ரூ.100 கோடி வசூல் சாதனை படங்கள்: பெருமை அடிக்கும் அசின்

|

Asin Takes Dig At Fellow Members 100 Crore Club   

மும்பை: ரூ.100 கோடி வசூல் செய்த படங்கள் என்ற கணக்கு, நான் ஆமீர் கானுடன் சேர்ந்து நடித்த கஜினி படத்தில் இருந்து தான் துவங்கியது என்று அசின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அசின் கூறுகையில், நான் ஆமீர் கானுடன் சேர்ந்து நடித்த கஜினி(2008) படத்தில் இருந்து தான் இந்த ரூ.100 கோடி வசூல் கிளப் துவங்கப்பட்டது. எனது முதல் இந்தி படமே ரூ.100 கோடி வசூல் செய்தது. ஹீரோயின்களைப் பொறுத்த வரையில் ரூ.100 கோடி வசூல் கிளப்பை துவக்கியவளே நான் தான் என்று உணர்கிறேன். ஆனால் அதை வைத்து நான் ஒரு போதும் விளம்பரம் தேடியதில்லை. நான் ஒரு சில இந்தி படங்களில் நடித்திருந்தாலும் அவை அனைத்தும் வெற்றிப் படங்களாகும்.

எனக்கு தற்பெருமை அடிக்கப் பிடிக்காது. அது என் குணமே இல்லை. பணம் எவ்வளவு வருகிறது என்பதை பார்ப்பது எனது வேலையில்லை. அந்த விஷயத்தை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம் விட்டுவிட்டு நடிப்பைப் பற்றி மட்டுமே நடிகர், நடிகைகள் கவலைப்பட வேண்டும். ரெடி, போல் பச்சன், ஹவுஸ்புல் 2 ஆகிய காமெடி படங்கள் அடுத்தடுத்து கிடைத்தது தற்செயலானது. காமெடி தவிர பிற படங்களிலும் நடிக்க ஆசையாக உள்ளது என்றார்.

அசினை தவிர்த்து ரூ.100 வசூல் செய்த படங்களில் நடித்த பிற பாலிவுட் நாயகிகள் கரீனா கபூர் (3 இடியட்ஸ், 2009), பிரியங்கா சோப்ரா (டான் 2, 2011), சோனாக்ஷி சின்ஹா (தபாங், 2010) மற்றும் கத்ரீனா கைப் (ஏக் தா டைகர்) ஆவர்.

 

Post a Comment