அருண் விஜய்யின் 'மானப் பிரச்சனை'-பிராச்சி தேசாய்க்கு நோட்டீஸ்!!

|

Arun Vijay Sends Legal Notice Prachi Aid0136
பிராச்சி தேசாய் விவகாரம் கிட்டத்தட்ட மானப் பிரச்சினையாகிவிட்டது நடிகர் அருண் விஜய்க்கு.

'அதிலும் அருண் விஜய் 'ராசி' காரணமாகத்தான் பிய்ச்சிக்கிட்டு ஓடிட்டார்' என மீடியாவில் செய்தி பரவ, உடனடியாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அருண்.

தடையற தாக்க என்ற படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இதில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகை பிராச்சி தேசாயை ஒப்பந்தம் செய்தனர். இதற்காக அட்வான்ஸும் கொடுக்கப்பட்டது. படப்பிடிப்புக்காக சென்னை வந்த அவர் ஒருநாள் தங்கி இருந்தார். மறுநாள் தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி விட்டு மும்பை பறந்து விட்டாராம்.

இதனால் படப்பிடிப்பு நின்று போனது. தயாரிப்பாளரும், இயக்குனரும் பலதடவை அவரை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. நேரில் சென்றும் சந்திக்க முடியவில்லை. இதையடுத்து பிராச்சி தேசாய்க்கு அருண்விஜய் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

படத்தில் நடிக்காததற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளார். இதுகுறித்து அருண்விஜய் கூறும்போது, பிராச்சி தேசாயால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. போட்ட செட்களை எல்லாம் கலைத்தோம் (வேறு நடிகையை வைத்து எடுப்பதுதானே... இதற்காக ஏன் செட்களைக் கலைத்தார்?!). இதர நடிகர், நடிகைகளின் கால்ஷீட்களிலும் பிரச்சினைகள் ஏற்பட்டன.

இந்த நஷ்டத்துக்கு அவர் பொறுப்பு ஏற்க வேண்டும்," என்றார்.
 

Post a Comment