இந்தி திரைப்பட நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ ‘சத்யமேவ ஜெயதே', ஸ்டார் ப்ளஸ், டிடி, ஸ்டார் விஜய் ஆகிய தொலைக்காட்சிகளில் ஞாயிறுதோறும் 11.30 மணியளவில் ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சி பற்றி பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியதால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நிகழ்ச்சி தொடங்கிய மே மாதத்தில் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியை 3.8 சதவிகிதம் பேர் பார்த்துள்ளதாக TVR எனப்படும் Television Viewer Ratings தெரிவித்துள்ளது. அதுவே ஜூன் மாதத்தில் வெறும் 2.9 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே பார்த்துள்ளனர். அதே சமயம் மாதுரி தீக்ஷித் இயக்கியுள்ள Jhalak Dikhhla Jaa தொடர் 4.1 சதவிகிதம் பார்வையாளர்கள் ரசித்துள்ளனர்.
சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி. அதேசமயம் மாதுரி தீக்ஷித்தின் நிகழ்ச்சி நடனம் தொடர்புடைய நிகழ்ச்சி என்பதால் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும் என்று சத்ய மேவ ஜெயதே நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த ரேஸில் புதிதாக அமிதாப் பச்சனின் கோன் பனேகா குரோர்பதி இணையப்போகிறது. கடந்த ஆண்டு கோன் பனேகா குரோர்பதி சீசன் 4 நிகழ்ச்சியை 6.4 சதவிகித பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளதாக தொலைக்காட்சி ரேட்டிங்கில் தெரியவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியைப் போன்று வேறு எந்த நிகழ்ச்சிக்கும் இதுவரை பார்வையாளர்கள் எண்ணிக்கை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமீர்கான் டிஆர்பி என்பது மாறுதலுக்கு உட்பட்டது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒன்று முதலில் வரும் என்று கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி நிச்சயம் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுவே அந்த நிகழ்ச்சியின் வெற்றியை நிர்ணயித்து விடும் என்றும் கூறியுள்ளார்.
சத்ய மேவ ஜெயதே நிகழ்ச்சியில் மருத்துவத்துறை பற்றியும் மருத்துவர்களின் கட்டணக்கொள்ளை பற்றியும் அமீர்கான் பேசியது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment