அஜீத் படத்துக்கு உதவி இயக்குனர் நயன்தாரா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
அஜீத் நடிக்கும் புதிய படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார் நயன்தாரா. நடிகையாக முன்னணி பட்டியலில் இடம் பிடித்திருக்கும் நயன்தாராவுக்கு இயக்குனராகும் ஆசை வந்திருக்கிறது. அதற்கான நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். தற்போது அந்த கனவு நிறைவேறி இருக்கிறது. புதிய படமொன்றில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத்குமார் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இப்படத்தில் நடிக்கும் நேரம்போக உதவி இயக்குனராக பணியாற்ற முடிவு செய்தார். தன்னை உதவி இயக்குனராக சேர்த்துக்கொள்ளும்படி விஷ்ணுவர்த்தனிடம் கேட்டார். அவரும் ஒப்புக்கொண்டார். தனது உதவி இயக்குனர்கள் பட்டியலில் அவரையும் சேர்த்துக்கொண்டிருப்பதுடன் சில விதிமுறைகளையும் சொல்லி இருக்கிறார். அதன்படி நயன்தாரா நடிக்கும் காட்சிகள் அவர் நடித்து முடித்த பின் உதவி இயக்குனருக்கான வேலைகளை பார்க்கும்படியும், பட டிஸ்கஷன் போன்றவற்றிலும் பங்கேற்க கேட்டுக்கொண்டிருக்கிறார். கிளாப் அடிப்பது முதல் ஷூட்டிங்கில் எடுக்க வேண்டிய குறிப்புகளையும் உதவி இயக்குனர்களுடன் சேர்ந்து அவர் எடுக்கிறார். இது பற்றி இயக்குனர் விஷ்ணுவர்த்தனிடம் கேட்டபோது, Ô'நயன்தாராவை உதவி இயக்குனர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பது நிஜம்தான்ÕÕ என்றார். இதன் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது. மும்பையில் ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர்ச்சியாக ஷூட்டிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது நயன்தாரா தனக்கு காட்சிகள் இல்லாத நேரத்திலும் ஷூட்டிங்கில் முழுநேர உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.


 

Post a Comment