைஞர் டிவியின் ‘மானாட மயிலாட’ கடந்து வந்த பாதை

Kalaignar Tv Maanada Mayilada Dance Show   
சினிமாவில் மட்டும்தான் நடனம், பாடல் என்றிருந்த ட்ரெண்ட் மாறி சின்னத்திரையிலும் கடந்த சில ஆண்டுகளாக டைட்டில் பாடல்கள், நடிகைகளின் நடனம் என கலர்புல்லாக களைகட்டி வருகிறது.

தொடர்களில் மட்டும்தான் நடனமாடவேண்டும் அவர்களை வைத்தே ஒரு நிகழ்ச்சியே நடத்தலாமே என்று டான்ஸ் மாஸ்டர் கலா யோசிக்கத் தொடங்கியதன் விளைவே ‘மானாட மயிலாட’ (சுருக்கமாக எம்எம்). (சொல்லப்போனால் இது ஒன்றும் அவரது சொந்த யோசனை அல்ல அப்போது விஜய் டிவியில் சின்னத்திரை நட்சத்திரங்களை வைத்து ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சி வெற்றிகரமாக போய்க்கொண்டிருந்தது அந்த நிகழ்ச்சியின் அப்பட்டமான காப்பி என்று கூட இதை சொல்லலாம்).

கலைஞர் தொலைக்காட்சி புதிதாக தொடங்கப்பட்ட நேரம் அந்த தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் புதிய நிகழ்ச்சிகளை அறிமுகவேண்டுமே? நடன நிகழ்ச்சி என்று முடிவு செய்தாகி விட்டது அதற்கு ஏற்றார்போல நடுவர்களும் கலர்புல்லாக இருக்க வேண்டுமே என்று நினைத்த கலா, பெரிய திரையில் கவர்ச்சி நட்சத்திரங்களாக கலர் கலராக உலா வந்த சிம்ரன், குஷ்பு, ரம்பா, நமீதா போன்ற நாயகிகளை களம் இறக்கிவிட்டார். நிகழ்ச்சியின் வெற்றிக்கு இது மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்டாக அமைந்தது.

எம்எம் சீசன் 1 தொடங்கிய நேரம் கலைஞர் தொலைக்காட்சியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் நடன போட்டி நிகழ்ச்சி என்றதும் ஆர்வமும், ரசிகர்களிடையே ஆவலும் அதிகரித்தது. சின்னத்திரை நடிகர் சஞ்சீவ் மற்றும் கீர்த்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களானார்கள். நடன இயக்குநர் கலா இயக்கத்தில் அவர் ஒரு நடுவராகவும், அவரது தங்கை பிருந்தா ஒரு நடுவராகவும் இருக்க சிறப்பு நடுவரராக சிம்ரன், நமீதா ஆகியோரை அழைத்து வந்தார். இதன் இறுதி நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினாராக பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தார்.

அன்று தொடங்கிய மானாட மயிலாட பல சீசன்களை கடந்து ஏழாவது சீசனை எட்டியுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் சின்னத்திரை நட்சத்திரங்கள் புதிது புதிதாக களம் இறக்கப்படுகின்றனர். ஆனால் சீசனுக்கு தகுந்தாற்போல் நடுவர்கள்தான் மாற்றப்படுகின்றனர். சீசன் 2, சீசன் 3 யில் குஷ்புவும், ரம்பாவும் நடுவர்களாக களம் இறங்கினார்கள். சீசன் 4ல் குஷ்புவுடன் மீண்டும் நமீதா களம் இறங்கினார். சீசன் 5 ல் பிருந்தா, குஷ்பு, ரம்பா, நமீதா என கலக்கல் பட்டாளத்தை நடுவர்களாக்கினார் கலா.

இதற்கிடையே இந்த நிகழ்ச்சியின் இயக்குநர் கலா மீது புகார் கூட எழுந்தது. கலா சொல்வதை கேட்காவிட்டால் போட்டியில் இருந்து ஏதாவது ஒரு காரணத்தை கூறி நீக்கிவிடுகிறார்கள் என்றும் கூட நிகழ்ச்சியில் பங்கேற்ற சின்னத்திரை நட்சத்திரங்களின் அம்மாக்கள் புகார் பட்டியல் வாசித்தனர். அதைப்பற்றி எல்லாம் கலா கவலைப்பட்டதாக தெரியவில்லை. எம்எம் சீசன் 5 தொடங்கினார் இதன் இறுதி நிகழ்ச்சி 2010 ம் ஆண்டு அக்டோபர் மாதம் அபுதாபியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதன்சிறப்பு விருந்தினர்களாக அப்போதய காதல் ஜோடி பிரபுதேவா, நயன்தாரா பங்கேற்று போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தனர்.

