நடிகைகள் திரிஷா, லட்சுமி ராய் கண் முன்பாகவே மகத்தை, தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மகன் மனோஜ் மஞ்சுவும் அவரது நண்பர்களும் சரமாரியாகத் தாக்கியதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால் இந்த இரு நடிகைகளையும் பிடித்து விசாரிக்க போலீஸார் தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
மகத் - மனோஜ் மஞ்சு அடிதடி விவகாரத்தில் பெரும் பெரும் புள்ளிகள் தலையிட்டு மனோஜ் மஞ்சுவைக் காப்பாற்ற கடுமையாக முயன்று வருகின்றனராம். இதனால் போலீஸாரின் விசாரணைக்குப் பெரும் தடங்கல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் விடாமல் போலீஸ் தரப்பில் மனோஜைப் பிடித்துக் கைது செய்ய மும்முரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது நடிகைகள் திரிஷா, லட்சுமி ராய் ஆகியோர் முன்னிலையில்தான் மகத்தை மனோஜும், அவரது நண்பர்களும் சகட்டுமேனிக்குத் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலை திரிஷாவும், லட்சுமி ராயும் நேரில் பார்த்தனர் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த இரு நடிகைகளும் தாக்குதலை நேரில் பார்த்தது உண்மையாக இருந்தால் அவர்களையும் பிடித்து விசாரிக்க போலீஸ் தரப்பு மும்முரமாக உள்ளதாம்.
Post a Comment