'சீன்' படத்தில் நானா? கன்னட பத்திரிக்கை மீது பூஜா வழக்கு!

|

Pooja Sues Kannada Magazine   
நடிகை பூஜா 'சீன்' படத்தில் நடித்துள்ளார் என்று செய்தி வெளியிட்ட கன்னட பத்திரிக்கை மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பூஜா கடைசியாக தமிழில் நடித்தது நான் கடவுள். அதன் பிறகு சொந்த ஊரான இலங்கைக்குப் போய் விட்டார். பூஜாவுக்கும் சர்ச்சைகளுக்கும் அவ்வளவு ராசி. வெகு நாட்களாக காணாமல் போயிருந்த பூஜா தற்போது இயக்குனர் பாலாவின் படத்தில் மீண்டும் நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் பூஜா சீன் படத்தில் நடித்துள்ளார், அந்த படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் வலம் வருகிறது என்று கன்னட பத்திரிக்கை ஒன்று 2 முறை செய்தி வெளியிட்டது. இதைப் படித்துப் பார்த்த அவர் ஆடிப்போ்ய்விட்டார்.

அடப்பாவிகளா, இத்தனை நாள் அவருடன் காதல், இவருடன் காதல் என்று எழுதிய காலம் போய் சீன் படத்தில் நடித்திருக்கிறேன் என்று எழுதி அசிங்கப்படுத்திவிட்டார்களே என்று கொத்தித்துவிட்டார். உடனே அந்த பத்திரிக்கை அலுவலகத்திற்கு சென்ற அவர் நான் சீன் படத்தில் நடித்தேன் என்று செய்தி வெளியிட்டுள்ளீர்களே, அதற்கு ஏதாவது ஆதாராம் உள்ளதா என்று படபடத்துள்ளார்.

ஆனால் அவருக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. ஒரு காலக்கெடுவை விதித்து அதற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டு வந்துள்ளார். ஆனால் அந்த பத்திரிக்கை மன்னிப்பு கேட்காததையடுத்து நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
 

Post a Comment