த்ரிஷா - நயன் சமரசம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பட வாய்ப்புக்காக மோதிக் கொண்ட த்ரிஷா, நயன்தாரா திடீர் சமரசம் ஆகினர். தமிழ், தெலுங்கில் போட்டி ஹீரோயின்களாக வலம் வருகின்றனர் த்ரிஷா, நயன்தாரா. இரண்டு வருடத்துக்கு முன்பு விஜய்யுடன் புதிய படம் ஒன்றில் நயன்தாரா ஜோடியாக நடிக்க பேச்சு நடந்தது. அப்போது விஜய், த்ரிஷா ஜோடி பிரபலமாக பேசப்பட்டு வந்தது. இதையடுத்து புதிய படத்திலும் தன்னையே ஜோடியாக போட வேண்டும் என்று த்ரிஷா தரப்பில் வலியுறுத்தப்பட்டதாம். விஜய் ஜோடியாக நடிக்கப்போவது நயன்தாராவா, த்ரிஷாவா என்ற போட்டி எழுந்தது. இறுதியாக த்ரிஷா அப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இது நயன்தாராவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதுவே பின்னர் இருவரிடமும் மனக்கசப்பாக மாறியது. இதேபோல் தெலுங்கு படமொன்றில் பிரபல நடிகருடன் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்ய பேச்சு நடந்தது. அந்த வாய்ப்பு பின்னர் நயன்தாராவுக்கு மாறியது. இதனால் இருவரிடம் போட்டி அதிகரித்து வந்தது. மீடியாவில் பேசும்போதும் அவர்களது மனக்கசப்பு மறைமுகமாக வெளிப்பட்டது. இந்நிலையில் சென்னையில் நடந்த நட்சத்திர விருந்தில் நயன்தாரா, த்ரிஷா கடந்த சனிக்கிழமை பங்கேற்றனர். நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட இருவரும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி நலம் விசாரித்துக்கொண்டனர். இருவரும் முத்தம் பரிமாறிக்கொண்டனர். பின்னர் இருவரும் அருகருகே அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இவர்களின் திடீர் பாசம் அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.


 

Post a Comment