இதோ இப்போது எம். எம் சீசன் 7 நடைபெற்று வருகிறது மீண்டும் குஷ்புவும், நமீதாவும் கலக்கலாக அமர்ந்து தங்களின் தீர்ப்பினை தெரிவித்துக்கொண்டிருக்கின்றனர். நமீதாவின் மச்சான் நீ நல்லா ஆடுற மச்சான் என்ற உலகப் புகழ் பெற்ற தமிழைக் கேட்க ஒவ்வொரு தமிழ் ரசிகனும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் !.

இங்கு முக்கியமான ஒரு செய்தியை சொல்லியே ஆகவேண்டும். ‘மானாட மயிலாட’ என்று இந்த நிகழ்ச்சிக்கான பெயரை சூட்டியவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்பது குறிப்பிடத்தக்கது.
Close
 
 

சீரியலும் சினிமா மாதிரிதான்!: தேவயானி

Devayani Duel Role Act Mutharam Serial
அழகான அமைதியான டீச்சர் மருமகள், அதிரடியான காவல்துறை அதிகாரி என சன் தொலைக்காட்சியின் முத்தாரம் தொடரில் கலக்கலாக தனது நடிப்பு முத்திரையை பதித்து வருகிறார் நடிகை தேவயானி.

சினிமாவின் அழகு தேவதையாக வலம் வந்தவர் திடீர் என திருமணம் செய்து கொண்டு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாகினார். பின்னர் யாருமே எதிர்பாராத நிலையில் கோலங்கள் தொடர் மூலம் சின்னத்திரையில் பிரவேசம் செய்து அதில் நடித்துக்கொண்டே இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவானர். பின்னர் ராஜ் தொலைக்காட்சியில் கொடிமுல்லையாய் அம்மா, பெண் என இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார்.

இதோ மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தாரம் தொடருக்காக சற்றே உடல் மெலிந்து முன்பை விட இளமையாய், கூடுதல் பொலிவோடு நடிக்கத் தொடங்கியிருக்கிறார். இந்தத் தொடரிலும் தேவையானிக்கு இரட்டை வேடம்தான் அமைதியான பயந்த சுபாவம் கொண்ட குடும்ப பெண் வேடம். அதற்கு நேர்மாறாக அதிரடியான காவல்துறை அதிகாரி வேடம் என தேவயானிக்கு பெண்களிடையே கூடுதல் மரியாதையை பெற்றுத்தந்துள்ளது இந்த முத்தாரம் தொடர் என்றே கூறலாம். சீரியல் சூட்டிங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் தேவையானி கொஞ்சமே கொஞ்சம் கிடைத்த இடைவெளியில் நம்மிடையே பேசினார்.

“கோலங்கள் அபி கேரக்டர்லேருந்து கொஞ்சநாள் என்னால வெளில வர முடியலை. அதே போல இப்ப முத்தாரம் கிடைச்சிருக்கு. இது குழந்தையில்லாத பெண்ணோட வாழ்க்கைப் போராட்டத்தைப் பத்தின கதை. குழந்தையின்மைங்கிறது இன்னிக்கு சமுதாயத்துல பெரிய பிரச்னையா இருக்கு. பர்சனலா பாதிக்கப்படற பெண்ணுக்கு மட்டும்தான் அந்த வலியும் வேதனையும் தெரியும். அவ சந்திக்கிற மனிதர்கள், எதிர்கொள்ற கேள்விகள், போராட்டங்கள்னு யதார்த்தமான கேரக்டர். அதேபோல காவல்துறை அதிகாரி வேடமும் எனக்கு புதிய களம். இரண்டுமே எனக்கு சவாலான கதாபாத்திரங்கள்தான்.’’

“திருமணத்திற்கு அப்புறம் சினிமால எனக்கேத்த கேரக்டர் அமையலை. சீரியல்ல என்னை மையப்படுத்திதான் கதையே நகருது. அதனால் எனக்கு சினிமாவை விட இப்போ சீரியல்ல நடிக்கிறதுதான் பிடிச்சிருக்கு ஏன்னா ஒவ்வொரு சீரியலும் எனக்கு சினிமா மாதிரிதான்!” என்று சொல்லிவிட்டு சிரிக்கிறார் தேவயானி.

