உலகப் புகழ்பெற்ற குங்ஃபூ நிபுணர் மறைந்த புரூஸ்லீயுடன் பணியாற்றிய ஸ்டன்ட் கலைஞர், மிஷ்கினின் முகமூடி படத்தில் பணியாற்றியுள்ளார்.
யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள முகமூடி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது.
முதல் சிடியை நடிகர் விஜய் வெளியிட, கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் பெற்றுக்கொண்டார்.
பின்னர் நேற்று மாலை நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், இநதப் படம் குறித்துப் பேசிய இயக்குநர் மிஷ்கின், " இந்தப் படத்தில் ஜீவாவின் பாத்திரம் புரூஸ்லீ. மறைந்த நடிகர் புரூஸ்லீ கற்றுக் கொடுத்த குங்ஃபூ தற்காப்புக் கலையின் ஒரு அரிதான பிரிவை படத்தில் பயன்படுத்தியுள்ளோம். அதற்காக, அந்தக் கலை நன்கு தெரிந்தவர்களைத் தேடி ஹாங்காங்குக்கே போனோம்.
அப்போதுதான் புரூஸ்லீயுடன் பணியாற்றிய அந்த ஸ்டன்ட் கலைஞரைச் சந்தித்தோம். என்டர் தி ட்ரேகன் படத்தில் புரூஸ் லீயுடன் சண்டை போடும் கலைஞராக நடித்து, பின்னர் ஹாலிவுட் படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராகப் பணியாற்றும் அவர் எங்கள் படத்தில் பணியாற்ற ஒப்புக் கொண்டது அதிசயம்தான். ஏதோ பூர்வ ஜென்ம தொடர்பு என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்தப் படத்தில் வேலை செய்ய ஒப்புக் கொண்டேன் போலிருக்கிறது என்றார்.
சண்டைக் காட்சிகள் அத்தனை தத்ரூபமாக அமைந்துள்ளன," என்றார்.
ஜீவாவுடன் நரேன், பூஜா ஹெக்டே, நாசர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யா ஒளிப்பதிவு செய்கிறார். மதன் கார்க்கி வரிகளுக்கு கே இசையமைத்துள்ளார்.
படத்தில் ஜீவாவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள பிரத்தியேக சூப்பர் மேன் உடையை ஹாங்காங்கை சேர்ந்த ஆடை அலங்காரத் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஜீவடிவமைத்துள்ளனர். ஆகஸ்ட் 31-ந் தேதி படம் வெளியாகும் என தயாரிப்பாளர் தனஞ்செயன் அறிவித்துள்ளார்.
Post a Comment