1854ல் நடந்த உண்மை சம்பவம் "மாற்றான்"

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
1854ம் ஆண்டில் தாய்லாந்தில் ஒட்டிப் பிறந்த சகோதரர்களின் நிஜ கதையில் சூர்யா நடித்திருக்கிறார் என்றார் கே.வி.ஆனந்த். 'அயன் படத்துக்கு பிறகு சூர்யா நடிக்கும் 'மாற்றான் படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த். இதுபற்றி அவர் நேற்று கூறியதாவது: கனா கண்டேன் படத்தை முடித்துவிட்டு விமானத்தில் வந்தேன். அதே விமானத்தில் 'சிவாஜி படத்தை முடித்துவிட்டு ஷங்கர் வந்தார். அப்போது வெளிநாட்டில் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் பற்றி அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். தாய்லாந்தை சேர்ந்த ஈஞ்ச்,சாங் இரட்டையர்கள் ஒட்டிப்பிறந்தவர்கள். பின்னர் அமெரிக்காவில் வாழ்ந்தனர். இவர்கள் இரட்டை சகோதரி களை கல்யாணம் செய்துகொண்டனர். தனித்தனி வீடு எடுத்து வாழ்ந்தனர். ஒருவருக்கு 7 குழந்தை பிறந்தது, இன்னொருவருக்கு 8 குழந்தை பிறந்தது. சகோதரர்களில் ஒருவர் 58 வயதில் இறந்தார். இன்னொருவர் 60 வயதில் இறந்துவிடுகிறார். இது 1854ம் ஆண்டு நடந்த கதை. ஆனால் ஒட்டிபிறந்த சகோதரர்கள் என்ற கருவை மட்டும் எடுத்துக்கொண்டு 'மாற்றான் ஸ்கிரிப்ட் அமைத்திருக்கிறேன். நிஜகதை அடிப்படை என்றாலும் சம்பவங்கள் மாற்றப்பட்டிருக்கிறது. இப்படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும் சூர்யா இரண்டுமுறை நடித்தார். சண்டை காட்சிகள் எடுப்பதில் மிகுந்த சிரமம் இருந்தது. எல்லாமே இப்போதுள்ள நவீன தொழில்நுட்ப கிராபிக்ஸால் சாத்திய மாகி இருக்கிறது.


 

Post a Comment