ரஜினியின் சிவாஜி - தி பாஸ் படம் வரும் செப்டம்பர் மாதம் ஜப்பானில் நடக்கும் பிரபலமான டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
தமிழ் சினிமாவையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட படம் சிவாஜி தி பாஸ்.
வசூல், மார்க்கெட்டிங், பொழுதுபோக்கு என அனைத்திலும் ட்ரென்ட்செட்டப் படம் என்றால் சிவாஜிதான்.
ஷங்கர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் வெளியாகி தமிழ், தெலுங்கு, இந்தி என அத்தனை ஏரியாக்களிலும் அதிரடி வசூல், ஏராளமான விருதுகளைக் குவித்த இந்தப் படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போது மேலும் ஒரு பெருமையாக டோக்கியோ நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.
ஜப்பானிய ரசிகர்களுக்கு, ரஜினியின் சிவாஜி படம் திரையிடப்படும் செய்தி மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளது.
செப்டம்பர் 14, 15 மற்றும் 16-ம் தேதிகளில் இந்த விழா நடக்கிறது. இந்த மூன்று நாட்களுமே சிவாஜி திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள படத்தின் நாயகி ஸ்ரேயா டோக்கியோ செல்கிறார்.
Post a Comment