விஜயலட்சுமிக்கு சீரியலிலும் சோகம்தான்!

|

Actress Vijayalakshmi Plays Chelleme

சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்து நிகழ்ச்சித் தொகுப்பாளராக களம் இறங்கிய நடிகை விஜயலட்சுமி பின்னர் சீரியலில் முகம் காட்டினார். இயக்குநருடன் ஏற்பட்ட பிரச்சினையால் ஒதுங்கிய விஜயலட்சுமி இப்பொழுது செல்லமே சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சொந்த வாழ்க்கைதான் சோகமாகிப்போனது என்றால் அவருக்கு கிடைக்கும் கதாபாத்திரங்களும் சோகமயமானதாகவே, அமைந்திருக்கிறது. கேரளாவில் செட்டில் ஆனா விஜயலட்சுமி அங்கு வரும் செல்லம்மாவின் கணவர் வடமலையை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார். இனி ராதிகாவுடன் மல்லுக்கு நிற்கும் பாத்திரமாம்.

இயக்குநர் சீமானுடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு பின்னர் மீடியாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருந்தவர் இப்பொழுதுதான் அதிலிருந்து மீண்டு சீரியலில் நடிக்க வந்துள்ளார். ஆனால் கிடைத்துள்ள கதாபாத்திரமும் இப்படி அமைந்து விட்டதே என்று சின்னத்திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கின்றனர்.

 

Post a Comment