விபசார வழக்கில் கைதா? நடிகை சனா கான் அதிர்ச்சி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'விபசார வழக்கில் சனாகான் கைதானதாக நேற்று செய்தி வெளியானது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சனா கான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்' என்று கூறினார். 'சிலம்பாட்டம்', 'பயணம்', 'தம்பிக்கு இந்த ஊரு' ஆகிய படங்களில் நடித்திருப்பவர் சனாகான். நேற்று முன்தினம் பெங்களூரில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 4 பெண்கள் உள்பட 8 பேரை விபசாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்தனர். இதில் மும்பையை சேர்ந்த சனா என்று துணை நடிகையும் கைதானார். தமிழ் படங்களில் நடித்துள்ள சனா கான் பெயரும் இவரது பெயரும் ஒன்றுபோல் இருந்ததால் விபசார வழக்கில் சனாகான் கைதானதாக படங்களுடன் பத்திரிகைகளிலும் சில வெப் சைட்களிலும் செய்தி வெளியானது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்தார் சனாகான். போலீசார் பெங்களூரில் சோதனை நடத்தியபோது தான் மும்பையில் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

'சனா கான் கைதானாரா?' என்று சித்தபுரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி சங்கரிடம் கேட்டபோது,''சனா என்ற துணை நடிகைதான் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார். ஒரே சாயலில் பெயர் இருந்ததால் நடிகை சனா கான் என்று தவறாக புரிந்துகொண்டுள்ளனர். விபசார வழக்கில் கைதானவர் கோலிவுட், டோலிவுட் நடிகை சனா கான் அல்ல'' என்றார். இதுகுறித்து சனா கான் மேனேஜர் சீனிவாஸ் கூறும்போது,''சனாகான் பற்றிய செய்தியை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். இதை வெளியிட்ட மீடியா, பத்திரிகைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்'' என்றார்.


 

Post a Comment