கல்யாண் ஜூவல்லர்ஸ் 'புரட்சிப் போராட்ட' தூதரானார் அமிதாப்!

|

Amitabh Is Kalyan Jwellers Brand Ambassador

புரட்சி, போராட்டம் என கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடை விளம்பரத்தில் தனி ஆளாக முழங்கிக் கொண்டிருந்த பிரபுவுக்கு, பெரிய துணை கிடைத்திருக்கிறது. அவர் அமிதாப்!

ஆம்... தங்களின் விளம்பரத் தூதராக அமிதாப் பச்சனை ஒப்பந்தம் செய்துள்ளனர் இந்த நகைக்கடை நிறுவனத்தினர்.

இந்த நிதியாண்டுக்குள் இந்தியா முழுவதும் 65 புதிய கிளைகளை நிறுவ முடிவு செய்துள்ளதால், கடையை வட இந்தியாவில் பிரபலப்படுத்த இந்த முடிவாம்.

இப்போது தென் மாநிலங்களில் மட்டும் 35 கிளை நிறுவனங்களை நிறுவியுள்ளது இந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கிளையை உருவாக்குவதற்கு 2 முதல் 3 கோடி வரை செலவிடுகிறது.

மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்த கிளைகளை உருவாக்கப் போகிறார்களாம். தலைநகர் டெல்லி மற்றும் நாட்டின் கிழக்கு நகரமான கொல்கத்தாவிலும் பெரிய கிளைகள் திறக்கும் திட்டம் உள்ளதாம்.

 

Post a Comment