மீண்டும் நகை திருட்டு சர்ச்சையில் சிக்கினார் ஹாலிவுட் நடிகை லிண்ட்சே லோஹன்

|

Lindsay Lohan Questioned Aftter Jewellery Burgled

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் ஹாலிவுட் ஹில்ஸ் விடுதியில் விலை உயர்ந்த நகைகள் திருடு போனது தொடர்பாக நகை திருட்டு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஹாலிவுட் நடிகை லிண்ட்சேயிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் விலை உயர்ந்த நெக்லஸ் ஒன்றை வாங்கி கழுத்தில் மாட்டிக்கொண்டு பணம் கொடுக்காமல் எஸ்கேப்பான வழக்கில் லிண்ட்சேவுக்கு 4 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடிபோதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தி சர்ச்சையில் சிக்கியிருந்தார். இப்பொழுது மீண்டும் நகை காணாமல் போன சம்பவத்தில் விசாரிக்கப்பட்டுள்ளார்.

ஹாலிவுட் ஹில்ஸ் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு பார்ட்டி நடந்துள்ளது. இந்த பார்ட்டி முடிந்த பிறகு லிண்ட்சேயும் மற்றவர்களும் இரவு அங்கேயே தங்கியிருக்கின்றனர். ஆனால் காலையில் ஹாலிவுட் ஹில்ஸ் விடுதியின் உரிமையாளர் போலீசில் அலறியடித்துக் கொண்டு புகார் செய்தார். தமது விடுதியில் இருந்த விலை உயர்ந்த நகைகளைக் காணவில்லை என்று அந்த புகாரில் கூறியிருந்தார்.

இதையடுத்து அங்கு வந்த போலீசார் நகை திருட்டு பற்றி அனைவரிடமும் விசாரித்தனர். நகை திருடி ஜெயிலுக்குப் போன லிண்ட்சேயிடமும் :"தீவிர" விசாரணை நடத்திவிட்டுப் போயிருக்கின்றனர்.

அம்மணி இம்முறையும் ஆட்டையை போட்டிருப்பாரோ? என்றுதான் அமெரிக்க போலீஸ் சந்தேகிக்கிறதோ?

 

Post a Comment