'புரட்சித் தளபதி' பட்டம்.. விஷாலுக்கு வேண்டாமாம்!

|

Vishal Omits Puratchi Thalapathy Title
தமிழ் சினிமா நடிகர்களுக்கு பட்டப் பெயர் வைப்பது தமிழ்க் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகிவிட்டது.

சூப்பர் ஸ்டார், உலக நாயகன், சுப்ரீம் ஸ்டார் (இப்போ சூப்பர் சுப்ரீம் ஸ்டாராம்!), அல்டிமேட் ஸ்டார், இளையதளபதி என்றெல்லாம் ஏகப்பட்ட அடை மொழிகள் (ஆங்... பவர் ஸ்டாரை சேத்துக்கங்க!)

அந்த வகையில் விஷாலுக்கு வைக்கப்பட்ட அடைமொழி புரட்சித் தளபதி.

சமீபத்தில் ரிலீசாகி, பெட்டிக்குள் போன அவரது படங்கள் அனைத்திலும் இந்த புரட்சித் தளபதி அடைமொழி காணப்பட்டது.

ரசிகர்கள் விருப்பப்பட்டு கொடுத்த பட்டம். அதனால் வைத்துக் கொண்டேன் என தோரணை பட பிரஸ் மீட்டில் கூட விஷால் கூறினார்.

இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு தனக்கு அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டம் தேவையில்லை. அஜீத் குமார் என்று குறிப்பிட்டால் போதும் என அறிவித்தார் அஜீத்.

இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடமும் படங்களில் அதை பயன்படுத்த வேண்டாம் என்று கூறிவிட்டார். இதையடுத்து வெறும் அஜித் என்ற பெயரே இடம் பெற்று வருகிறது. பட்டத்தைத் துறந்த பிறகு வந்த அவரது மங்காத்தா சூப்பர் ஹிட்டாகிவிட்டது.

இப்போது அஜீத் வழியில் விஷாலும் புரட்சித் தளபதி என்ற பட்டத்தை வேண்டாம் என உதறிவிட்டார்.

தனது அடுத்த படமான சமர் போஸ்டர்கள் விளம்பரங்களில் வெறும் விஷால் என்றே அவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்டிமெண்ட் ஒர்க் அவுட் ஆகுமா? பார்க்கலாம்!
Close
 
 

Post a Comment