கே.எஸ்.ரவிகுமாருக்கு நோ சொன்ன த்ரிஷா

|

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் த்ரிஷா. தமிழில் விக்ரம், த்ரிஷா நடித்த படம் 'சாமி'. ஹரி இயக்கி இருந்தார். இப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இந்தியில் தனது முதல் படமாக ரீமேக் செய்கிறார். சஞ்சய் தத் ஹீரோ. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க த்ரிஷாவிடம் கால்ஷீட் கேட்டார் ரவிகுமார். ஆனால் பிஸியாக இருப்பதாக கூறி மறுத்துவிட்டார் த்ரிஷா. கடந்த 2 வருடத்துக்கு முன்பு கட்டா மிட்டா என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமானார் த்ரிஷா. அப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை.

இதையடுத்து இந்தி படங்களுக்கு முழுக்குபோட்டுவிட்டு தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். ரவிகுமார் படத்தில் நடிக்காதது பற்றி த்ரிஷாவிடம் கேட்டபோது, 'இந்தியில் உருவாகும் சாமி படத்தில் நடிக்க என்னிடம் கேட்டனர். ஆனால் தமிழில் 3 படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறேன். இதற்காக பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக  இந்தி படத்துக்கு கால்ஷீட் தேவைப்பட்டது.

அப்படி என்னால் ஒதுக்க முடியாது. எனவேதான் இந்தி பட வாய்ப்பை ஏற்கவில்லை. இப்போதுள்ள சூழலில் புதிய படங்களை ஏற்க வாய்ப்பில்லை என்றார். த்ரிஷா மறுத்த வேடத்தில் தற்போது பிராச்சி தேசாய் நடிக்கிறார். கால்ஷீட் பிரச்னைதான் காரணம் என த்ரிஷா கூறினாலும், மார்க்கெட் இழந்த சீனியர் நடிகரான சஞ்சய்தத் நடிப்பதாலேயே அவர் படத்தை ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.


 

Post a Comment