லண்டனில் கார் ஓட்டுவதற்காக டிரைவிங் லைசென்ஸ் வாங்கிய சந்தானம்!

|

Santhanam Gets International Driving License
லண்டனில் கார் ஓட்டுவது போன்று எடுக்கப்படவுள்ள காட்சிக்காக, சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை வாங்கியுள்ளார் காமெடியன் சந்தானம். இதையடுத்து அவர் சம்பந்தப்பட்ட லண்டன் காட்சிகளைப் படமாக்க இருந்து வந்த தடை நீங்கியுள்ளதாம்.

விக்ரம், ஏமி ஜாக்சன் நடித்து வரும் தாண்டவம் படத்தில் சந்தானம்தான் காமெடியன். இப்படத்தில் வித்தியாசமான கேரக்டரில் வருகிறார் சந்தானம்.

கதைப்படி உசிலம்பட்டியைச் சேர்ந்தவரான சந்தானம், கள்ளத்தனமாக லண்டன் வந்து சேருகிறார். அங்கு கார் டிரைவராக வேலை பார்க்கிறார். லண்டனில் சந்தானம் கார் ஓட்டுவது போன்ற காட்சிகளைப் படமாக்க ஒரு தடை இருந்தது. அதாவது அவரிடம் இன்டர்நேஷனல் ஓட்டுநர் உரிமம் இல்லை. அது இல்லாததால் அவரது காட்சிகளைப் படமாக்க சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து உடனடியாக அவர் ஒரு சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பித்தார். அதுவும் கிடைத்து விட்டது. இதையடுத்து தற்போது லண்டனில் முகாமிட்டுள்ள தாண்டவம் படக்குழுவினர் உற்சாக தாண்டவமாடி வருகின்றனராம்.

விரைவில் சந்தானத்திடம் காரைக் கொடுத்து லண்டன் முழுக்க ஓட்ட விட்டு கலர் கலராக படம் பிடிக்கப் போகிறார்களாம்.
Close
 
 

Post a Comment