“திரைப்படத்துறைக்கு வந்து பல ஆண்டுகள் ஆகியும், பல போட்டிகள் இருந்தும் இன்றும் ரசிகர்கள் ஆதரவு எனக்கு இருக்கிறது என்பதால், நான் தமிழ் ரசிகர்களை மறக்க முடியாது. நான் எங்கு சென்றாலும், எந்த நாட்டுக்கு சென்றாலும் தமிழ் ரசிகர்கள் என்னை சொந்த சகோதரி போன்ற உணர்வுடன் நடத்துகிறார்கள். ஆகவே நான் தமிழ் மண்ணுக்கு கடமைப்பட்டவள்” என்றும் கூறி தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஐஸ்வைத்தார் தமிழ்நாட்டு மருமகள் தேவயானி
Close
 
 

நாடு விட்டு நாடு வந்து செல்லும் தொகுப்பாளினி பாவனா!

Super Singer Coordinator Bavana
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி பாவனா திருமணமாகி சிங்கப்பூரில் செட்டில் ஆனாலும் பறந்து வந்து நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொள்கிறாராம்.

பாவனாவின் ஸ்டைலான பேச்சும் குரல் வளமும் பெரும்பான்மையான ரசிகர்களை பெற்றுக்கொடுத்துள்ளது. இதனை விட்டு விடக்கூடாது என்பதற்காகவே இவர் சென்னைக்கும் சிங்கப்பூருக்கும் பறந்து கொண்டிருக்கிறார். நிகழ்ச்சி தொகுப்பாளராக பவனா இருந்தாலும் இஞ்சினியரிங் படித்திருக்கிறார். மீடியா ஆசை காரணமாகவே ரேடியோ ஜாக்கியாக களம் இறங்கி பின்னர் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக மாறினாராம். அம்மணிக்கு சினிமாவில் டப்பிங் பேச வேண்டும் என்பது நீண்டநாள் ஆசையாம்.

யாராவது வாய்ப்பு கொடுங்கப்பா!
Close
 
 

6 ம் ஆண்டில் விஜய் டிவி அவார்ட்ஸ் : தமிழகத்தை வலம் வரும் ரசிகன் எக்ஸ்பிரஸ்

6th Annual Vijay Awards 2012 Vijay
விஜய் டிவியின் விஜய் விருதுகள் விழா 6ம் ஆண்டில் அடிஎடுத்து வைக்கிறது. இதற்கான தொடக்க விழா கடந்த 27ம் தொடங்கியது விஜய் ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனத்தை ஏவிஎம் சரவணன், நடிகர் சிவகுமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர். இந்த ஆண்டு ரசிகன் எக்ஸ்பிரஸ் முற்றிலும் மாறுபட்ட வடிவில் நடிகர் நடிகையர்களின் புகைப்படம் தாங்கி தமிழ்நாடு முழுவதும் வலம் வருகிறது.

கடந்த 2006 ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வரும் விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி, 6ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாகவும், புதுமாதிரியாகவும் நடத்த முடிவு செய்துள்ளனர். இதன் தொடக்கமாக ரசிகன் எக்ஸ்பிரஸ் வாக்குகளைத் தாங்கி தமிழகம் முழுவதும் வலம் வரத் தொடங்கியுள்ளது. இந்த ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனத்தில் கடந்த ஆண்டுகளில் எடுக்கப்பட்ட விருது வழங்கும் புகைப்படங்கள் மற்றும் பங்குகொண்ட கலைஞர்களில் படங்கள், படக்காட்சிகள் என்று மக்கள் விரும்பிப்பார்க்கும் அனைவரது விஷயங்களும் அடங்கியுள்ளனவாம். சென்னையிலிருந்து புறப்பட்ட இந்த ரசிகன் எக்ஸ்பிரஸ் வாகனம், குமரி வரை சென்று அங்குள்ள ரசிகர்களின் வாக்குகளை சேகரித்து திரும்பும்

மக்களின் விருப்பமான திரைப்படம், நடிகர், நடிகை, இயக்குனர், பாடல் ஆகிய ஐந்து பிரிவுகளை நேயர்களே தேர்வு செய்வர். மீதமுள்ள பிரிபிரிவுகளுக்கான விருதுகளை விழா நடுவர்கள் தேர்வுசெய்வர்.

விஜய் விருதுகளைப் பொறுத்தவரையில் முக்கிய விருதுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்பட்டு வருவது வரவேற்கப்படும் விஷயமாகும். ஆறாம் ஆண்டு விஜய் அவார்ட்ஸ் விழாவில் தமிழ்த்திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் என்று ஏராளமான விருதுகள் வழங்கப்படவிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விருது விழாவில் தமிழ்த்திரைப்படத்துறையில் இருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு செவாலியே சிவாஜி கணேசன் விருது வழங்கப்பட்டு வருகிறது.

விஜய் டிவியின் விருது விழா கடந்த 2006 ம் ஆண்டு முதல் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டிற்காக விஜய் விருதுகள் விழா பிரம்மாண்டமாக சென்னையில் ஜூன் 25ம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் என்று விஜய் டிவி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
Close
 
 

ஓ.கே. ஓ.கே. டாட்டூ குத்திய உதயநிதி

Udhayanidhi S Latest Tattoo
உதயநிதி ஸ்டாலின் தனது முதல் படமான ஓ.கே. ஓ.கே. என்ற தலைப்பை தனது உடலில் பச்சை குத்தியுள்ளாராம்.

தயாரிப்பாளராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் ஹீரோவானார். ஹன்சிகா, சந்தானம் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் வெற்றிகரமாக ஓடுகிறது. இன்னும் சில நாட்களில் 50 நாட்களை தொடவிருக்கிறது. இந்த படத்தில் புதுமுக நாயகன் உதயநிதியின் நடிப்பு பேசப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் நடித்த முதல் படம் அதுவும் ஹிட்டான படத்தின் நினைவு தனது வாழ்நாள் முழுக்க இருக்க வேண்டும் என்பதற்காக அவர் படத்தின் முதல் எழுத்துகளான ஓ.கே.ஓ.கே. வை தனது உடலில் பச்சை குத்தியுள்ளார். அவர் ஏற்கனவே தனது மகன் இன்பா மற்றும் மகள் தன்மயா ஆகியோரின் பெயர்களை பச்சை குத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக காதலன், காதலி பெயரை பச்சை குத்துவார்கள். ஏன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நாட்டுபற்று மிகுதியால் நம் தேசியக் கொடியை கையில் பச்சைக் குத்தியுள்ளார். இந்நிலையில் உதயநிதி சற்று வித்தியாசமாக படத்தின் பெயரை பச்சை குத்தியுள்ளார்.
Close
 
 

தங்கர் பச்சானின் 'தங்கக் கைக்கு' வந்து சேர்ந்த சாந்தனு, இனியா!

Shanthanu Iniya Pair Thankar S Amma
தமிழிலில் பிரேக்கே கிடைக்காமல் தவித்து வரும் பாக்யராஜ் மகன் சாந்தனுவும், பாரதிராஜாவின் கைக்குப் போயும், கடைசியில் முல்லைப் பெரியாறு விவகாரத்தால் கை நழுவிப் போன இனியாவும் இப்போது தங்கர் பச்சான் என்ற சிறந்த படைப்பாளியிடம் வந்து சேர்ந்துள்ளனர். இதனால் இருவரும் இப்போதே பெரும் வெற்றிப் புன்னகையுடன் காணப்படுகின்றனர்.

தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த நல் முத்துக்களில் ஒருவர்தான் தங்கர். இவரது படத்தில் சின்ன வேடத்தில் நடித்தால் கூட போதும் என்ற ஆர்வத்தில் இருப்பவர்கள் எத்தனையோ பேர். உணர்ச்சிகரமான இவரது படங்கள் அனைத்துமே வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டவையே.

இப்போது அம்மாவி்ன் கைபேசி என்ற புதிய படத்தை இயக்கப் போகிறார் தங்கர். இதில் சாந்தனு நாயகனாக நடிக்கிறார். இனியா நாயகியாக வரப் போகிறார்.

பாக்யராஜின் மகன் என்ற பெருமையுடன்தான் இதுவரை இருக்கிறார் சாந்தனு. சாந்தனுவின் தந்தை பாக்யராஜ் என்று சொல்லும் நாள் இதுவரை அவருக்கு வரவில்லை. நல்ல பிரேக்குக்காக காத்திருக்கு்ம் அவருக்கு தங்கர் படம் கிடைத்திருப்பது பெரும் சந்தோஷம் தந்துள்ளதாம்.

அதேபோல வாகைசூட வா படம் மூலம் மிகச் சிறந்த நடிகையாக உருவெடுத்தவர் இனியா. அடுத்து பாரதிராஜாவின் படம் அவருக்கு கிடைத்தபோதும் கடைசியில் முல்லைப் பெரியாறு பிரச்சினையால் அந்த வாய்ப்பை நழுவ விட்டார் மலையாளத்தைச் சேர்ந்த இனியா.

இந்த நிலையில் இந்த இருவரும் தங்கரின் பொற் கரங்களுக்குள் வந்திருப்பதால் நிச்சயம் தங்களுக்கு இப்படம் தமிழ் சினிமாவில் நல்லதொரு இடத்தைப் பெற்றுத் தரும் என்ற பெருத்த நம்பிக்கையுடன் உள்ளனராம்.
Close