உதயதாரா- ஜூபின் திருமணம் நடந்தது!

|

Udayathara Marries Pilot Jupin
தமிழ் - மலையாள நடிகை உதயதாரா - ஜூபின் திருமணம் இன்று காலை கொச்சி அருகே உள்ள கிராமத்தில் நடந்தது.

தமிழில் தீ.நகர், மலையன், கண்ணும் கண்ணும், விலை, பயமறியான் போன்ற படங்களில் நடித்தவர் உதயதாரா. சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

உதயதாராவுக்கும் துபாயில் விமான பைலட்டாக பணியாற்றும் ஜுபின் ஜோசப்புக்கும் சமீபத்தில் கோட்டயத்தில் திருமணம் நிச்சயமானது.

இன்று காலை உதயதாரா-ஜுபின் ஜோசப் திருமணம் உள்ள கொச்சி அருகே உள்ள கிராம சர்ச்சில் நடந்தது.

திருமணத்தில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

தற்போது கைவசம் இருந்த இரண்டு மலையாள படங்களை முடித்து விட்டார். அடுத்த வாரம் இருவரும் தேனிலவுக்காக வெளிநாடு செல்கின்றனர்.

தேனிலவு முடிந்து திரும்பிய பிறகு, மீண்டும் சினிமாவில் நடிக்கப் போவதாக உதயதாரா அறிவித்துள்ளார்.
Close
 
 

Post a Comment