இயக்குநர் - நடிகர் என பரபரப்பாக இருந்த அமீர், இப்போது பெப்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவை கட்டுப்படுத்தும் சக்திகளில் ஒன்றாக மாறியுள்ளார் அமீர்.
இதைத் தொடர்ந்து அமீர் அரசியலில் குதிக்கக் கூடும் என்று கூறப்பட்டது.
இதுகுறித்து அமீர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், "அரசியல் களம் இறக்கினால் என்ன தப்பு? எப்போது ஓட்டு போட வாக்குச்சாவடிக்குப் போறோமோ, அப்போதே அதில் பங்கு பெறவும் நமக்குத் தகுதி இருக்கிறதுதானே?
'ம்க்கும்... நீங்களும் அரசியலுக்கு வந்துட்டீங்களா?' என்று சலிப்புக் கேள்வியை எதிர்கொள்ளும் நிலையில் என் அரசியல் பிரவேசம் இருக்காது. சும்மா குற்றம் சொல்லிவிட்டு மட்டும் இருக்காமல், ஏதாவது நல்ல காரியம் செய்யும் நிலைமையில் இருக்கும்போது... நிச்சயம் அரசியலுக்கு வருவேன்!'' என்று கூறியுள்ளார்.
Post a Comment